04/04/2021
அனைத்து சமுதாய மக்களின் பேராதரவோடு வெற்றிபெறுவேன்
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் இறுதிப்பிரச்சாரம்
திமுக தலைமையிலான மதசாற்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவு பெற்ற முஹம்மது அபூபக்கர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடையநல்லூர் சட்டமன்றதொகுதியில் கடந்த முறை வென்று அனைத்து சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற pஉள்ளேன். யாரும் குறைகூறாத வகையில் லஞ்ச லாவனியங்களுக்கு ஆளாகதவன். எளிதில் யாரும் என்னை அனுகும் வகையில் செயல்பட்டவன். சட்டமன்றத்தில் அதிகம் கேள்விகள் கேட்டதில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளேன். எதிர்கட்சி வரிசையில் இருந்து போராடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். குறிப்பாக கடையநல்லூர் தாலுகா புதிய கட்டிடம், சார்பதிவாளர் அலுவலகம ; புதிய கட்டிடம், டெங்கு காய்ச்சல் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை தாலுகா அலுவலகம், திருமலைக்கோவில் மலைப்பாதைக்கு மின்சாரவிளக்கு, பக்தர்கள் ஓய்வறை, புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது, சாலைகள் சீரமைக்கப்பட்டது, 12 கோடியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் திட்டப்பணிகள் செய்யப்பட்டுளளது. பண்பொழி, இலத்தூர், சிவராமபேட்டை, கிரு~;ணாபுரம் கோவில்கள் குறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ளேன். தனது சொந்த நிதியிலிருந்து ஒரு இந்து, கிருஸ்துவர், முஸ்லிம், சமுதாய புரவலர் என நான்கு நபர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளேன். அமர்சேவா சங்கத்திற்கு எனது சொந்த செலவில் கட்டிடம் கட்டிக்கொடுத்துள்ளேன்.
இந்திய நாடு என்பது மதசாற்பற்ற நாடு, அதிலும் தமிழகம் முன்மாதிரியான மாநிலம் அனைத்து சமுதாய மக்களும் மாமன், மச்சான், அண்ணன், தம்பியாக வாழ்ந்து வருகிறோம். இங்கு எந்த குழப்பத்தையும் யாரும் ஏற்படுத்த முடியாது. நான் பிரச்சாரத்pற்கு செல்லும் இடமெல்லாம் அனைத்து சமுதாய மக்களும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்து வெற்றி பெறுவது உறுதி என வாழ்த்தினார்கள். அமையப்போகின்ற திமுக ஆட்சியில் ஆளுங்கட்சி எம்எல்ஏ வாக தொகுதியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் என உறுதி அளித்தார்.
திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர்மைதீன், ரசாக், மாவட்ட பொருளாளர் சேக்தாவுத், தொகுதி பொறுப்பாளர்கள் சட்டநாதன் (காங்கிரஸ்) செல்வ சக்திவேல் (மதிமுக) வேலுமயில் - (சிபிஎம்) சுப்பையா - (சிபிஐ) செய்யது சுலைமான் (முஸ்லிம் லீக்) டேனி அருள்சிங் - (விசிக) முனீஸ்வரன் (ஆதி.த.பேரவை) வழக்கறிஞர் பிரபு - (பார்வார்ட் பிளாக்) உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.