29/01/2023
💡 *என் மனதில் பட்டவை* 🌿
*ஆதியாகமம் 26:18 ல்* தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், *ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான* துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.
ஆபிரகாம் உயிரோடு இருக்கும் வரை அவன் தோண்டின துரவுகளை *ஒருவனாலும் மூடமுடியவில்லை.* இதனால் அவன் மரித்தப்பின் அவன் தோண்டின துரவுகளை பெலிஸ்தியர்கள் மூடிப்போட்டனர்.
ஆபிரகாம் என்றால் விசுவாசம். *நமக்கு விசுவாசம் இருக்கும்வரை பிசாசானவனால் நம்முடைய ஆசீர்வாதங்களை மூடிப்போடமுடியாது.*
இதை புதியஏற்பாட்டு வெளிச்சத்தில் சொன்னால்... நமக்குள் விசுவாசம் இருக்கும்வரை.. அப்போ விசுவாசம் குறையும் போது இல்லாதிருக்கும் போது பிசாசால் கிரியை செய்யமுடியுமா ?முடியாது.
*ஏனெனில் நமக்குள் விசுவாசத்தை துவங்கினவரே அதை முடிக்கிறவராய் இருக்கிறார்.*
எபிரெயர் 12:1
*நமது விசுவாசம் ஒழிந்து போகாதபடி நமக்காய் வேண்டுதல் செய்கிறவரும் அவரே.*
லூக்கா 22:32
*மங்கியெரிகிற திரியை அணையாமல் காக்கிறவர்* நமது விசுவாசத்தையும் அணையவிடமாட்டார். ஏசாயா 42:3
*பிசாசானவன்(பெலீஸ்தியர்கள்) நமது ஆசீர்வாதங்களை மூடிப்போடமுடியாது. ஏனெனில் நாம் விசுவாசத்தை வைத்திருக்கிற தேவன் உயிருள்ளவர்.*
💁🏻♂ *அனுதின🔥அக்கினி மிஷெனரி ஊழியம் / மத்தியபிரதேஷ்* - Google Pay : *8109944146*