பசுமை இந்தியா கூர்மையான, நடுநிலையான அணுகுமுறை மற்றும் டிஜிட்டல் பரிணாம படைப்பாற்றலுடன், நம்பகமான மற்றும் உண்மையான செய்திகளை உலக தமிழர்களுக்கு கொண்டுசெல்வதை இலக்காக கொண்டுள்ளது. பசுமை இந்தியா கூர்மையான, நடுநிலையான அணுகுமுறை மற்றும் டிஜிட்டல் பரிணாம படைப்பாற்றலுடன், நம்பகமான மற்றும் உண்மையான செய்திகளை உலக தமிழர்களுக்கு கொண்டுசெல்வதை இலக்காக கொண்டுள்ளது. பசுமை இந்தியா மாத இதழ் 2009 ஆம் ஆண்டு முதல் பத்து வருடங்களுக்கும் மேலாக திரு.டாக்டர்.சி.ஆர்.தமிழ்வாணன் அவர்களால் வெளியிடப்பட்டு வருகின்றது. மிக குறுகிய காலகட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பார்வையாளர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது. பசுமை இந்தியா தன்னை ஸ்தாபித்து அடையாளம் செய்வதற்கு, டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியை கொண்டு மூலோபாயம், கண்டுபிடிப்பு மற்றும் தழுவல் முதலியவற்றின் சரியான கலவை கொண்டு செயல்படுகின்றது.
எமது பாரம்பரிய தொடர்புகள் மூலம் வேளாண்மை, இலக்கியம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் தொடர்புடைய செய்திகள் வழங்குவதற்கு பசுமை இந்தியா கவனம் செலுத்தும், எங்கள் கட்டுரைகள் மற்றும் பத்திரிகையும் அதையே பிரதிபலிக்கும். ஒரு தலைமை நிலையில் இருக்க, நாங்கள் தீவிரமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொடர்பில் எம்மை ஈடுபடுத்தி போட்டியில் எப்போதும் தங்கி இருப்போம்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 38 மாவட்டங்களிலும் 3000-ற்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு பசுமை இந்தியா மாத இதழ் செல்கிறது. பிற மாநிலங்களிலுள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தமிழ் சங்கங்கள் / அமைப்புகள் ஆகியவற்றிற்கும் பிரதிகள் அனுப்பப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள நீதிபதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உருப்பினர்கள் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத்துறை அதிகாரிகள், சினிமாத்துறை பிரபலங்கள் மற்றும் தொழில் துறை முன்னோடிகள் ஆகியோர்களுக்கு பிரதிகள் அனுப்பப்படுகின்றது.