Peaceful Life

Peaceful Life Hi in this page you will find a lot of fun so stay tuned bye

*வெற்றியின் வழி**கடினமானது!**என்னைத் துணைக்கு**அழைத்துச் செல்!**"தன்னைம்பிகை"..!!**பாதையை தேடுபவன்**சாதாரண மனிதன்..!**பா...
29/10/2023

*வெற்றியின் வழி*
*கடினமானது!*
*என்னைத் துணைக்கு*
*அழைத்துச் செல்!*
*"தன்னைம்பிகை"..!!*

*பாதையை தேடுபவன்*
*சாதாரண மனிதன்..!*
*பாதையை உருவாக்குபவன்*
*"சாதனை மனிதன்"!!*

*உங்களிடம் எப்போதும் எதிர் மறையாகப் பேசுபவர்களை நினைத்து வருத்தப்படாதீர்கள்!*

*உங்கள் எதிர்காலம் எதிர்மறையாகப் பேசுபவர்களை நம்பி இல்லை..!*

*உங்களை எப்போதும் உயர்வாகவும், நேர்மறையாகவும் வைத்திருக்கும்!*

*உங்களின் எண்ணங்களை, உணர்வுகளை நம்பி உங்கள் வாழ்வை மேம்படுத்துங்கள்..!!*

* # "நம்பிக்கையே பலம்"!* 👍🏽💪👍🏽

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!2. தேவைக்கு செலவிடு.3. அனுபவிக்க தகு...
29/10/2023

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘

💐வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
💐💐💐

🤣
23/10/2023

🤣

21/10/2023

💐 *கவனம்*

மறைந்த தத்துவ ஞானி
*ஓஷோ ரஜ்னீஷ்*
----------------------------------

*வாழ்க்கையில் நீக்குதலின் நான்கு நிலைகள்.*

*1 ) 60 வயதில்,*

பணியிடம் உங்களை நீக்குகிறது.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு வெற்றிகரமானவராக இருந்தாலும் அல்லது சக்தி வாய்ந்தவராக இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு சாதாரண மனிதராகத்தான் திரும்புவீர்கள்.

எனவே, உங்கள் கடந்தகால வேலையிலிருந்த மேன்மைக்கான மனநிலையையும், உணர்வையும் பற்றிக் கொள்ளாதீர்கள்,

உங்கள் *ஈகோவை விட்டுவிடுங்கள்*, இல்லையேல் உங்கள் நிம்மதியை இழக்க நேரிடும்!

*2 ) 70 வயதில்,*

சமூகம் உங்களை படிப்படியாக நீக்குகிறது.

நீங்கள் சந்திக்கும் மற்றும் பழகிய நண்பர்களும் சக ஊழியர்களும் குறைவாகி விடுவர் ,

மேலும் உங்களின் முன்னாள் பணியிடத்தில் யாரும் உங்களை அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள்.

"நான் இருந்தேன்..." அல்லது "நான் ஒருமுறை..." என்று பழைய நினைவுகளை யாரிடமும் சொல்லாதீர்கள்,

ஏனென்றால் இளைய தலைமுறையினர் உங்களை அறிந்திருக்க மாட்டார்கள், கேட்கவும் மாட்டார்கள்....

அதுபோன்ற சூழலில் நீங்கள் அதைப் பற்றி சங்கடமாக உணரக்கூடாது!

*3 ) 80 வயதில்,*

குடும்பம் உங்களை மெதுவாக நீக்குகிறது.

உங்களுக்கு பல குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள் இருந்தாலும்,

பெரும்பாலான நேரங்களில் நீங்கள் உங்கள் துணையுடன் அல்லது தனியாகவே வாழ்வீர்கள்.

உங்கள் பிள்ளைகள் எப்போதாவது உங்கள் அறைக்கு வருகை தந்தால், அது அன்பின் வெளிப்பாடாகும்,

எனவே அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் பிஸியாக இருப்பதால், அடிக்கடி வராததைக் குறை கூறாதீர்கள்!

*4 ) 90 வயதில்,*

பூமி உங்களை அகற்ற விரும்புகிறது.

உங்களுக்குத் தெரிந்தவர்களில் சிலர் ஏற்கனவே நிரந்தரமாகப் பிரிந்து விட்டிருப்பார்கள்.

இந்த நேரத்தில், சோகமாகவோ துக்கப்படவோ வேண்டாம்,

*ஏனென்றால் இதுதான் வாழ்க்கை முறை,*

எல்லோரும் இறுதியில் இந்த வழியைப் பின்பற்றுவார்கள்!

எனவே,

நம் உடல் இன்னும் திறமையாக இருக்கும்போது, *வாழ்க்கையை நல்ல வழியில் முழுமையாக வாழுங்கள்!*

நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள்,

நீங்கள் விரும்புவதைக் குடியுங்கள்,

விளையாடுங்கள்

மற்றும் நீங்கள் விரும்பும் நல்ல விஷயங்களைச் செய்யுங்கள்.

🙏🏻

15/10/2023

வணக்கம் மக்களே காலையில் எழுந்தவுடன் உங்களுக்கு எதைப் பற்றிய சிந்தனை வந்தது அதுதான் உங்கள் இன்றைய வாழ்க்கை முழுவதும் மேலோங்கி இருக்கும் ஆகவே காலையில் எழுந்தவுடன் கடவுளை தொழுதல் நல்ல பாடல்களை கேட்டு மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுதல் பிடித்த உணவை உண்ணுதல் போன்ற பழக்க வழக்கங்கள் நம்மை மகிழ்ச்சி படுத்தும் நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் உங்களுக்கு பிடித்தவரோடு ஒரு ஐந்து மணித்துளிகள் செலவிட்டு தொலைபேசியில் அழைத்து பேசுங்கள் அவர்கள் கூறும் ஆறுதலான வார்த்தைகள் உங்களுக்கு மனமகிழ்ச்சியை உண்டாக்கும் மகிழ்ச்சியோடு யார் இருக்கிறார்களோ அவர்கள் நோயிலிருந்து மீண்டு விட்டீர்கள் என்று பொருள் ஆகவே மகிழ்ச்சியை தேடுங்கள் மகிழ்ச்சி வேறு எங்கோ இல்லை அது உங்களுக்குள்ளே இருக்கிறது உங்களுக்கு உற்று நோக்கங்கள் உங்களுடைய மகிழ்ச்சி எங்கே யாரிடம் இருக்கிறது என்று உங்கள் மனம் கூறு ஆகவே உங்கள் மனம் மகிழ்ச்சி தரும் மனிதர்களோடு உறவாடுங்கள் பேசி பழகுங்கள் உங்களுடைய பொழுதை செலவிடுங்கள் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும் வளமானதாகவும் மாற அது உங்களுக்கு துணை புரியும் நன்றி வணக்கம்

12/09/2023

*_மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள்_

*1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்*

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது.

பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது.

இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

*2. நன்றாகத் தூங்குங்கள்*

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக்குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம் அவசியம்.

*3. நடங்கள்! ஓடுங்கள்!*

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

*4. ஓய்வெடுங்கள்.*

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

*5. சிரியுங்கள்*

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

*6. மனம்விட்டுப் பேசுங்கள்.*

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

*7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்*

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

*8. தெளிவாகச் செய்யுங்கள்*

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

*9. விளையாடுங்கள்*

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

*10. மற்றவர்களையும் கவனியுங்கள்*

உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல்.
உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!

*வாழ்க வளத்துடன் 🙏*
*வளர்க நலத்துடன் 💐*
🙏🏼

Address

2/1 Aditya's Gokulam Palayakottai Road Kangeyam Tamilnadu India
Kangayam
638701

Opening Hours

9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peaceful Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share