10/01/2024
ஓம் நமசிவாய . 🌺🌺🌺 🙏🙏 ஓம் நம சிவாய. 🌺🌺🌺 🙏🙏 ஓம் நமசிவாய . 🌺🌺🌺 🙏🙏
சிவபெருமானே கூடவே நீ இரு அது போதும்
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க இதை முழு மூச்சுடன் கடைப்பிடித்தால் சிவனார் உங்கள் கூடவே இருப்பார்
சைவத்தின் ஆக சிறந்த இலக்கியமான பெரியபுராணமே சொல்கிறது. செய்யும் செயலில் பூரணமும் . சிவன் மீதும் சிவனடியார் மீதும் மதிப்பும் பண்பும். பிறரிடம் அன்பு செய்தலும். மனமார செய்வீர்கள் என்றால் நீங்கள் சிவனை தேட வேண்டாம் உங்கள் உள்ளகையில் வந்தமர்வான் சிவன்.
சிவனை வழிபட்டால் சோதனை துயரம் மட்டுமே வருமா?
சிவனின் கருணையை பெறுவது எப்படி?
தினம் ஒருத்தருக்குநீருடன் உணவளியுங்கள்
தினம் ஒருத்தருக்காவது லிப்ட் கொடுங்கள்
தெருவிலுள்ள ஏழை குழந்தைக்கு 20 ரூபாய்க்கு 1 ஜட்டி அல்லது 50 ரூபாய்க்கு ஒரு பனியன் மாதம் ஒருமுறை எடுத்து கொடுங்கள் .பிளாட்பாரக்கடையாயினும் பரவாயில்லை
தெருப்பிச்சைக்காரர்களுக்கு 100 ML தேங்காயெண்ணை வாங்கி கொடுங்கள்
50 மாஸ்க் 65 ரூபாய்க்கு வாங்கி ஆளுக்கு 5 கொடுங்கள்
வீட்டிலுள்ள பழைய துணிகளை துவைத்து தோய்த்து மடித்து பஸ் ஸ்டாண்ட் வாசலில் வையுங்கள்
10 ரூபாய் மெரி பிஸ்கட் வாங்கி (ஒருசிகரெட் விலை தான் சார் )மூன்று நாய்களுக்கு போடுங்கள்
காக்கா குருவிக்கு தண்ணீர் வையுங்கள்
போஸ்ட்மேன் ,கூரியர் பாய் , ஸ்விக்கி ,ஸோமாட்டா பசங்களுக்கு நன்றி சொல்லி தண்ணி கொடுங்கள்
சாக்கடை எல்லாமே ஏறி இறங்கிய உங்கள் வண்டி டயரை தொட்டு ஏர் பிடிக்கும் பையனுக்கு 10 ரூபாய் இல்லேன்னா 5 ரூபாய் கொடுங்கள்
இதுலே எதுவுமே செய்யமுடியலேன்னா 1 லிட்டர் பாலும் ,சீப்பு பழமும் வாங்கி கோவிலில் சென்று சாமிக்கு அபிஷேகம் செய்யுங்கள்
கண்டிப்பாக சிவனருள் கிடைக்கும் .
நீங்கல்லாம் நல்லது ஏதாச்சும் பண்றிங்களானு அவர் டெஸ்ட் வைக்குறார்னு நினைச்சுக்கோங்க
வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!!!11 மாதம் அன்று புதுப்பிக்கப்பட்டது
சிவனை வழிபட்டால் சோதனை துயரம் மட்டுமே வருமா?
இரண்டு உதாரணங்கள் அளிக்கிறேன். தங்களுக்கு எது பிடித்தமானதோ அதை எடுத்துக் கொள்ளலாம்.
1. ஒருவரிடம் அவரின் பாட்டனார் காலத்திற்கும் முந்தைய தங்கக் காசு ஒன்று இருந்தது. அது தங்க காசு என்றே தெரியாத அளவிற்கு அழுக்கு ஏறி இருந்தது. அதன் விலைமதிப்புத் தெரியாமல் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார் அந்த உரிமையாளர். இதைக் கண்ட பொற்கொல்லர் ஒருவர் அந்த காசை அவரிடமிருந்து வாங்கி, தீயிலிட்டு உருக்கினார். அப்பொழுது அந்த உரிமையாளர், "ஐயோ! எனது காசு தீயில் எரிகிறதே" என்றாராம். சற்று நேரம் பொறுத்து, புடம்போட்ட தங்கம் ஜொலிக்கும் பொழுது அந்த உரிமையாளர் அதை தீயிலிட்ட காரணத்தை புரிந்து கொண்டாராம்.
தங்கக்காசு - ஆன்மா
தீ - அதிலுள்ள மாசை அகற்றும் பொருட்டு இறைவன் நமக்களிக்கும் சில நிகழ்வுகள்
பொற்கொல்லர் - சிவபெருமான்
2. ஒருவன் விஷத்தை பருகிவிட்டான். அவனை மருத்துவரிடம் அழைத்து சென்றனர். உடனே மருத்துவர் வேறொரு மருந்தை புகட்ட, விஷத்தை பருகியவன் வாந்தி எடுக்கத் தொடங்கினான். இதைக்கண்ட அவன் 'விஷத்தை அகற்ற மருந்து கேட்டால், இப்படி வாந்தி எடுக்கும் மருந்தைக் கொடுத்து எனது துன்பத்தை அதிகரிக்கிறீர்களே!' என்று கூறினானாம். முடிவில் விஷம் வெளியேறிய பின்னர், அதற்கான காரணத்தை புரிந்து கொண்டானாம்.
விஷம் - நமது வினைப்பயன்கள்
வாந்தி/அதை உருவாக்கும் மருந்து - இறைவன் நமக்களிக்கும் சில நிகழ்வுகள்
வைத்தியர் - சிவபெருமான் என்பதை சொல்லவும் வேண்டுமா?
சிவனை (எந்த கடவுளையும்) வழிபடும் முன்னரும் நமக்கு துன்பங்கள் இருந்திருக்கும். வழிபட்ட பின்னரும் கர்மா வினைகளால் அவை தொடரக்கூடும். ஆனால், உண்மையான பக்தி, மன அமைதியையும், துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும், முடிவில் மாறா இன்பத்தையும் அளிக்கும்.
நமசிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
♥ சிவபெருமானின் பலம் வாய்ந்த ருத்ர மந்திரம் ♥
♥ தனக்கு ஆயுள் 8 வயது என அறிந்த 7 வயது சிறுவன் சிவபெருமானின் பலம் வாய்ந்த ருத்ர மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து, சிவபெருமானின் வரம் பெற்று, நந்தி தேவன் ஆனார்.
♥ சிவபெருமானின் ருத்ர மந்திரம்
♥ நமஸ்தே (அ)ஸ்து பகவன் விச்வேஸ்வராய,
மஹாதேவாய, த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய,
த்ரிகாக்னி காலாய, காலாக்னீ ருத்ராய,
நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜாய, ஸர்வேஸ்வராய,
ஸதா சிவாய, ஸ்ரீமன் மஹாதேவாய நம.
ஓம் நமோ பகவதே ருத்ராய
சிங் சிங் சிவாய ஓம்
♥ தீயவற்றை அழிக்க ரௌத்திரம் கொண்ட ருத்ரமூர்த்தியாகிய சிவ பெருமானை போற்றும் ருத்ர மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வரலாம். திங்கட்கிழமைகள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவ வழிபாட்டிற்குரிய தினங்களில், சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது இம்மந்திரத்தை 27 முறை துதித்து ஜெபிப்பதால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும். கடுமையான நோய்கள் சிறிது சிறிதாக குணமாகும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.
♥ ருத்ர மந்திரத்துடன்
♥ சிங் சிங் சிவாய ஓம் எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
♥ ஓம் க்கிறிம் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
♥ லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
♥ சவ்வும் நமசிவாயநம என ஜபித்தால் அரச போகம் கிட்டும். மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
♥ எல்லா உலகங்களுக்கும் அதிபதியாக இருக்கும் விஸ்வேஸ்வரனாகிய சிவ பெருமானுக்கு வந்தனம் செய்கிறோம். முக்கண்களை கொண்டவரும், திரிபுரம் எனப்படும் மூன்று லோகங்களுக்கும் தலைவனாக இருக்கும் மகாதேவரே உங்களை வணங்குகிறோம். அனைத்திற்கும் முடிவை வழங்கும் காலமாக இருப்பவரும், உலகை காக்க ஆலகால விஷத்தை பருகிய நீலகண்டர் ஆகியவரும், கொடியதை அழிகின்ற ருத்ர நடமாடி ருத்ரராகவும், சர்வேஸ்வரராகவும் இருக்கும் சிவனை வணங்குகிறேன் என்பதே இதன் பொதுவான பொருளாகும்.