27/12/2024
இசை சக்ரவர்த்தி மாண்டலின் ராஜேஸ் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம்
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆன்மீக இசை சக்ரவர்த்தி மாண்டலின் ராஜேஸ் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். மாண்டலின் ராஜேஸ், ஏற்கனவே, சேலத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று திரும்பும் போது, கரூர் கல்யாண பசுபதீஸ்வர்ரை தரிசிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், இதை தொடர்ந்து காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக விளங்கிய மகாபெரியவா என அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகாசுவாமிகளின் 31-வது முக்தி தினம் இன்று கொண்டாடப்படுவதையடுத்து அவரது இசை கச்சேரி அங்கு நடைபெற உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
பேட்டி : மாண்டலின் ராஜேஸ் – இசைசக்ரவர்த்தி - மாண்டலின்