Tamilan Da

Tamilan Da This Facebook Fan Page is only tamil entertainment news, self confidence,Hiq kavthai, Etc.....

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை ஜோஸ்னாதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா தங்கம் வெ...
09/02/2016

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை ஜோஸ்னா

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா தங்கம் வென்று அசத்தினார்.

வாழ்த்துக்கள் சகோதரி

மின்சாரம் இல்லாமல் இயங்கும் நீரேற்றும் கருவி கண்டுபிடிப்பு 8ஆம் வகுப்பு மாணவர் சாதனைநீரேற்றும் கருவியை இயக்கி காண்பிக்கு...
08/02/2016

மின்சாரம் இல்லாமல் இயங்கும் நீரேற்றும் கருவி கண்டுபிடிப்பு

8ஆம் வகுப்பு மாணவர் சாதனை

நீரேற்றும் கருவியை இயக்கி காண்பிக்கும் மாணவர் ச.சந்தோஷ். உள்படம்: ஆசிரியர் பி.ஹயாத் பாஷா
பெங்களூருவில் ஜனவரி 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக் கான பிரிவில், தமிழக மாணவர் ச.சந்தோஷ் வெற்றி பெற்றுள்ளார். மின்சாரம் இல்லாமல் இயங்கும் நீரேற்றும் கருவியை கண்டுபிடித்த தற்காக 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பெரம்பலூரில் ஜனவரி முதல் வாரத்தில் நடை பெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

தான் கண்டுபிடித்துள்ள, மின் சாரம் இல்லாமல் இயங்கும் நீரேற்றும் கருவி, உடலுக்கு ஒரு பயிற்சியாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார். இவரது தந்தை கே.சங்கர், கட்டுமானத் தொழிலாளி. தாய் ச.விஜயலட்சுமி. இவர் கள், திருவண்ணாமலை, திருக் கோவிலூர் சாலை முல்லா தெரு வில் ஒரு வீட்டில் 3-வது தளத்தில் வசித்து வருகின்றனர்.

தனது அறிவியல் கண்டுபிடிப்பு குறித்து மாணவர் ச.சந்தோஷ் கூறியதாவது:

நான் திருவண்ணாமலை எம்.ஏ.காதர் சேட் நினைவு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட என் தாய், தரைத்தளத்தில் இருந்து 3-வது மாடிக்கு தண்ணீர் குடத்தை தினமும் சுமந்து செல்வார்.

வழிகாட்டிய ஆசிரியர்

மாடியில் குடியிருப்பவர்களுக்கு தண்ணீர் சுமந்து செல்வதில் இருந்து விடிவுகாலம் இல்லையா? என்ற எண்ணமே புதிய படைப்புக்கு வழி வகுத்தது. இதுகுறித்து எங்கள் பள்ளி அறிவியல் ஆசிரியர் பி.ஹயாத் பாஷாவிடம் தெரிவித் தேன். ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகை யில், தொட்டியில் இருந்து எளிய முறையில் தண்ணீரை மேலே கொண்டு செல்ல புதிய கருவியை உருவாக்க வேண்டும் என்றேன். அவரும் என்னுடைய ஆர்வத்துக்கு ஊக்கமளித்து ஆலோசனை வழங் கினார். அத்துடன், மின்சாரம் இல் லாமல் நீரேற்றும் கருவியை வடி வமைப்பதற்கான வழிகளை விளக் கினார்.

அறிவியல் ஆசிரியரின் வழிகாட் டுதல்படி உபகரணங்களை வாங்கி வந்து வடிவமைத்தோம். பலகை, கம்பி, சைக்கிளுக்கு காற்ற டிக்கும் பம்ப்பில் இருக்கும் 2 சிலிண் டர் ஆகியவற்றை சேகரித்தோம். அவை அனைத்தும் பயன்படுத்தப் படாமல் தூக்கி வீசப்பட்ட பொருட் களாகும். அவற்றைக் கொண்டு புதிய கருவியை வடிவமைத்தோம்.

பின்னர், தண்ணீர் தொட்டிக்கு பதிலாக கீழே 2 வாளிகள் மற்றும் மேலே பிளாஸ்டிக் டப்பாவை வைத்தோம். சைக்கிள் பம்ப்புடன் வால்வ் மூலமாக வாளிகள் மற்றும் டப்பாவுடன் குழாயை இணைத்தோம். சைக்கிள் பம்ப்பை இயக்கும்போது அதன் உள்ளே இருக்கும் பிஸ்டன், தண்ணீரை இழுத்து மிக விரைவாக மேலே கொண்டு சென்றுவிடும்.

உடலுக்கு பயிற்சி

கை, கால்களால் இயக்கும் வகையில் நீரேற்றும் கருவி வடிவமைக்கப்பட்டது. கைகளுக்கு கயிறும், கால்களுக்கு பலகையும் பொருத்தப்பட்டது. அவ்வாறு இயக்குவதன் மூலம் உடலுக்கு பயிற்சியும் கிடைக்கிறது. இதற்கான செலவு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவு. இதன்மூலம் 50 அடி உயரத்துக்கு தண்ணீரை கொண்டு செல்லலாம். 1 நிமிடத்தில் 10 லிட்டர் தண்ணீர் சென்றுவிடும். 2 மாதத்தில் கருவியை வடிவமைத்து வெற்றி கண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அறிவியல் ஆசிரியர் பி.ஹயாத் பாஷா கூறும்போது, “மாணவர் சந் தோஷூக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் இருந்தது. அதன் எதிரொலிதான் மின்சாரம் இல்லாமல் நீரேற்றும் கருவி உருவாக்கப்பட்டது. பழைய பொருட்களை பயன்படுத்தியதால் செலவு குறைவு. புதிதாக தயாரிக்க ரூ.2 ஆயிரம் செலவாகும். தென்னிந் திய அளவில் வெற்றி பெற்ற மாணவர் ச.சந்தோஷ், தேசிய அளவிலும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது”
மாணவர் சந்தோஷ் திறமையான முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

இந்தக் கோயில் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களோ தெரியாது.ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிச...
29/01/2015

இந்தக் கோயில் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களோ தெரியாது.
ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிசியசு என்னும் நாட்டில்.
மொரிசியசில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறிய 1721ஆம் ஆண்டளவில் தமிழர்கள் பயிற்சி பெற்ற
தொழிலாளர்களாகவும் வெள்ளைகாரர்களின்
பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாகவும்
வந்துசேர்ந்தார்கள். ஏனைய இந்தியக்
குடியேற்றவாசிகள் போன்றே தமிழர்களும் புத்திசீவிகளாகவும் வணிகர்களாகவும் சிறந்து விளங்குகிறார்கள்.
இவர்கள் மத்தியில் கொடை வள்ளல்களுக்கும்
குறைவில்லை என்பதையும்
இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.
இயலாதவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தையும்
தட்டிக்கேட்கவும் இவர்கள் தயங்குவதில்லை.
இங்கு தமிழும் சைவமும்
தளைத்தோங்குவதை இவர்கள் பெருமையுடன்
இன்றும் கூறுகிறார்கள்.
கோயில் திருவிழாக்களில் காவடியும் தீமிதிப்பும் தமிழ்
நாட்டிலும் ஈழத்திலும் நடைபெறுவதுபொலவே இங்கும்
நடைபெறுகின்றன. முதலில் 1850 இல் Terre Rouge என்னுமிடத்தில் தமிழ் செல்வந்தர்களால் ஸ்ரீ
கிருஷ்ணமூர்த்தி துரோபதை அம்மன் கோயில்
நிர்மாணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லூயிஸ்
துறையில் ஸ்ரீ சொக்கலிங்க மீனாட்சி அம்மன்
கோயிலும் கிளெமென்சியாவில்
அருள்மிகு பாலதந்தை கோயிலும் Plaines des Roches
என்னும் நகரில் சிவ சுப்பிரமணியன் கோயிலும்
நிர்மாணிக்கப்பட்டன.
இக்கோயில் நிர்மாணிப்புப் பணிகளில்
காலத்துக்குக் காலம் வந்த தமிழக அரசாங்கங்கள்
எண்ணற்ற உதவிகளைக் கொடுத்துதவின என்பதையும்
இங்கு நான் நன்றியுடன் குறிப்பிட
விரும்புகிறேன்.
சமயமே தமிழர்களை இணைப்பதும்
ஒற்றுமைப்படுத்துவதுமான சக்தியென இவர்கள்
உறுதியாக நம்புகிறார்கள்.
எமது கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருக்கும் இந்த
உடன்பிறப்புகளின் வாழ்வில் சுகமும் செல்வமும்
சகோதரத்துவமும் வளர வாழ்த்துவோம்!

http://www.c4video.com/?p=262
02/08/2014

http://www.c4video.com/?p=262

Posted on Jul 31, 2014 at 6:41 am · by admin0Google Search: ReunionMore from my siteWomen’s protectionThe Seatbelt CrewAre You Just Staring At My Butt?fuel truck sharp u turn driver snake devours crocodile after 5 hour battle full video

http://kaninitamilan.in/news/8-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%...
23/07/2014

http://kaninitamilan.in/news/8-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-lkg-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/

8 இபுக் இணையதளங்கள் - LKG முதல் P.hd வரை இலவசமாக இபுக் டவுன்லோட் செய்ய ! மிகப்பிரபலமான இபுக் இணையதளம் அனைத்து விதமான புத்தகங்கள் , அனைத்து விதமான சாதனங்களுக்கும் பொருந்தக்குடியது

அழகியல்!இடம் : கோபி, ஈரோடு மாவட்டம்
28/05/2014

அழகியல்!

இடம் : கோபி, ஈரோடு மாவட்டம்

What is this?
14/05/2014

What is this?

16/04/2014

Welcome back Tamilan Da Page

இந்த விளையாட்டுகளை நீங்கள் விளையாடிய அனுபவம் உண்டா? இவற்றில் எந்த விளையாட்டு உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?
01/02/2014

இந்த விளையாட்டுகளை நீங்கள் விளையாடிய அனுபவம் உண்டா? இவற்றில் எந்த விளையாட்டு உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?

சோழர்:சோழ நாடு, சோழப் பேரரசு கி.மு. 300கள் – கி.பி.1279சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர...
10/11/2013

சோழர்:

சோழ நாடு, சோழப் பேரரசு கி.மு. 300கள் – கி.பி.1279


சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர்.[1] சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழனும், அவனது மகனான முதலாம் இராசேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
கி.பி.10-12-ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி.

நன்றி: wiki

Address

Gopichettipalaiyam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilan Da posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category