10/02/2023
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திருமதி.சந்திர பிரியங்கா அவர்கள் இன்று மாலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் காரைக்கால் பகுதி மக்களின் கோரிக்கையான காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வசதி செய்து தர வேண்டுமென பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று P.R.T.C. மூலம் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில்,
காரைக்கால் ரயில் நிலையம் to காரைக்கால் பேருந்து நிலையம் வரை தினமும் அதிகாலை 4:30 மணியளவிலும் மற்றும் நண்பகல் 11:30 மணியிலும் மேலும் சனிக்கிழமை தோறும் அதே நேரத்திலும் காரைக்கால் ரயில் நிலையம் முதல் திருநள்ளார் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலையம் வரை பேருந்துகள் இயக்கப்படும் என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
-