KanchiPress

KanchiPress Kanchi Press. This page is not belong to any newspaper company. Send us your videos and images directly. TAG / HASHTAG kanchipress On what do you want to comment?

Every day Kanchi Press - on page - brings you the latest stories from across the kanchipuram...

but what we want to hear are the issues that matter to you. The part you play in making the news is very important. Whether it is breaking news or a featured item, your contribution can make a difference. Have you seen or been involved in a news event? Is something significant, bizarre or unu

sual happening where you live? Have you got a story to tell or is there something you think we should follow up? Are there topics you want to get the world talking about? Or do you want to find out what others are talking about? You can also upload your video or pictures. In some cases your images may be used on Kanchi Press output. We will publish your name as you provide it, unless you ask us not to. TAG or HASHTAG

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது - உயிருக்கே ஆபத்து!இன்றைய காலக்கட்டத்தில், பள்ளி மாணவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடையாத சிற...
10/04/2026

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது - உயிருக்கே ஆபத்து!

இன்றைய காலக்கட்டத்தில், பள்ளி மாணவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைச் சாலைகளில் ஓட்டிச் செல்வதைக் காண்கிறோம். இது சட்டப்படி குற்றம் மட்டுமல்லாமல், பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது.

தற்போதைய ஆபத்தான நிலை:

* சிறுவர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது.
* இருசக்கர வாகனங்களில் இருவர் அல்லது மூவர் அமர்ந்து கொண்டு சாகசங்களில் ஈடுபடுவது.
* சாலை விதிகளைப் பற்றிய புரிதல் இல்லாமல் கவனக்குறைவாகச் செல்வது.

சட்டப்படி தண்டனை (மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 199A):
சிறுவர்கள் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால், அந்தச் சிறுவனின் பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளர் மீதே கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்:

1. பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹25,000 அபராதம் விதிக்கப்படலாம்.
2. அந்த வாகனத்தின் பதிவு (RC) 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.
3. சம்பந்தப்பட்ட சிறுவன் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது.

சமூகத்திற்கான வேண்டுகோள்:
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகள் மீது காட்டும் அதீத பாசம், அவர்களுக்குப் பாதுகாப்பானது அல்ல. ஒரு நொடி கவனக்குறைவு, பல குடும்பங்களின் வாழ்வைச் சிதைத்துவிடும். உங்கள் பிள்ளைகள் கையில் சாவியைக் கொடுப்பது, அவர்களின் உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமம்.

பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்:
உங்கள் பகுதியில் சிறுவர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதைக் கண்டால், உடனடியாக அதைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். மேலும், கீழே உள்ள அதிகாரிகளை டேக் (Tag) செய்யுங்கள்:

📍 District Collector Kancheepuram (காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்)
📍 Kanchipuram District Police (காஞ்சிபுரம் காவல் துறை)
📍 Tamil Nadu Police (தமிழ்நாடு காவல் துறை)

அதிகாரிகளுக்கு விண்ணப்பம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர், சிறுவர்கள் வாகனம் ஓட்டும் செயலைக் கட்டுப்படுத்தச் சாலைகளில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களாகிய நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

"விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் - சட்டத்தை மதிப்போம்!"

06/12/2025

*காவல்துறை அறிவிப்பு - 06.12.2025*

கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 08.12.2025 அன்று அதிகாலை 02.00 மணிமுதல் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் கீழ்காணும் வழித்தடங்கள் வழியாக வந்துசெல்லும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

 சென்னையிலிருந்து காஞ்சிபுரம் நகரத்திற்கு வரும் பேருந்துக்கள் வெள்ளைகேட் ஒலிமுகமதுபேட்டை புத்தேரி தெரு ஜங்சன் குஜராத்திசத்திரம் கச்சபேஸ்வரர் கோயில் வழியாக பேருந்துநிலையம் வந்தடையும் காஞ்சிபுரம்.

 காஞ்சிபுரம் இருந்து பேருந்துநிலையத்தில் சென்னை மற்றும் வேலூர் செல்லும் பேருந்துகள் டவுன் பேங்க் பூக்கடைச்சத்திரம். கம்மாளத் தெரு மற்றும் பொன்னேரிகரை வழியாக செல்லும்.

கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கீழ்கானும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறது.

• யாத்திரி நிவாஸ் (ஒலிமுகமதுப்பேட்டை)
• உலகலந்த பெருமாள் கோயில் அருகில்
• SSKV பள்ளி வளாகம்
• மெக்லின் மைதானம்
• புதிய இரயில் நிலையம்
• சோழன் பள்ளி வளாகம்

கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் குஜராத்திசத்திரம் முதல் கம்மாளத் தெரு சந்திப்பு வரையும் சங்கரமடம் முதல் கச்சபேஷ்வரர் கோயில் வரையும் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு தேரடி தெரு, பெருமாள் தெரு, கிழக்கு மாடவீதி ஆகிய இடங்களில் இருசக்கரம் நான்கு சக்கரம் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை மேற்படி வாகனங்களை ஒதுக்கப்பட்ட வாகனம் நிறுத்துமிடத்திலேயே (Parking) நிறுத்த வேண்டும். மேலும் போக்குரவத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

*கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு வழியாக மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.*

கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று (08.12.2025) பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் முன் ஏற்பாடாக திட்டமிட்டு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்படி கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடைபெறுவதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

06/12/2025

காஞ்சிபுரம் திருச்சக்கரபுரம் – திருக்காளிமேடு பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் குழாய் பணிக்காக சாலை தோண்டப்பட்டுள்ளது. இந்தப் பணியே அவசியம் என்றாலும், தோண்டிய பின் சாலை சரியாக சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டதால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இன்று இந்த வீடியோவை பதிவு செய்யும் போது, ஒரு ஆம்புலன்ஸ் 5 நிமிடத்திற்கும் மேலாக இந்த நெரிசலில் சிக்கிக் கொண்டது. உள்ளே இருந்த நோயாளியின் நிலை எவ்வளவு ஆபத்தானது என்பது எங்களுக்கு தெரியாது — அந்தக் கவலை மனசை உடைக்கிறது. கான்ட்ராக்டர் தரப்பின் அலட்சியத்தால் அவசர மருத்துவ சேவையே தாமதமாகுவது மிகவும் வருத்தமானது.

எனவே, எங்களது மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மிகக் கேட்டுக் கொள்கிறேன் — இந்தப் பிரச்சனையை உடனடியாக கவனித்து, சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவும். இது பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைச் சார்ந்த அத்தியாவசிய பிரச்சனை. இப்படியான தாமதங்கள் ஒருவரின் உயிரைக் கூட பறிக்கக் கூடும்...

For the past 15 days, the road in Thiruchakarapuram – Thirukalimedu, Kanchipuram has been dug up for laying new water pipelines. The project itself is important, but the issue is that the road has been left uncleared and unrepaired after the work. Because of this, heavy traffic has become a daily struggle for everyone in this locality.

While recording this video today, an ambulance was stuck in the traffic for more than five minutes. We do not know how critical the patient’s condition was — and that uncertainty is extremely worrying. It is painful to see emergency services getting delayed simply because of the contractor’s negligence in not restoring the road after digging.

I sincerely request our District Collector to take immediate action and ensure that the damaged road is repaired at the earliest. This is an urgent matter of public safety, and delays like this can cost lives.

District Collector Kancheepuram Kanchipuram District Police Collector Office at kanchipuram municipal commissioner, municipality office (Padmanababuram, Thiruvathipuram, Vandhavasi ,Thiruvallur, Sankarankoil, Dharmapuri, Gudiyartham,Arani,Pattukottai ,Aranthangi Incharge,Madurai CORP.A.C,Pattukottai and kancheepuram

16/09/2025

Drainage waste is being discharged near Devaki Super Market. Despite repeated complaints to the councilor, police station, and municipality, no action has been taken.

This spot is a heavily congested area and also the only route for ambulances to reach the hospital. Due to the drainage water, traffic congestion is getting worse. Officials are ignoring the issue, and we don’t know what else to do.

Friend, please share the video.

Kanchipuram District Police Collector Office at kanchipuram

Karate class in Kanchipuram
20/07/2025

Karate class in Kanchipuram

Join BSKA in Kanchipuram for elite martial arts: Karate, Judo, MMA, Gymnastics, Silambam. Sensei R. Bala, 30+ years experience. Build discipline, strength, and confidence.

07/07/2024

A cow fell down in canal Kanchipuram

06/02/2024

Step into the visual saga of an Indian girl's life, beautifully unfolded through AI-generated images from childhood to the age of 100. This journey not only ...

Happy Diwali wishes from me and my family
11/11/2023

Happy Diwali wishes from me and my family

Explore the most incredible ways to share greetings and celebrate the Festival of Lights with our curated collection of heartwarming wishes, stunning decorat...

https://youtu.be/YMXJPkDtNEQ
01/10/2023

https://youtu.be/YMXJPkDtNEQ

Discover the difficulties experienced by students while watching the Mark Antony movie at Aruna Theatre in Kanchipuram. Join us as we explore their concerns ...

Address

Kanchipuram
631501

Website

Alerts

Be the first to know and let us send you an email when KanchiPress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category