17/01/2026
கிரீன்லாந்து 🇬🇱 🇬🇱 🇬🇱 கிரீன்லாந்து பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
கிரீன்லாந்தை இன்று யார் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாரோ அவர்
நாளை எதிர்கால உலகை ஆள்வார்கள்.
அதனால்தான் உலக சண்டியன் டிரம்ப் அதன் மீது ஒரு கண் வைத்துள்ளான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கிரீன்லாந்து என்பது, எட்டுத்திக்காலும் பனியால் மூடப்பட்ட ஒரு தீவாகும். அதை நாம் பனிப் பாலைவனமாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் டிரம்ப் போன்ற ஆதிக்க வெறியர்கள் அதனை கனவு தேசமாக வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த இராணுவ கோட்டையாக பார்க்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய தீவாகக் கருதப்படும் கிரீன்லாந்து 2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. தற்போது டென்மார்க் அரச ஆளுகையின் கீழ் அது சுயாட்சியை பெற்றுக்கொண்ட நாடாகும்.
அத்தோடு கிரீன்லாந்து கணிசமான அளவு அரிய வகை தாதுக்களையும் கனிம வளங்களையும் கொண்ட தீவாகும். (நியோடைமியம் மற்றும் டெர்பியம்)
போன்ற தாதுக்கள் 400 மில்லியன் டன்கள் வரை காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
இத்தகைய தாதுக்கள்தான் நவீன
தொழில்நுட்பங்களான ஸ்மார்ட்போன்கள், மின்சார கார்கள், நவீன இயந்திரங்கள், காற்றாலை விசையாழிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் பல தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆதலால் அமெரிக்கா கிரீன்லாந்தை தன்னகப்படுத்திக் கொண்டால் சீனாவுடன் தொழில்நுட்ப ரீதியாக போட்டியிட ஒரு வலுவான மாற்றீட்டாகப் பார்க்கிறது.
மாத்திரமன்றி 300,000 டன் மதிப்புள்ள யுரேனியம் சுரங்கங்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் மற்றும் குறிப்பிடத்தக்க தங்க இருப்புக்களையும் அது கொண்டுள்ளதால் கண்காணாத ஒரு புதையல் நிலமாகவே வாஷிங்டன் அதனை பார்க்கிறது.
ராணுவரீதியாக கிரீன்லாந்து நிலமானது கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த தலமாகும். ரஷ்யாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போரின் போது இது தெளிவாகியது. ஏற்கனவே அங்கே சீன மற்றும் ரஷ்ய கடற்படை மற்றும் விமானப் படை ரோந்துகளை செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணித்துள்ள வாஷிங்டன், இதனை தனது தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகக் கருதுகிறது.
மேலும் சீனா"அறிவியல் ஆராய்ச்சி" மற்றும் "துறைமுக முதலீடு" என்ற போர்வையில் ஒரு இராணுவ இருப்பை அங்கே நிறுவ முயற்சிக்கிறது, ஆதனால் அவை சீன இராணுவ தளங்களாக மாற்றப்படும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. ஏற்கனவே சீனா அங்கே சர்வதேச விமான நிலையம் ஒன்று
கட்டுவதைத் தடுக்க அமெரிக்கா டென்மார்க்குக்கு அழுத்தம் கொடுத்தது வந்தது.
சுருக்கமாக, சொல்வதென்றால், கிரீன்லாந்திலிருந்து, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியாவின் நகர்வுகளை அமெரிக்க இலகுவாக அவதானிக்கலாம். அங்கிருந்து வரும் ஏவுகளைகளை தடுக்கலாம். மேலும் கிரீன்லாந்திலிருந்து ஆசியா அல்லது ஐரோப்பாவை நோக்கி ஏவுகணைகள் மற்றும் கப்பல்களை மிக எளிதாக ஏவ முடியும். அதாவது அடுத்து வரும் உலகப் போருக்கு கிரீன்லாந்து மிக முக்கிய
மூலோபாய தலமாகும்.
இதனால் தான் டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற அல்லது காசு கொடுத்தாவது வாங்க வேண்டும் என்ற பிடிவாத முடிவில் இருக்கிறான்.
அதன் மூலம் அங்கே தற்காப்பு, ஏவுகணை தளங்களை மட்டுமல்ல, தாக்குதல்களை
மேற்கொள்ளும் ராணுவ தளங்களாகவும் பயன்படுத்த முடியும் என்பதாலாகும்.
மேலும் ரஷ்ய கடற்படைகள் ஆர்க்டிக் பெருங்கடல் பக்கம் நெருங்காமல் கதவை முழுமையாக அடைத்து விட முடியும் என்பது வாஷிங்கடனுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு சார்ந்த இன்னுமொரு வரப்பிரசாதமாகும்.
✍ தமிழாக்கம் / imran farook