17/09/2025
புளியங்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள்
புளியங்குடி,செப்.18: புளியங்குடி மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைதுறை சார்பில் வியாபாரிகளால் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன இதற்கு பொதுமக்கள் பலத்த வரவேற்பு தெரிவித்தனர்.
புளியங்குடி நகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இங்கு இருபுறமும் பல்வேறு கடைகள் கட்டப்பட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் இருபுறமும் சுமார் ஐந்து முதல் ஏழு அடி வரை கடைக்கார்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. அதோடு இருச்சக்கர வாகனங்களும் நிறுத்தப்படுவதால் காலை, மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதோடு தொடர்ச்சியாக வாகன விபத்துகளும் நடைபெறுகிறது மேலும் மழைநீர் வடிகால் மேல் சிமெண்ட் கற்களால் மூடி அதன் மேல் படி அமைத்துள்ளனர் இதனால் வாருகால் சுத்தம் செய்ய முடியாமல் மழைகாலங்களில் தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுவதோடு துர் நாற்றம் வீசுகிறது. இதனால் புளியங்குடி மெயின் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் ரோட்டின் நடுவில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்றுநெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு, புளியங்குடி நகராட்சிக்கு காவல் துறைக்கு என்று பொதுமக்கள் சமுக ஆர்வலர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்தது. இதனையொட்டி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சென்னராஜ் தலைமையில் நேற்று டிஎன் புதுக்குடி பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து ஆக்கிரமிப்புகள் ஜேசிபி எந்திரம் மூலமாக அகற்றப்பட்டன, வாறுகாலை மூடி வைத்து இருந்த சிமெண்ட் கற்களும் உடைத்து அகற்றப்பட்டது.இதில் நகராட்சி ஆணையாளர் நாகராஜ்.. சுகாதார அலுவலர் முருகன், நகரமைப்பு ஆய்வாளர் கனகா, தூய்மை பணியாளர்கள், களபணியாளர்கள் கலந்து கொண்டனர், இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ளன...