நம்ம ஈரோடு (Our Erode)

நம்ம ஈரோடு (Our Erode) A page to experience Erode in all aspects...!

13/09/2025

🎥 திரைபடம் வழியே ஈரோடு ரோட்டின் நினைவுகள்… 🛣️ 🌿 90’s ஈரோடு – சினிமாவுல பாத்து ரசிக்கலாம்!

பயணிகள் கனிவான கவனத்திற்கு 🚍✨கோபி ↔ திருச்செந்தூர் கோவில்(TNSTC அரசு பேருந்து சேவை)⏰ கோபியில் இருந்து புறப்படும் நேரம்: ...
12/09/2025

பயணிகள் கனிவான கவனத்திற்கு 🚍✨

கோபி ↔ திருச்செந்தூர் கோவில்
(TNSTC அரசு பேருந்து சேவை)

⏰ கோபியில் இருந்து புறப்படும் நேரம்:
• காலை 8:00 மணி
• மாலை 8:00 மணி

⏰ திருச்செந்தூரில் இருந்து புறப்படும் நேரம்:
• காலை 7:00 மணி
• மாலை 7:00 மணி

📍 பேருந்து செல்லும் வழி:
கோபி → குன்னத்தூர் → பெருமாநல்லூர் → திருப்பூர் புதிய பேருந்து நிலையம் → திண்டுக்கல் புறவழி சாலை → மதுரை மாட்டுத்தாவணி → தூத்துக்குடி → திருச்செந்தூர் கோவில் வாசல்

🕒 பயண நேரம்: 9 மணி 30 நிமிடம்
💰 கட்டணம்: ₹328 (ஒருவருக்கு)

👉 முன்பதிவு வசதி: TNSTC App மூலம் முன்பதிவு செய்யலாம்.
🚦 பேருந்து வேகக் கட்டுப்பாடு + பாதுகாப்பான பயணம்
💚 அரசு பேருந்து – எப்போதுமே நம்பகமானது!

🙏 நன்றி.

கோட்டை முனியப்பன் ஆலயம் 📍பெருந்துறை மாவிளக்கு ஏற்றி முனியப்பனை வழிபாடு செய்பவார்கள். அதே போல் கரும்பு படைத்து முனியப்பனை...
12/09/2025

கோட்டை முனியப்பன் ஆலயம்
📍பெருந்துறை

மாவிளக்கு ஏற்றி முனியப்பனை வழிபாடு செய்பவார்கள். அதே போல் கரும்பு படைத்து முனியப்பனை வணங்கினால் எதிரிகள் தொல்லை நீக்கும் என்பது ஐதீகம். வாகனம் வாங்குபவர்கள் கோட்டை முனியப்பன் முன் நிறுத்தி தேங்காய் பழம் உடைத்து வழிபாட்டால் கண் திஷ்டி நீக்கும் என்பது ஐதீகம்.

என்ன தான் விஞ்ஞானத்தை புகுத்தினாலும் அபிராமி 70mmல மன்னன், திருடா திருடா, எஜமான், உழைப்பாளி,தேவிஅபிராமி (பொண்ணுமணி)(கிழக...
11/09/2025

என்ன தான் விஞ்ஞானத்தை புகுத்தினாலும் அபிராமி 70mmல மன்னன், திருடா திருடா, எஜமான், உழைப்பாளி,தேவிஅபிராமி (பொண்ணுமணி)(கிழக்குசீமையிலே )பார்த்தது போல வருமா நண்பர்களே!

ஈரோட்டில்Fresh இறால் & உயிருடன் விரால் கிடைக்கும்Call us @ 9790099007 & 9677716358சுகாதாரமான முறையில் சுத்தம் செய்துFree...
11/09/2025

ஈரோட்டில்
Fresh இறால் & உயிருடன் விரால் கிடைக்கும்
Call us @ 9790099007 & 9677716358

சுகாதாரமான முறையில் சுத்தம் செய்து
Free Home Delivery கொடுக்கப்படும்

ஞாயிற்றுக்கிழமை டெலிவரிக்கு - முன்பதிவு அவசியம்

🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐
Farm To Home / Fresh Prawn / Hygienic Fresh Fish / Shrimp
வாரத்தின் அனைத்து நாட்களும்
Viral & Tilapia மீன்கள் உயிருடன் கிடைக்கும்

10/09/2025

பவானியில் ஆன்மிகமும் ஆனந்தமும் நிறைந்த ஆவணி திருவிழா

📍 பவானி அணைக்கட்டு உத்தண்டராயன் கோவில்

10/09/2025

🎉📚 Vijayadashami Admissions OPEN! 📚🎉
Give your child the best start to their learning journey at our school🌟
AET Matric Higher Secondary School
📞 Contact: 95000 09856
✅ 20:1 Student-Teacher Ratio
✅ LEAD Classroom with LED TVs
✅ Classical & Western Dance
✅ Indoor & Outdoor Games
🚌 FREE Bus Facility (PreKG – 12th)
🎁 NO Tuition Fees for PreKG Vijayadashami Admissions

10/09/2025

மேவானி என்பது ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். விவசாயம் இங்கு முக்கியத் தொழிலாகும். இந்த கிராமத்திலும் அதைச் சுற்றியும் பல்வேறு படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
Mevani | Gobichettipalayam | மேவானி | கோபிசெட்டிப்பாளையம் | Erode | ஈரோடு | kavindapadi | கவிந்தபாடி | Perundalaiyur | பெருந்தலையூர் | bhavani | பவானி

🚆✨ இந்திய ரயில் பெட்டிகளின் ரகசியங்கள் – உங்களுக்கு தெரியுமா? ✨🚆நம்ம வாழ்க்கையில் ஒருமுறையாவது ரயிலில் பயணம் பண்ணாதவர்கள...
09/09/2025

🚆✨ இந்திய ரயில் பெட்டிகளின் ரகசியங்கள் – உங்களுக்கு தெரியுமா? ✨🚆

நம்ம வாழ்க்கையில் ஒருமுறையாவது ரயிலில் பயணம் பண்ணாதவர்கள் மிகக் குறைவு தான். ஆனா, ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனி அடையாளங்கள், பயன்பாடுகள் இருக்கிறது தெரியுமா? 🤔

இங்கே உங்களுக்கு ஒரு விரிவான கையேடு:

---

1️⃣ SLR Coach (Seating-cum-Luggage Rake)

🔹 எப்போதும் ரயிலின் முதல் & கடைசி பெட்டி.
🔹 Guard (காப்பாளர்) இருக்கும் இடம்.
🔹 பாதி பகுதி → Luggage/Parcel,
மற்றொரு பகுதி → General seating (Ladies, Divyang).
🔸 வெளியில் மஞ்சள்-கருப்பு சாய்வு கோடுகள் இருக்கும்.

---

2️⃣ General Coach (UR/GEN)

🔹 Reservation தேவையில்லை.
🔹 நிறம் → பச்சை அல்லது நீலம்.
🔹 ஜன்னல் → கம்பி மட்டும் (கண்ணாடி இல்லை).
🔸 மிக அதிகமாக crowd இருக்கும் coach இது தான்.

---

3️⃣ Sleeper Class (SL)

🔹 Reservation அவசியம்.
🔹 Lower, Middle, Upper berth (3 படுக்கைகள்).
🔹 நிறம் → நீலம்.
🔸 பொதுவாக இந்தியாவில் அதிகம் பயன்படும் coach.

---

4️⃣ AC 3-Tier (3A)

🔹 Sleeper போல, ஆனா குளிர்சாதன வசதி (AC).
🔹 3 படுக்கைகள் (L, M, U).
🔹 கண்ணாடி ஜன்னல் + பிளைண்ட்ஸ்.

---

5️⃣ AC 2-Tier (2A)

🔹 2 படுக்கைகள் மட்டும் (Lower & Upper).
🔹 Privacy curtain இருக்கும்.
🔹 வசதி அதிகம், செலவும் அதிகம்.

---

6️⃣ AC First Class (1A)

🔹 இந்திய ரயில்களில் மிகச் சிறந்த வசதி.
🔹 தனிப்பட்ட cabins, door lock facility.
🔹 அதிக privacy + அதிக ticket rate.

---

7️⃣ Chair Car (CC / 2S)

🔹 விமான இருக்கை மாதிரி Chairs.
🔹 CC → AC வசதி,
2S → Non-AC வசதி.
🔹 Short journey க்கு அதிகம் பயன்படுத்துவார்கள்.

---

8️⃣ Pantry Car (PC)

🔹 ஜன்னல் இல்லை, kitchen மட்டும்.
🔹 உணவு சமைத்து, பயணிகளுக்கு வழங்கப்படும்.

---

9️⃣ Parcel Van

🔹 பெரிய கதவுகள் மட்டும் இருக்கும்.
🔹 பயணிகள் இல்லை – சுமை மட்டும் எடுத்துச் செல்லப்படும்.

---

🔟 Engine (Loco)

🔹 முழு ரயிலின் சக்தி.
🔹 வகைகள்:

WAP → Passenger train (மின்சாரம்)

WDP → Passenger train (டீசல்)

WAG → Goods train

---

💡 அடுத்த முறை நீங்கள் ரயிலில் ஏறும்போது, பெட்டியை பார்த்தவுடனே அது எந்த வகை என்பதை அடையாளம் காணலாம்!

📸 credit: Respective owner ✅

📜 நினைவுகளில் மெயில் பஸ்! 🚌சேலம் - மேட்டூர் - அந்தியூர்அந்தக் காலத்து அழகிய நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு பயணம்! 🕰️ 1960-...
08/09/2025

📜 நினைவுகளில் மெயில் பஸ்! 🚌

சேலம் - மேட்டூர் - அந்தியூர்

அந்தக் காலத்து அழகிய நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு பயணம்! 🕰️ 1960-62 காலகட்டத்தில் மேட்டூரிலிருந்து சேலம் செல்ல இந்த மெயில் பஸ் தான் பிரதானமாக இருந்தது. காலை 8 மணிக்கு சேலம் ஜங்ஷனில் இருந்து தபால்களை ஏற்றிக்கொண்டு மேட்டூர் வந்து, பிறகு அந்தியூர் சென்று மீண்டும் மேட்டூர் திரும்பும். மாலை 6 மணிக்கு மேட்டூரில் இருந்து தபால்களை ஏற்றிக்கொண்டு சேலம் ஜங்ஷனுக்கு 7:45 மணிக்கு வந்து, பழைய சேலம் பஸ் நிலையத்தில் நிற்கும். 🚍

🎫 டிக்கெட் கட்டணம் வெறும் ஒன்னேகால் ரூபாய் (1.25)! கண்டக்டர் ஆறுமுகம் எப்போதும் சிரித்த முகத்துடன், “டேய், அரை டிக்கெட்!” என என்னை கிண்டலடிப்பார். 😄 டிரைவர், சேலம் மாமங்கத்தில் குடியிருந்த ஒரு இஸ்லாமிய பாய், உரத்த குரலில் பேசுவார். சிறு வயதில் அரை டிக்கெட்டில் சேலம் சென்ற நினைவுகள் இன்னும் மனதில் நிழலாடுகின்றன. 🧒

அப்போது என் தந்தையார் சேலம் சூரமங்கலம் தபால் நிலையத்தில் Asst. P.M-ஆக பணிபுரிந்தார். இந்த பஸ்ஸின் பயணம் மறக்க முடியாத ஒரு அனுபவம்! ஆனால், பதிவில் உள்ள இந்த பழமையான பஸ்ஸில் பயணிக்கவில்லை. இருந்தாலும், இந்த நினைவுகள் என்றும் மறையாதவை! 💭

📸: ©️ Respective owner

#அந்தியூர் #நினைவுகள் #மெயில்பஸ் #மேட்டூர் #சேலம் #பழையநாட்கள் #நாஸ்டால்ஜியா

08/09/2025

ஸ்ரீ சஞ்சீவராய பெருமாள் திருக்கோயில் கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள இந்தச் சிறப்புமிக்க திருக்கோயில், வரப்பள்ளி பெருமுகை கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் குறியீடு 638505 ஆகும்.

🚩 கார் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், அழகான ஆடைகள் அணிய வேண்டும் என்பதெல்லாம் இவர்களின் ஆசையோ நோக்கமோ அல்ல…👉 இவர்கள...
08/09/2025

🚩 கார் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், அழகான ஆடைகள் அணிய வேண்டும் என்பதெல்லாம் இவர்களின் ஆசையோ நோக்கமோ அல்ல…
👉 இவர்களுக்கு தேவை மூன்று வேளை உணவு மட்டுமே! அதற்காகத்தான் இவர்களின் பிழைப்பும் உழைப்பும்.

இவர்கள் பிச்சை எடுக்கவில்லை. 🙅‍♂️
எங்கள் மூதாதையர்கள் செய்த அதே தொழிலை இன்று நம்பிக்கையுடன் செய்து வருகின்றனர். 🎪

இப்படிப் பட்ட சர்க்கஸ் 🎭 உங்கள் ஊரில் வந்தால் கண்டிப்பாக போய் பாருங்கள்.
நீங்கள் கொடுக்கும் ₹50 தான் அவர்களின் ஒருவேளை உணவிற்கு உதவியாக இருக்கும். 🙏

அழிந்து கொண்டிருக்கும் கலைகளில், விளிம்பில் நிற்கும் ஒரு அரிய கலைதான் இந்த சர்க்கஸ் கலை.
இப்போது எங்கள் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் முகாமிட்டுள்ளனர்.

நாங்களும் இன்று கண்டு மகிழ்ந்தோம்… அந்த பிஞ்சு குழந்தைகளின் சாகசம் 👧🧒 நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கோடீஸ்வரர்களான நடிகர்களின் படத்தை பார்க்க ஆயிரக்கணக்கில் செலவிடும் நாம்,
இப்படிப் பட்ட தெருக்கூத்து மற்றும் சர்க்கஸ் கலைஞர்களுக்கும் ஆதரவு தருவோம்.
அவர்களும் வாழ வேண்டும் அல்லவா? ❤️

📸 post credit:

Address

11/2, LS Building, Annamalai Layout, Mettur Road
Erode
638011

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஈரோடு (Our Erode) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நம்ம ஈரோடு (Our Erode):

Share