31/05/2025
கடையநல்லூரில் தெருவில் தவறவிட்ட 12 கிராம் தங்க செயின் உரியவரிடம் ஒப்படைப்பு பெண்ணுக்கு பாராட்டு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் கடந்த வாரம் சனிக்கிழமை மேலக்கடையநல்லூர் பார்க் அருகே தெருவோரத்தில் 12 கிராம் மதிப்புள்ள தங்கச் செயின் கிடந்தது.
அப்பொழுது மேல கடையநல்லூர் மலம்பேட்டை தெருவில் வசித்து வரும் தச்சு தொழிலாளி பழனி குமார் மனைவி கோமதி டீக்கடைக்கு டீ வாங்க சென்று விட்டு திரும்பி வந்தபோது தெருவோரத்தில் 12 கிராம் தங்க செயின் கிடப்பதைக் கண்டார் அதனை எடுத்துவிட்டு தனது கணவருக்கு தகவல் தெரிவித்து கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
இந்தத் தங்க செயின் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கன்னிப் பாண்டியன் பாண்டியன் டீக்கடைக்கு சென்ற பொழுது கழுத்தில் இருந்து அறுந்து தரையில் விழுந்து தெரியவந்ததை தொடர்ந்து
இருவரையும் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வரவழைத்தார் அப்பொழுது
தங்கச் செயினை
மீட் எடுத்துக் கொடுத்த கோமதியின் நேர்மையாக பாராட்டினார். அதே நேரத்தில் செயினை தவறவிட்ட கன்னி பாண்டியனுக்கும் அறிவுரை வழங்கினார்
அதன் பின்னர் கோமதி நகையை தவறவிட்ட கன்னி பாண்டியன் மனைவி கவிதா இடம் 12 கிராம் தங்கச் செயினை ஒப்படைத்தார் அப்பொழுது கடையநல்லூர் காவலர்கள் எழுத்தர் தங்கதுரை தலைமை காவலர்கள் சங்கர் , கனிராஜ் ஆகியோர் உள்ளனர்.