Kariapatti360-காரியாபட்டி360

Kariapatti360-காரியாபட்டி360 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kariapatti360-காரியாபட்டி360, Media/News Company, Kariapatti.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் சுவாரசியங்கள் அனைத்தும் Kariapatti360 என்ற முகநூல், இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்படும்.

கோடை வெப்பத்தை தணிக்கும் பட்சத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இ...
07/05/2025

கோடை வெப்பத்தை தணிக்கும் பட்சத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் எதிரே காரியாபட்டி பேரூர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீர் , மோர் பந்தலை விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் S.P.செல்வம் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நீர், மோரினை வழங்கினார். உடன் காரியாபட்டி பேரூர் நிர்வாகிகள் மாலிக், கார்த்திக்,பகத், பவானி, சரவணன், சுரேஷ், நாகராஜ் உட்பட மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள மாமன்னர் மருது பாண்டியர்கள் திருவுருவ படத்திற்கும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருஉருவ சிலைக்கும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக வெற்றிக் கழகம்

28/04/2025

காரியாபட்டி என் ஜி ஓ நகர் சக்தி மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்.

நம்முடைய விருதுநகர் மாவட்டத்தின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆண்டவன் திரைப்படத்தில் நம்முடைய மாவட்டத்தின்...
16/04/2025

நம்முடைய விருதுநகர் மாவட்டத்தின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆண்டவன் திரைப்படத்தில்

நம்முடைய மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் உயர்திரு மேகநாத ரெட்டி அவர்களின் கதாபாத்திரத்தில், நடிகரும் இயக்குனரும் ஆன திரு.பாக்கியராஜ் அவர்கள் நடித்துள்ளார்

இந்த கதையை பற்றி பாக்கியராஜ் அவர்களிடம் கூறிய போது மிகவும் ஆச்சரியமாக கேட்டார் இப்படியெல்லாமா நடந்துள்ளது என்று...

பின்னர் அவருக்கான காட்சிகளை நடித்து முடித்த பின் இதுவரை இப்படி ஒரு படத்தில் நான் நடித்தது இல்லை மேலும் இனிவரும் காலங்களில் இந்த கதையை மையமாக வைத்து பல படங்கள் வர வாய்ப்பு உள்ளது என்று கூறினார்

பல போராட்டங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளிவரும் இப்படம் நம்முடைய அருப்புக்கோட்டை திருச்சுழி சுற்றுவட்டார மக்களுக்கு சமர்ப்பணம்

மே 16 முதல் ஆண்டவன் உலகமெங்கும் உங்கள் அபிமான திரையரங்குகளில்

காரியாபட்டி தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு வார விழாவை முன்னிட்டு காரியாபட்டி தமிழ்வாணன் இண்டஸ்டிர்ஸ்-ல் தீ தடுப்பு ஒ...
15/04/2025

காரியாபட்டி தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு வார விழாவை முன்னிட்டு காரியாபட்டி தமிழ்வாணன் இண்டஸ்டிர்ஸ்-ல் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தொழிற்சாலையில் தீப்பற்றினால் எவ்வாறு அணைப்பது போன்ற செய்முறை விளக்கப் பயிற்சி காரியாபட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சந்திரசேகர், சிறப்பு நிலைய அலுவலர் சசிகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

*BREAKING NEWS*நாளை ஆவியூரில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தம்.முன்னேற்பாடுகள் சரியில்லாத காரணத்தினாலும், கமி...
12/04/2025

*BREAKING NEWS*

நாளை ஆவியூரில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தம்.

முன்னேற்பாடுகள் சரியில்லாத காரணத்தினாலும், கமிட்டியினரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ள காரணத்தினாலும் ஜல்லிக்கட்டு விழா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அறிவிப்பு.

08/04/2025

மல்லாங்கிணறு அருள்மிகு ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத சென்னகேசவ பெருமாள் திருக்கோவில் பங்குனி பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் வெளுத்து வாங்கிய கனமழை.விருதுநகர் மாவட்டத்தில் 33.53 செ.மீ மழை பொழிவு,அதிகபட்ச...
07/04/2025

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் வெளுத்து வாங்கிய கனமழை.

விருதுநகர் மாவட்டத்தில் 33.53 செ.மீ மழை பொழிவு,

அதிகபட்சமாக காரியாபட்டியில் 6.42 செ.மீ மழையும், கோவிலாங்குளத்தில் 4.55 செ.மீ மழையும், அருப்புக்கோட்டையில் 1.9 செ.மீ மலையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

பத்திரிக்கைச் செய்திமதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்குச் செல்லும...
02/04/2025

பத்திரிக்கைச் செய்தி

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை தினந்தோறும் அனுமதிப்பது தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதன்படி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தினந்தோறும் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே சோதனைச் சாவடி வழியாக அனுமதிக்கப்படுவர். கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை 04.00 மணிக்குள் திரும்பிவர வேண்டும். உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மலைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு விலகி வேறு எந்தப்பகுதியிலும் நுழையக் கூடாது. மலையேற்றப் பாதைகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. பாலித்தீன், பிளாஸ்டிக், தீப்பெட்டிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது. மலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும், வனத்துறை சோதனைச் சாவடியில் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தடைசெய்யப்பட்ட பொருட்களை யாரும் கொண்டு செல்லக்கூடாது.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நாள்தோறும் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ)/ மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா.ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

02/04/2025

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஐயப்பன் கோவில்,மதுரா எலக்ட்ரிக்கல் கடை அருகில் இரும்புகடையில் மெயின் ரோட்டோரமாக பழைய வயர்கள் எரிக்கபடுவதால் சாலையில்‌ செல்லகூடியவர்களுக்கு சுவாசிக்க முடியாத நிலை உள்ளது.

District Collector, Virudhunagar Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டி நான்கு வழிச்சாலையில் லாரி மோதி சின்னகல்லுப்பட்டியைச் சேர்ந்த பெண் உடல்...
02/04/2025

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டி நான்கு வழிச்சாலையில் லாரி மோதி சின்னகல்லுப்பட்டியைச் சேர்ந்த பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் எதிரே எதிரே சென்ற வாகனத்தால் விபத்து.

விபத்தில் உயிரிழந்த பெண் எஸ்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி இவர் கம்பிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் கணினி இயக்குனராக வேலை செய்து வருகிறார்.

பணி முடிந்து வீடு திரும்பிய போது பின்னால் வந்த லாரி ஏற்றி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். Rip

02/04/2025

மதுரை - துாத்துக்குடி நான்கு வழி சாலையில் பழைய சுங்க கட்டணம் வசூலிப்பு

மதுரை -தூத்துக்குடி நான்கு வழிச் சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செப்.1ல் உயர்த்தப்பட உள்ளது. அதுவரை பழைய கட்டணம் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் 40 சுங்கச்சாவடிகளுக்கு அதிகாலை முதல் சுங்க கட்டணம் ரூ. 5 முதல் 15 வரை உயர்த்தப்படுகிறது. 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இல்லை. பழைய கட்டணமே வசூலிக்கப்பட உள்ளது. அதில் மதுரை -தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் உள்ள மதுரை எலியார்பத்தி, தூத்துக்குடி பி.பாண்டியபுரம் சுங்கச்சாவடியில் செப். 1ல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

சுங்கச்சாவடி அதிகாரி கூறியதாவது: 78 சுங்கச்சாவடிகளில் முதலில் 40 சுங்கச்சாவடிகளுக்கு ஏப்.1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படும். மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலை உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளுக்கு செப். 1ல் உயர்த்தப்படும். இது தான் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

Kariapatti360

01/04/2025

காரியாபட்டியில் ரப்பர் கழிவுகளை எரித்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் மர்ம நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

காரியாபட்டியில் அடிக்கடி ரப்பர் வேஸ்ட் கழிவுகளை மர்ம நபர்கள் எரித்து வருகின்றனர்.

இன்று மதியம் முதல் எரிக்கப்பட்ட ரப்பர் கழிவில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை காரியாபட்டி முழுவதும் பரவி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இதனால் குழந்தைகள் உட்பட ஒரு சிலருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டு வருகிறது.

கடந்த வாரம் இதே போல் இரவு நேரத்தில் பாழடைந்த கிணற்றில் ரப்பர் கழிவுகளை எரித்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

தொடர்ந்து ரப்பர் கழிவுகளை எரித்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் மர்மநபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Address

Kariapatti

Website

https://www.instagram.com/kariapatti360?igsh=MTUyY2xvamt3aXp

Alerts

Be the first to know and let us send you an email when Kariapatti360-காரியாபட்டி360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share