Google of Salem District

Google of Salem District Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Google of Salem District, News & Media Website, meenavar Street, Gangavalli.

இன்னைக்கு ரெண்டாவது நாள்.இனிய புத்தகங்களுடன் வரவேற்கிறோம் !
05/05/2025

இன்னைக்கு ரெண்டாவது நாள்.இனிய புத்தகங்களுடன் வரவேற்கிறோம் !

https://m.facebook.com/story.php?story_fbid=121698924237101&id=100091909817601&mibextid=Nif5oz
30/04/2023

https://m.facebook.com/story.php?story_fbid=121698924237101&id=100091909817601&mibextid=Nif5oz

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2023 ஞாயிற்றுகிழமை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று..தங்கள் கிராமத்தின் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றுவோம்...

28/04/2023
28/04/2023

*அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலைமறியல்*

சேலம்
சேலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக்கி ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை முதல் மாநில முழுவதும் அங்கனவாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட தலைவர் வசந்தகுமாரி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அங்கன்வாடி ஊழியர்களை இரவில் போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலந்து செல்லாமல் இரவு முழுவதும் சாலையிலேயே படுத்து தூங்கினர்.

சாலை மறியல்

அவர்களுடைய போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. அவர்கள் சாலையிலேயே அமர்ந்திருந்தனர். மேலும் வெயிலை சமாளிக்க கூடாரம் போன்று அமைக்கப்பட்டிருந்தது. திடீரென அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள், சாலை மறியலை கைவிட்டனர்.

இதற்கிடையில் சென்னையில் போராட்டக்காரர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வெறிச்சோடிய அங்கன்வாடி மையங்கள்

அங்கன்வாடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் நேற்று பெரும்பாலானோர் அங்கன்வாடி மையங்களுக்கு செல்லாமல் பணியை புறக்கணித்தனர்.

இதன் காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பவில்லை. இதன் காரணமாக அங்கன்வாடி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1 கோடியே 85 லட்சத்திற்கு பருத்தி ஏலம் விடப்பட்டது. சுற்றுவட்டார ப...
28/04/2023

ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1 கோடியே 85 லட்சத்திற்கு பருத்தி ஏலம் விடப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 7300 மூட்டைகளை கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் பிடி ரகம் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 7620 வரை டிடிஎச் ரகம் ரூ. 5900 முதல் ரூ. 7720 மொட்டு ரகம் ரூ. 4000 முதல் ரூ. 6100 வரை விலை போனது.

Address

Meenavar Street
Gangavalli
636105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Google of Salem District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share