12/08/2025
*ஈரோடு மாவட்ட அரசு விழாவில் பங்கேற்ற மமகவினர்...*
இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மரியாதைக்குரிய இ.வி.கே.எஸ். இளங்கோவன். இவர் ஒரு முன்னாள் மத்திய அமைச்சராகவும், தமிழக சட்டமன்றத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டவர். தனது நீண்ட அரசியல் பயணத்திலும், பொதுப்பணிகளிலும் சிறப்பாக பணி செய்ததற்காக அவருடைய சேவையை நினைவுகூரும் விதமாக ஒரு சிறப்பு முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு மாநகராட்சியில் அமைந்துள்ள "மண்டபம் வீதி" (Mandapam Street) தற்போது "இ.வி.கே.எஸ். இளங்கோவன் சாலை" (EVKS Elangovan Road) என்று மறுபெயரிடப்பட்டுள்ளது
இ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் அரசியல், சமூக சேவைகளுக்கான பாராட்டாகவும், வருங்கால சந்ததிகள் அவரின் பணியை நினைவுகூரும் விதமாகவும் இந்த வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இது அவரது பணிக்காக கட்சி மட்டுமல்லாது, சமூகமும் கொடுக்கும் மரியாதையாக பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம்
ஏற்பாட்டில்,
12.08.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 09 : 30 மணியளவில் நடைபெற்ற
இந்நிகழ்வில் கலந்து கொண்ட *தமிழ் நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்கள்* தலைமையேற்று
இ.வி.கே.எஸ் அவர்களின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி,அவரின் பெயரிட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்
*V.C.சந்திரகுமார்* மாநகராட்சி மேயர் *திருமதி. நாகரத்தினம்* மாநகராட்சி ஆணையர்,
RDO, தாசில்தார் மற்றும்
*மனிதநேய மக்கள் கட்சி* சார்பில் மமக மாவட்ட தலைவர் *A.சித்தீக்* அவர்கள் தலைமையில்,
தமுமுக மாவட்ட செயலாளர் *S.முஹம்மது லரீப்*,
மாவட்ட பொருளாளர் *M.சாகுல் அமீது* தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள்
ஆட்டோ P.சாகுல் அமீது,
R.சிக்கந்தர் மற்றும்
இ.வி.கே.எஸ். இளங்கோவனின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள்,
திமுக,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்,
தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் ,சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்
பலரும் கலந்து கொண்டனர்.
தகவல் வெளியீடு :'
*TMMK IT WING*
*ERODE EAST DIST*