Kallakurichi View Point

Kallakurichi View Point கள்ளக்குறிச்சி செய்திகள்
(3)

03/09/2026

குவைத்தில் வீட்டு வேலைக்கு சென்ற கள்ளக்குறிச்சி பெண்ணுக்கு சித்திரவதை? தமிழகத்திற்கு மீட்டுவர கையெடுத்து கும்பிட்டு
கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்..!

03/09/2026
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள 64 ரேஷன் கடைகள் மூலமாக இன்று (3ம் தேதி) வெங்காயம்...
03/09/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள 64 ரேஷன் கடைகள் மூலமாக இன்று (3ம் தேதி) வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

சட்டசபை கூட்டத்தொடரில் ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டும், வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையிலும் நகர்ப்புற ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.

அதன்படி, மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் சின்னசேலம், வடக்கனந்தல், சங்கராபுரம், மணலுார்பேட்டை, தியாகதுருகம் ஆகிய 5 பேரூராட்சிகளில் உள்ள 64 ரேஷன் கடைகளில் இன்று வெங்காயம் விற்பனை துவங்கப்படுகிறது.

இதற்காக, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் மேற்பார்வையில், 10 டன் எடையுள்ள வெங்காயம் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது.

க.அலம்பலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால் மாணவர்கள் பாதிப்படைகின்றனர். கள்ள...
03/09/2026

க.அலம்பலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால் மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பலம் கிராமத்தில் வயல்வெளிகளுக்கு இடையே அரசு உயர் நிலைப்பள்ளி செயல்படுகிறது. பல கிராமங்களை சேர்ந்த 173 மாணவ, மாணவிகள் இங்கு படிக்கின்றனர். 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இங்கு பணிபுரிகின்றனர். பள்ளியின் முன்பகுதியில் தார் சாலை உள்ளது. பின்புறம் வயல்வெளி பகுதிகள் உள்ளன.

ஆனால் இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் பாதுகாப்பின்றி திறந்த வெளியாக உள்ளது. பள்ளியை சுற்றிலும் ஏராளமான விவசாய நிலங்கள், ஓடை இருப்பதால் விஷப்பூச்சிகள் தடையின்றி எளிதாக வந்து செல்லும் நிலை உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், கால்நடைகளின் இருப்பிடமாகவும் மாறுகிறது.

மாணவர்கள் விளையாடும்போது தவறுதலாக சாலைக்கு வரும் நிலையில் அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

02/09/2026

சங்கராபுரம் அருகே குடும்ப வறுமையின் காரணமாக குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற பெண் 2 மாதங்களுக்கு மேலாக உணவின்றி தவித்து வருவதாகவும் பல்வேறு சித்திரவதை அனுபவிப்பதாகவும் வேதனை.. தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு குமுறல்!

02/09/2026

உளுந்தூர்பேட்டை அருகே அரசு விடுதியில் மாணவர்களுக்கு உணவு வழங்காத அவலம்! உணவு சமைத்து வந்து மாணவர்களுக்கு பரிமாறிய பொதுமக்கள்.. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை

02/09/2026

அண்ணாவா..? யார அண்ணானு கூப்பிட்டீங்க..? உங்கள இல்லப்பா உங்க பெரிய அண்ணன கூப்பிட்டேன்..! அ.தி.மு.க எம்.எல்.ஏ பேச்சும் சபாநாயகரின் கேள்வியும்

02/09/2026

'விஜய் தளபதி' என்ற பெயரில் வடக்கு கும்பல் பண மோசடி

02/09/2026

சட்டமன்றத்தில் சங்கராபுரம் MLA ராகேஷ் பேச்சு

Address

Kallakkurichchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kallakurichi View Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share