Vanakkam Kadayanallur 360

Vanakkam Kadayanallur 360 கடையநல்லூர் செய்திகள்

சிவகிரி வனத்துறை ரேஞ்சர் கதிரவன் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் குறி வைத்து தட்டி தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறைசென்னை பல்லாவரத்தை ச...
19/08/2026

சிவகிரி வனத்துறை ரேஞ்சர் கதிரவன் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் குறி வைத்து தட்டி தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் வயது என்பவர் தனது பெயரில் அரசு ஒப்பந்த வேலைகள் எடுத்து செய்து வருகிறார். தென்காசி மாவட்டம் புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை அழிக்காமலும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காமலும் இருப்பதற்காக வனப்பகுதியை ஒட்டி 8 கி.மீட்டர் துரத்திற்கு யானை தடுப்பு அகழி (Creation of Elephant Proof Trench) அமைப்பதற்கு டெண்டர் மூலம் பணி ஆணையை 07.02.2026 ஆம் தேதியில் பெற்று அப்பணியை தொடர்ந்து செய்துவந்துள்ளார். இந்நிலையில் சிவகிரி வனச்சரக அலுவலர் (Ranger) கதிரவன் என்பவர் தனக்கு பில் தொகையில 30% தரவேண்டும் என்று புகார்தாரரான திரு.சுரேஷ்குமாரிடம் தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார், நேற்று 18.08.2026 ஆம் தேதி புகார்தாரரான திரு.சுரேஷ்குமார் சிவகிரி சென்று (Ranger) திரு.கதிரவனை நேரில் சந்தித்து குறைந்த விலைப்புள்ளியில் டெண்டர் எடுத்துள்ளேன் பார்த்து சொல்லுங்க சார் என கேட்டதற்கு 20% வது தரவேண்டும் இல்லையென்றால் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன் இனிமேல் பில் போடவும் மாட்டேன் ஏற்கனவே ரூ.18,45,000/-ற்கான பில் தொகையை பெற்றுள்ளீர்கள் அதற்கான 20% கமிஷன் தொகை ரூ.3,69,000/-ஐ தந்துவிட்டு மீத வேலையை முடியுங்கள் என கூறியுள்ளார். அதற்கு புகார்தாரரான திரு.சுரேஷ்குமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியவுடன் சரி முதல் தவணையாக ரூ.1,00,000/- நாளைக்கு 19.06.2026 ஆம் தேதி தரவேண்டும் மீதி பணத்தை இறுதி பில் போடும்போது தரவேண்டும் என கறாராக சொல்லிவிட்டதால், பணம் கொடுக்க விருப்பம் இல்லாத புகார்தாரர் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகாரின்பேரில் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் சிவகிரி வனச்சரக அலுவலர் (Ranger) திரு.கதிரவன் என்பவர் மீது 18.08.2026-ம் தேதி வழக்கு பதிவு செய்து, புகார்தாரர் திரு.சுரேஷ்குமாரிடம் ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூ.1,00,000/-த்தை கொடுத்தனுப்ப அதை இன்று 19.08.2026-ம் தேதி (Ranger) திரு.கதிரவன் தன்னுடைய வீட்டில் வைத்து பெற்றுக்கொண்டபோது, அப்பகுதியில் மாறுவேடத்தில் மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வனத்துறை ரேஞ்சர் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடையநல்லூரில்டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு நர்சிங் கல்லூரி மாணவன் உயிரள இறப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்வு கடையநல்லூர் பக...
19/08/2026

கடையநல்லூரில்
டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு நர்சிங் கல்லூரி மாணவன் உயிரள

இறப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்வு கடையநல்லூர் பகுதியில் தொடரும் காய்ச்சல் உயிர் இழப்பு

கடையநல்லூர் அருகே இலங்கை தமிழர் முகாமில் டெங்கு காய்ச்சலுக்கு இருவர் பலியான நிலையில்

கடையநல்லூர் அருகே உள்ள ரஹ்மானியாபுரம் மேற்கு பகுதி பத்தாவது தெருவில் வசிக்கும் பரீத் என்பவரின் மகன் அப்துல் ரஹ்மான் இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவனாக படித்து வருகிறார் இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து ஊர் வந்த நிலையில் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தொடர்ந்து காய்ச்சல் குறையாததால் நேற்றைய தினம் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த பொழுது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து ஒரு வாரமாக கடுமையான வைரஸ் காய்ச்சல் தாக்கிய நிலையில் வெள்ளை அணுக்கள் குறைந்ததால் டெங்கு காய்ச்சலின் அறிகுறியால் உயிரிழந்ததாக பெற்றோர்கள் கூறுகின்றனர்

கடையநல்லூர் அருகே சேர்ந்த மரம் தன்னூத்து கிராமத்தில் அதிக அளவு டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது அது போன்று இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த ஒரு மாதமாக காய்ச்சலால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வரும் வந்தனர் அதில் ரிஹானா மேரி (வயது 13) என்ற12 வயது குழந்தை கடந்த மாதம் உயிரிழந்தது நேற்றைய தினம் நர்மளா என்ற 27 வயது பெண்ணும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது தற்போது கடையநல்லூர் பகுதியில் மட்டும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு மூன்றாக உயர்ந்துள்ளது அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது

கடையநல்லூர் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அடுத்தடுத்து உயிரிழப்பு கடையநல்லூர் அருகே இலங்கை தமிழர் முகாமில் டெங்கு கா...
19/08/2026

கடையநல்லூர் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அடுத்தடுத்து உயிரிழப்பு

கடையநல்லூர் அருகே இலங்கை தமிழர் முகாமில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் மனைவி நர்மளா உயிரிழப்பு
டெங்கு பாதிப்பா?

தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் தாலுகா போகநல்லூர் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வரு கின்றனர். இங்கு கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்றனர். இங்குள்ள ராஜன்-சைலா ஸ்ரீ தம்பதியின் மகள்ரிஹானா மேரி (வயது 13) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி சில் சிகிச்சை பெற்ற நிலையில் சமீபத்தில் உயிரிழந்தார்.

தினேஷ் மனைவி நர்மளா (27) என்பவரும் டெங்குகாய்ச்சல் பாதிப்பால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று இரவு நர்மலா உயிரிழந்தார் இவர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார் ?என மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது நிர்மள இறப்பு எதனால் என்பதை பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தெரிய வரும்

இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு மையம் அருகில் . தென் காசி, கடையநல்லூர் நகராட் சிகள் மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளில் இருந்து குப் பைகள் இங்கு கொட்டப்படு கின்றன. கோழிப் பண்ணை களில் இறந்த கோழிகள், கழி வுகள், இறந்த மற்றும் நோயுற்ற நாய்கள் போன்றவற்றையும் இங்குதான் வீசிவிட்டு செல் கின்றனர். இதனால் ஈக்கள், கொசுக்கள் அதிகளவில் உரு வாகி குடியிருப்பு பகுதிகளுக் குள் வருகின்றன. குப்பைக் கிடங்கை உடனடியாக அகற்ற வேண்டும்"என நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் கொடுத்த நிலையில் தற்போது இலங்கை அகதி முகாமில் உள்ள பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தும். இறந்த நர்மளாவிற்கு ஆண் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது

கடையநல்லூர் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தீவிரமாகப் பரவும் டெங்கு காய்ச்சல் அச்சத்தில் மக்கள் மறுவாழ்வு மைய பெண்கள...
18/08/2026

கடையநல்லூர் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தீவிரமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்
அச்சத்தில் மக்கள்
மறுவாழ்வு மைய பெண்கள் கதறல்

தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தீவிரமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்
அச்சத்தில் மக்கள்
மறுவாழ்வு மைய பெண்கள் கதறல்
நீங்கள் இந்த நாட்டினுடைய பிரதிநிதிகள் அல்ல இந்த நாட்டுக்கு வரி செலுத்துபவர்கள் அல்ல
என அதிகாரிகளின் அலட்சியத்தால் இளைஞர் தமிழர்கள் பாதிப்பு

இதுவரை மாவட்ட ஆட்சித் தலைவர் எங்களை ஒரு நாள் கூட வந்து பார்க்கவில்லை காரணம் இலங்கைத் தமிழர்கள் தானே என்ற அலட்சியம் தான் காரணம் என இலங்கை தமிழச்சி கதறல்

டெங்குவை கட்டுப்படுத்த மருத்துவத்துறை தினரல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா போக நல்லூர் கிராமம் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 35 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர் இவர்களுக்கு அரசு சார்பில் ரேஷன் அரிசி குடியிருப்புகள் அரசு சொந்தச் செலவில் கட்டிக் கொடுத்த நிலையில் இவர்கள் குடியிருந்து வருகின்றனர்
கடந்த ஒரு மாதமாக இலங்கை அகதிகள் முகாமில் 50க்கும் மேற்பட்டோருக்கு ஒரு விதமான மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீடுகளிலே முடங்கி கிடந்தன அதில் கடந்த மாதம்
ராஜன் -சைலாஸ்ரீ தம்பதிகளின் மகள் ரிஹானா மேரி (13) எட்டாம் வகுப்பு படித்து வந்தாள் கடையநல்லூர் அரசு மருத்துவமனை தென்காசி அரசு மருத்துவமனை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார் .
இழப்புக்கான காரணம் டெங்கு பாதிப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போதுதினேஷ் மனைவி
நர்மலா 27 திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில்சுகாதாரத்துறை தீவிரமாக இலங்கை மறுவாழ்வு முகாமில் மருத்துவ முகாம் தொடர்ந்து நடத்திய நிலையிலும் முகாமில் உள்ள தேவையற்ற கழிவு பொருட்கள் டெங்கு கொசுக்களை உருவாக்கும் சிரட்டை தேங்காய் நெட்டி தேவையற்ற பொருட்களை ஊராட்சி சுகாதார சார்பாக பணியாளர்கள் மூலம் தொடர்ந்து அப்புறப்படுத்திய நிலையிலும் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவத்துறையினர் திணறிவருகின்றனர் வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் கடந்த காலங்களில் கடையநல்லூர் போன்ற பகுதிகளில் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து தேங்கிய சுத்தமான மழை நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகுவது வழக்கம் அதனை தீவிரமாக கண்காணித்து கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளில் சென்று கொசு மருந்துகளை தெளித்து கொசுக்களை அழித்து வந்தோம் ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தேவையான அளவு பெய்யாத நிலையில் திடீரென பருவ மழை பெய்வதற்கு முன்பாக கடையநல்லூர் அருகே உள்ள அகதிகள் முகாமில் திடீரென டெங்கு காய்ச்சல் சிலருக்கு இருப்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றும் பரிசோதனை செய்து பார்த்ததில் சேமித்து வைத்த குடிநீர்களை ஆய்வு செய்தபோது அதில் டெங்கு கொசு உற்பத்தி ஆவதற்கான வாய்ப்புகளே இல்லாத நிலையில் கடையநல்லூர் அகதிகள் முகாமில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் இவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ முகாமை ஏற்படுத்தி நடத்திக் கொண்டு இருப்பதாக அவர்கள் கூறினார்

கடையநல்லூர் பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் அக்டோபர், நவம்பர் மாதங்களில் திடீரென பரவிய மர்ம காய்ச்சலால் 100க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலுக்கு சிலர் உயிர் இழப்பது வாடிக்கையானது இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க 2009ம் ஆண்டு புனே, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர் கடையநல்லூருக்கு வந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தினர்.
அத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து ராட்சத கொசு ஓழிப்பு மெஷின் கொண்டு வரப்பட்டு நகர பகுதிகளில் கொசு ஒழிப்பு புகைகளை அடித்து கொசுக்களை முற்றிலும் அளித்து ஒழித்தனர்

அதன் பின்னர் 2014 _17 ஆம் ஆண்டு மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியதை தொடர்ந்து
அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் ஞாயிறுதோறும் கடையநல்லூரில் முகாமிட்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளையும் வரவழைத்து அங்கேயே முகாமிட்டு டெங்கு காய்ச்சலுக்கான மூல காரணங்களை கண்டறிந்தார் .
அதனைத்தொடர்ந்து டெங்கு கொசு உற்பத்தியாகும் புழுக்களை கண்டறிந்து அவைகளை முற்றிலும் ஒழித்துவிட்டால் முழுமையாக டெங்குவை ஒழிக்க முடியும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து தினம் தோறும் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று குடிநீர் தொட்டி ,தண்ணீர்பாத்திரம், தேங்கி நிற்கும் மழை நீர், ஆட்டு உரல், டயர், நீண்டகாலம் பூட்டிக்கிடக்கும் கழிவறை, புதிதாக கட்டுமானம் நடைபெறும் கட்டிடடங்கள் ஆகியவற்றை கண்காணித்து அதில் டெங்கு கொசு உற்பத்தியாவதை கண்டறிந்து முற்றிலும் அளிக்கச் செய்தார்.

தற்போது இலங்கை மறுவாழ்வு முகாமில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்பார்வையில் தொடர்ந்து இலங்கை மறுவாழ்வு மையத்தில் முகாமெட்டு முற்றிலும் டெங்கு உற்பத்தியாகும் கொசுக்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே இலங்கை அகதிகள் முகாமில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும் என அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் வருகின்றனர்

இதுகுறித்து அங்கே குடியிருக்கும் இலங்கை தமிழச்சி கமலவேணி கூறியதாவது

இலங்கைத் தமிழர்கள் குடியிருக்கும் இந்த பகுதி இந்த மாவட்டத்தின் குப்பை கிடங்காக தான் உள்ளது தவிர இலங்கைத் தமிழர் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியாக இல்லை இதனை
மாவட்ட நிர்வாகம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையமாக கருதுவதில்லை

எங்கள் பகுதியை சுற்றி தென்காசி நகராட்சி கடையநல்லூர் நகராட்சி சொக்கம்பட்டி ஊராட்சி கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள குப்பைகளை கொட்டும் குப்பை கிடங்காக உள்ளது இங்கே தான் கோழி பண்ணைகளில் செத்த கோழிகள் கோழிகளின் கழிவுகளையும்
செத்த நாய்களையும் நோய் பிடித்த நாய்களையும் கொண்டு வந்து கொட்டுகிறார்கள் இதனை தின்பதற்கு ஏராளமான நாய்களும் வருகிறது

நகரில் உள்ள சுற்றித் திரியும் நாய்களை பிடித்துக் கொண்டு வந்து இந்தப் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் விட்டு விட்டு செல்கிறார்கள் இதனால் எங்கள் பகுதி சுகாதாரமற்ற பகுதியாக உள்ளது இலங்கைத் தமிழர்கள் குடியிருப்பதற்கு லாயக் இல்லாத பகுதியாக உள்ளது
இதனால் இப்பகுதியில்
ஏராளமான ஈக்கள் குப்பை கிடங்கில் இருந்து எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுத்து வருகிறது இதனால் நாங்கள் உண்ணும் உணவு மூலமாக பல்வேறு நோய்களை ஈக்கள் மூலமாகவும் கொசுக்கள் மூலமாகவும் பரவுகிறது கடந்த மாதம் எனது உறவுக்கார குழந்தை 14வயது சிறுமி உயிர் இழந்து உள்ளார் 50 மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர் இன்னும் சிலர்கள் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எங்களை சுற்றி இருக்கக்கூடிய குப்பை கிடங்குகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் குப்பைகளில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் தீ வைத்து விட்டு செல்கின்றனர் இதனால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது பற்றி எரியும் குப்பை கிடங்கை உடனடியாக அணைக்க வேண்டும்

அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார் நீங்கள் இந்த நாட்டினுடைய பிரதிநிதிகள் அல்ல இந்த நாட்டுக்கு வரி செலுத்துபவர்கள் அல்ல

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் என எங்களை பார்த்து அருவருப்பான முறையில் பேசுவதாக பெண்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்..

இலங்கைத் தமிழர்கள் என்றால் அலட்சியமான முறையில் அதிகாரிகள் செயல்படுத்துவதால் எங்களுக்கு எந்த நியாயமும் கிடைப்பதில்லை என்றார்

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை 10 நாட்கள் சிகிச்சைக்கு வைத்துவிட்டு கடைசி நேரத்தில் தென்காசிக்கு அனுப்பி வைத்து அவர்கள் டெங்கு எனக்கூறி திருநெல்வேலிக்கு அனுப்பி இறுதியில் அந்த குழந்தை உயிரிழந்தது தான் மிச்சம்
கடந்த ஒரு மாதமாக எங்கள் பகுதியில் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளோம் இதுவரை மாவட்ட ஆட்சித் தலைவர் எங்களை ஒரு நாள் கூட வந்து பார்க்கவில்லை காரணம் இலங்கைத் தமிழர்கள் தானே என்ற அலட்சியம் தான் காரணம் என இலங்கைத் தமிழர்களின் குற்றச்சாட்டாக உள்ளது
என கதறி அழுதார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து கடையநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் குண்...
04/08/2026

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து கடையநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது*

காவிரி விவகாரம்: விஜய் குறித்து அவதூறு பேச்சு – உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கடையநல்லூரில் தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பா...
04/08/2026

காவிரி விவகாரம்: விஜய் குறித்து அவதூறு பேச்சு – உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கடையநல்லூரில் தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டம்... போலீஸ் குவிப்பால் பரபரப்பு!"

29/07/2026
🟥  BREAKING NEWS 🟥🚨 கடையுநல்லூரில்  வாலிபரை கொலை செய்துவிட்டு தலையை குற்றாலத்தில் புதைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலி...
24/07/2026

🟥 BREAKING NEWS 🟥
🚨 கடையுநல்லூரில் வாலிபரை கொலை செய்துவிட்டு தலையை குற்றாலத்தில் புதைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

📍 கடையநல்லூர் | தென்காசி மாவட்டம்
வலசை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (27) காணாமல் போன வழக்கில், போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் கடையநல்லூர் அருகே உள்ள கிணற்றில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
வழக்கில் கைது செய்யப்பட சிறுவர்கள் நெல்லை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்

தலைமறைவான கிருஷ்ணனை பிடிக்க
புளியங்குடி டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அதில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, சப் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடிய நிலையில் போலீசார் அவனின் மொபைல் போனை கண்காணித்த நிலையில் அவன் இருக்கும் இடம் தெரிந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்

காணாமல் போன மகேந்திரனின் உடல் கொலை செய்யப்பட்டு  கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே மீட்பு கடந்த ஆறாம் தேதி கடையநல்லூர் ...
21/07/2026

காணாமல் போன மகேந்திரனின் உடல் கொலை செய்யப்பட்டு கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே மீட்பு

கடந்த ஆறாம் தேதி கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் காணா போனதாக அவருடைய மனைவி புவனேஸ்வரி புகார் அளித்தார் அதனை தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமானவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்ததில் கடையநல்லூர் பேருந்து நிலையத்திற்கு அருகே மகேந்திரனை கொலை செய்துவிட்டு உடலை அங்கே உள்ள சிறிய மடத்துக்குள் போட்டதாக தகவல் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து போலீசார் உடலை மீட்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றனர் கடையநல்லூரில் சம்பவம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

21/07/2026

காணாமல் போன மகேந்திரனின் உடல் கொலை செய்யப்பட்டு கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே மீட்பு

கடந்தஆறாம் தேதி கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் காணா போனதாக அவருடைய மனைவி புவனேஸ்வரி புகார் அளித்தார் அதனை தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமானவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்ததில் கடையநல்லூர் பேருந்து நிலையத்திற்கு அருகே மகேந்திரனை கொலை செய்துவிட்டு உடலை அங்கே உள்ள சிறிய மடத்துக்குள் போட்டதாக தகவல் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து போலீசார் உடலை மீட்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றனர் கடையநல்லூரில் சம்பவம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Address

New Bus Stand
Kadayanallur
627751

Alerts

Be the first to know and let us send you an email when Vanakkam Kadayanallur 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share