பிரசித்தி பெற்ற விழாக்கள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. சுமார் மூன்று வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், தீ மிதித்தல்,
திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும்.
ஆலயங்கள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் முசுலிம் மக்கள், இந்து சேர்த்து வழிபட கூடிய காதரியம்மன் தர்கா ஒன்று உள்ளது கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் இங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பதுவை புனிதர் அந்தோணியாரின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஜீன் மாதம் முதலாம் திங்கள் கொடியேற்றபட்டு திருவிழா நடைபெறும். கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாது மற்ற சமய மக்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். இந்த ஆலயத்தின் உள்ளே 1856 ஆண்டு இறந்த வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் கல்லறையும் உள்ளது. அவரின் பெயர் தந்தை சர்டூரியா. கர்த்தநாதர் சுவாமி என்று இவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இங்குள்ள மக்களின் காலரா நோயை போக்க அரும்பாடுபட்டதாகவும், இறுதியில் அவரையே காலரா நோய் தாக்க அவர் இறந்தார். அவரின் உடல் இங்கே கமுதி ஆலயத்தினுள் உள்ளது.
கல்விக்கூடங்கள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கெளரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை இங்குள்ள பள்ளிகள் ஆகும். கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது.
கமுதி சந்தை
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
செவ்வாய் கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது. இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவகம் கமுதிக்கு அருகே உள்ள பசும்பொன் என்ற கிராமத்தில் உள்ளது
நீர் நிலைகள்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கமுதியில் குண்டாறு பாய்கிறது. மேலும் கண்ணார்பட்டி ஊருணி, செட்டிஊருணி என நீர்நிலைகள் இருந்தாலும், அவை மழைக்காலத்தில் மட்டுமே நிறைகின்றன. Kamuthi Taluk, Ramanathapuram District:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
S. Tharaikudi
2 Abiramam
3 Achankulam
4 Anaiyur
5 Ariyamangalam
6 Chittarkottai
7 D Valasubbiramaniyapuram
8 Eluvanoor
9 Idivilagi
10 K Nedungulam
11 K. Veppankulam
12 Kadamangalam
13 Kakkudi
14 Kallikulam
15 Kamuthi
16 Kel Ramanathi
17 Komboothi
18 Koodangulam
19 Kovilankulam
20 M Pudukulam
21 Mandala Manickam
22 Marakulam
23 Mavilangai
24 Mel Ramanathi
25 Melamudimannarkottai
26 Mudal Nadu
27 Mudtakurichi
28 Narayanapuram
29 Natham
30 Neeravi
31 Neeravi Karisalkulam
32 O. Karisalkulam
33 P Muthuramalingapuram
34 Pakkuvetti
35 Pammanendal
36 Peraiyur
37 Periyanai Kulam
38 Perunali
39 Pondampuli
40 Pudukkottai
41 Punavasal
42 Sadayanendal
43 Seemanendal
44 Senkappadai
45 Seganathapuram
46 Thavasikurichi
47 Thimmanathapuram
48 Vallanthai
49 Vangarupuram
50 Villanendal