SpiritualSchooltv.Com

  • Home
  • SpiritualSchooltv.Com

SpiritualSchooltv.Com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SpiritualSchooltv.Com, News & Media Website, .

16/10/2024

H

03/02/2023

பேரானந்த நிலை;

சதா சர்வ காலமும் பேரின்பத்தில் திளைத்திருப்பதே “ஆத்மா ஞானம்” என்று கூறப்படுகிறதே, உங்கள் அனுபவம் என்ன ?

“நிலைகளை எதிர் நோக்கியே ‘ஞான விடுதலை’ ஒத்திப் போடப்படுகிறது என்பதையறிந்து கொண்டாய்... மிக உயர்ந்தவை என நீ நினைக்கும் எப்பேர்பட்ட நிலைகளுமே உன் மனதின் கற்பனைகளுக்குள்ளும், ஏற்கனவே அறிந்தவைகளுக்குள்ளும் அடங்கி விடுகிறது...

இயல்பிலிருந்து வேறுபடும் அவ்வித நிலைகளுமே அதன் எதிர்த்தன்மையை உள் வைத்துக்கொண்டே தோன்ற முடியும்.

பயிற்சி, முயற்சிகளின் மூலம் ஒருக்கால் பேரின்ப நிலையை எட்டிய மனம், அதன் தொடர்ச்சியாக பெருந்துக்க நிலையையும் சந்தித்தே தீரவேண்டும்...

“நிலைகளை” எப்போதும் அதன் எதிர்த் துருவங்கள் ஈர்த்துக் கொண்டேயிருக்கின்றன...

இயல்பான மையத்திலிருந்து ஒரு புறமாக இழுத்து நிறுத்திய ஊஞ்சலை விட்டு விட்டால் உடனடியாக மீண்டும் மையத்திற்கு வந்து நின்றுவிடுவதில்லை...

இப்படியும் அப்படியுமாக ஆடியே நிற்கிறது....

எல்லா நிலைகளுமே ஒரு வித இன்ப நாட்டமே...அது எல்லைகளுக்குட்பட்டது, இன்பங்கள் எல்லாவற்றிலும், துன்பங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளதை நீ அறிவாய்...

ஏற்கனவே நீ கற்றறிந்துள்ள, கேட்டறிந்துள்ள உன்னுடைய மனக் கற்பிதங்களுக்குட்பட்டே நீ கூறும் “பேரானந்த நிலையை” வரையறுத்துக் கொள்ள இயலும்...

எப்பேர்ப்பட்ட நிலையாயினும் அது வந்து போகக் கூடியதே என்பது உனக்கு தெளிவானதா...?”

“அப்படியானால் வந்து போகாத எப்போதும் உள்ள ஒரு நிலை உண்டா...?

“நிலைகள் மேல் உள்ள உன் காதல் இன்னும் தீர்ந்த பாடில்லை”

“ஞான விடுதலையை இயக்கமற்ற ஒரு நிலையாக மட்டுமே சுருக்கி வரையறுத்துக் கொள்ள முடியாது...

அது ஒரு ஒட்டு மொத்தமான இயக்கமும், இயக்கமற்ற தன்மையுமே, இயங்குதல் என்பது இயங்காமைக்கு எதிரல்ல என்கின்ற அடிப்படையைப் புரிந்து கொள்...

அது கடலாகவும், அலையாகவும் இருக்கிறது...

நிலையாகவும் நிலையற்றதாகவும் இருக்கிறது...

உன் எந்த கற்பனைகளுக்குள்ளும் அதை கொண்டு வர
முடியாது, ஏற்கனவே இக்கணத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கும் விஷயத்தை எப்படி நினைவுக்களுக்குள் அடக்க முடியும்...?

இப்போது வந்துபோய்க கொண்டிருக்கும் மூச்சுக் காற்றைக் அது எப்படியிருக்கும் என்று கற்பனை செய்வதைப் போலவே...

உண்மையை நீ உணர முடியாது, அனுபவிக்கவும் முடியாது....

அனுபவமின்றி பின் எப்படித்தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும் ஐயா ?

விடுதலையை நீ நுகர்ந்து அனுபவிக்கவே நாட்டம் கொள்கிறாய்...

அனுபவமே பிளவுபடுவதுதான்... முதலில் அனுபவிப்பதற்கு
“நீ” அல்லது “நான்” என்று ஒன்று இல்லை...

அனுபவத்திலிருந்து உருவாகும் மயக்கமே அது...

‘நான் ஓய்வாக இருக்கிறேன்...’, ‘தளர்வாக இருக்கிறேன்...’, ‘மகிழ்ச்சியாக இருக்கிறேன்...’ என்று அனுபவித்து உணர மனம் இரட்டிப்பாகியே தீரவேண்டும்...

ஆனால் விடுதலை என்பதே உன் நிஜமான ஒருமனத் தன்மையை அறிந்து கொள்வதே...

இங்கே, இப்போதே... உன்னுள் வருவதையும் போவதையும் எதுவானாலும் சுதந்திரமாக கடந்து போக அனுமதிப்பதில் உள்ளது...

ஒட்டு மொத்த இயக்கமாக அது பிரவகித்துக் கொண்டிருக்கிறது... “நான்” உணர்வும் அதன் பாகமே...

சுதந்திரமான பிரவாகத்தில் ஒவ்வொரு நொடியும் “கற்றல்’ துவங்கி நீ எதிர்கொள்ளும் எல்லா சூழல்களுமே உனக்கு ஒரு மெய்ப் பாடமாகிவிடும்...

உன் அடையாளங்களை எதிர்ப்பற்று, ஏற்று அனுமதிக்கையில் அடிப்படை இயல்பில் மாற்றமடைந்து, உன் இருப்பினை எல்லைகளற்றதாக கண்டு கொள்ளலாம்..

முற்காலத்தில் அந்த எல்லயற்றதையே, “நிலை”களாக்கி வர்ணிக்கும்போது “பேரானந்தம்” என்று அழகுறக் குறிப்பிட்டிருக்கலாம், அல்லது யோக சாதனைகள் மூலம் அடையும் சில நிலைகளையும் அவ்வாறு குறிப்பிட்டிக்கலாம்.

எது எவ்வாறாயினும் “ஞான விடுதலை” மிக எளிதானது...
பூரண ஏற்புத் தன்மையில் எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்ற குளிர் நெருப்பு அது.

ஸ்ரீ பகவத் ஐயா.

https://youtu.be/R_h4OqFnT4w
04/12/2022

https://youtu.be/R_h4OqFnT4w

அனைவருக்கும் வணக்கம். ஸ்பிரிச்சுவல் ஸ்கூல் வழங்கும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் ஜூம் சந்திப்பு(Zoom meeting).** தல....

https://youtu.be/tBpGQ0jOTzc
04/12/2022

https://youtu.be/tBpGQ0jOTzc

அனைவருக்கும் வணக்கம். ஸ்பிரிச்சுவல் ஸ்கூல் வழங்கும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் ஜூம் சந்திப்பு(Zoom meeting).** தல....

25/11/2022

#பதஞ்சலி_யோக_சூத்திரம்....

பதஞ்சலியின் யோக சாஸ்திரங்களின்படி நம் உடல் ஒரு உடலாக இல்லை.

அது ஐந்து உடல்களாக உள்ளது.

ஒரு உடல் ஐந்து உடல் அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்து விதைகளாக உடல் அமைந்துள்ளது.

பதஞ்சலி கூறும் முதல் உடல் அன்னமய கோஷா எனும் உணவு உடம்பாகும்.

உணவு மண்ணிலிருந்து வருவதால் அதை உண்டு தான் உயிர் வாழ்கிறாய்.

மொத்ததிற்கும் அடிப்படையாக உணவு உடம்பு அமைந்துள்ளது.

மிக லகுவான உணவாக உண்ணும்போது எல்லாமே இயல்பாக செயல்படுகிறது.சீரணத்திற்கு ஒத்துவராத உணவை உண்ணும்போது உடல் வேறுவிதமாக செயல்பட ஆரம்பிக்கிறது.

உன்னை விரைவில் சோர்வடைய வைத்து உறக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது.

விரதங்கள் இருப்பது அதனால் தான்.விரதங்கள் இருக்கும்போது உணவு உடம்பின் செயல்பாடுகளை உணர்ந்து அதிலிருந்து விலகி இருத்தல் அவசியம்.

உணவின் மீதே கவனத்தை வைத்து விரதமிருந்தால் உடலில் அமிலங்கள் சுறந்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இருக்க இந்த அன்னமய கோஷா எனும் உணவு உடல் அவசியமாகும்.

இந்த உடலில் மட்டும் கவனமாக இருப்பவன் உணவே வாழ்வென இருப்பவன் மிக ஆபத்தானவனாகவும் அடுத்தகட்ட உடலுக்குள் நுழைய முடியாதவனாகவும் இருப்பான்.

அடுத்து பிரணாமய கோஷா.
பிராண உடல் என்பதாகும்.

இது தான் சக்திக்குண்டான உடல்.மின் தன்மையானாது, காந்த தன்மையானது, கவர்ச்சிதன்மையானதாக உள்ளது.

இந்த பிராண உடலில் மிகுந்த கவனமுள்ளவனின் அருகே மற்றவர் செல்லும்போது அவர்களுக்கும் அந்த சக்தி பரவுகிறது.

அவர்களும் புதுவிதமாக தெம்பாகிறார்கள்.ஆனால் முதலுடம்பான உணவு உடலில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் அருகே நீ செல்லும்போது அவர்கள் உன் உடலிலுள்ள சக்தியையும் உறிந்துவிடுவார்கள்.

ஊணுடல்வாதிகளின் அருகே வாழ்வது மிக அருவருக்கத்தக்கதாகவும் அபாயகரமானதாகவும் அமையும்.

உணவுக்கு அடிமையானவன் வளர்ச்சியடையாதவனாக குழந்தையாகவே தான் இருப்பான்.

பிரணாயம கோஷா உடலுக்குள் அமைந்திருந்தாலும் உன்னை சுற்றி ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்துகிறது.இந்த பிராண உடல் உன் உணவு உடலின் நோயை ஆறு மாதங்களுக்கு முன்பே காட்டிகொடுத்துவிடும்.

பிராணஉடல் சுத்தமாக இயங்கும்போது உன் ஊன்உடல் அபாரமாக இருக்கும்.

அதனால் தான் யோகா கற்றுதருபவர்கள் முதலில் பிரணாயமத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

மனித உடல் இறந்தாலும் பதிமூன்று நாட்களுக்கு அந்த பிரணாமய உடல் இறப்பதில்லை.

அந்த ஒளிவட்டம் சுகாதாரமாக இயங்கிகொண்டிருக்கும்.

ஞானமடைந்தவர்களின் உடல்களை எரிக்காமல் புதைப்பதற்கு காரணம் அவர்களின் உன்னதமான பிராண உடலின் ஒளிவட்டம் உலகில் நிலைத்திருக்கும் என்பதால் தான்

எரித்துவிட்டால் அது இரண்டொரு நாட்களில் வானில் பரவெளியில் கரைந்துவிடும்.

அரவிந்தர் போன்றவர்களின் உடலை அழிக்காமல் சமாதியில் வைத்திருப்பதற்கு காரணம் அவர் ஆன்மா அங்கேயே இருக்கவேண்டும் என்பதற்காக தான்.

சில நேரங்களில் அரவிந்தரின் பாதசுவடுகள் இருப்பதை அங்கே நீங்கள் காணமுடியும்.

அவர் ஆன்மா பிராண உடல் இன்றும் ஆரோக்கியமாக தான் இயங்குகிறது.அவர் பிரணாயம கோஷாவில் இயங்குபவர் தான்.

அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தினார்கள்.

ஒரு ஆரோக்கியமான ஓட்டபந்தய வீரரை அழைத்து ஒரு குழந்தையை பார்த்து அதன் நடவடிக்கைகள் போலவே ஒருநாள் முழுக்க நடிக்கச் செய்தார்கள்.

எட்டு மணிநேரத்தில் அவன் கீழே விழுந்துவிட்டான்.ஒரு சாதாரன குழந்தையிடம் அவன் தோற்றுவிட்டான்.

ஏனெனில் குழந்தை குறைவாக உணவு உண்டாலும் பரபரப்பாக இயங்குகிறது.

அதற்கு காரணம் அது எப்போதும் மூச்சை தன் தொப்புள் வரை இழுக்கும்.

மனிதன் தன் இருதய பகுதியிலிருந்து சுவாசம் மேற்கொள்கிறான்.

தொப்புளில் மனம் செலுத்தி மூச்சு செயல்படும்போது உடல் நல்ல ஆரோக்கியமாக இயங்கும்.

மார்புகூட்டில் மூச்சை இயக்கும்போது விரைவில் சோர்ந்து போகிறாய்.

ஆனால் ஒரு வீடு எரிந்துகொண்டிருக்கும்போதோ வெள்ளம் வரும்போது ஒரு மிருகம் துரத்தும்போதோ மார்புக்கூட்டிலிருந்து தான் மூச்சை செலுத்தவேண்டும்.

அங்கே தான் உடனடி சக்தி கிடைக்கும் . உடனடியாக தப்பிக்கலாம்.

ஆனால் மற்ற நேரங்களில் தொப்புள் வரை மூச்சை செலுத்துவதே சுகமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும்.

மூன்றாவது மனோஉடல்.

மனோமய கோஷா எனப்படும் உடலாகும்.

இது மனிதன் எனும் சொல்லில் வந்ததாகும்.இதுவே MAN என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.

கிருஸ்தவ முகமதியர்களிடம் இது தான் முக்கியமானதாகும்.

இரவல் வாங்கப்பட்ட மனமே இந்த மக்களிடம் இருப்பதால் மனோஉடல் வளர்ச்சியடையாமலே போய்விடுகிறது.

இவர்கள் ஜெராக்ஸ் மெஷினாக கார்பன் காப்பியாக வாழவே பழக்கப்பட்டுள்ளனர்.

எந்த நேரத்திலும் இரவல் மனதிலே மட்டுமே முடிவுகள் எடுப்பார்கள்.

சொந்த மனம் இவர்களுக்கு செயல்படாமலே இருக்கிறது.

மற்றவர்களோடு ஒப்பிடும் மனப்பான்மையில் வருவது தான் நம்பிக்கையெனும் சொல்.

நம்பிக்கை என்பதே தவறான மனம் என்றே பொருள் கொள்ளவேண்டும்.

சுயமாக வாழ்பவர்களிடையே நம்பிக்கை என்ற சொல் தேவையில்லாமல் போகிறது.அவர்களிடம் மட்டுமே மனோ உடல் வளர்ச்சியடைகிறது.

அடுத்து நான்காவது உணர்வுடல்.

விக்யானமய கோஷா எனப்படுகிறது.

இது மிக தெளிவானது.இது போராடுவதில்லை .நடப்பது நடக்கும் என காத்திருக்கும்.அது நடக்கும்போது உணர்ந்துகொள்ளவேண்டியது தான்.

ஐந்தாவதாக ஆனந்த உடலெனும் ஆனந்தமய கோஷா.

இது உன்னிடத்திலிருந்து வெகுதொலைவிலுள்ளதாகும்.

இது ஆசிர்வதிக்கப்பட்ட உடலாகும். உணர்வுகளுக்கெல்லாம் மேம்பட்ட உடலிதுவாகும்.

மேற்கண்ட ஐந்து உடல்கள் ஐம்பூதங்களால் ஆனதாகும்.பூமி, நெருப்பு,நீர், காற்று ஆகாயம் என பிணைக்கப்பட்டது தான் நமது உடல்.

ஓஷோ

18/11/2022

மூலதார சக்தி

சக்தியானது பல பிறவிகளாக மூலாதாரத்தை நோக்கி பயணித்து வருகிறது. புதிய சக்திகள் உருவாகும்
போது கூட அது கீழ்நோக்கியே செல்கிறது.

அதனால் தான் தியானத்தின் மூலம் பெறப்படுகிற சக்தியானது முதலில் காமத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

இதுவரை நீ கண்டிராத புது உணர்வு உனக்குள் தோன்றுகிறது. காமம் அதிகமாக தூண்டப்படும்போது இது வரை உனக்கு தெரிந்த, பழக்கமான ஒரே வழி கீழே உள்ள சக்கரம் தான். எனவே மூலதாரத்தின்மூலம் அதை தணிக்க முற்படுகிறாய்.

தியானத்தில் பெறப்படும் அபரிமாத சக்திகள் மூலாதாரம் எனும்
காமச்சக்ரத்தை நோக்கியே செல்லும்.

இப்போது தான் நீ விழிப்போடு
இருக்க வேண்டும். அதோடு போராடக் கூடாது. விழிப்புடன் மட்டுமே இருந்தால் போதுமானது.

உன்னுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அங்கே ஏதும் நடக்கப்போவதில்லை. நீ ஒத்துழைக்கும்போது மட்டுமே அந்த சக்தியானது வீணாகும்.

நீ விழிப்போடு இருக்கும்போது அதற்கான உந்துதலில் ஈடுபடாதபோது மூலாதாரத்திலே சக்தி தடைப்பட்டு நிற்கும்.

அந்த தியான சக்தியானது அடக்கப்படுவதில்லை தடுக்கப்படுகிறது. மேலும் மேலும் சக்தி பெருகும்போது அதற்கான வழி அடைக்கப்பட்டிருக்கும்போது சக்தி தேக்கம் உண்டாகிறது.

நீ செய்வதெல்லாம் மனதையும் உடலையும் விழிப்பாக வைத்திருப்பது தான்.

தியான சக்தியானது பெருகும்போது மூலாதார சக்ரத்தில் சக்தி வெளியேற வழியற்று போய்விடுவதால் அதுமேல் நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறது.

சக்தி பயணிக்க ஏதுவாக புதுவழி திறந்து கொள்கிறது

மூலாதார சக்தி மேல்நோக்கி பயணிக்க ஆரம்பித்தவுடன் உன் உடலில் புது கவர்ச்சி ஏற்பட ஆரம்பிக்கிறது.

உடலில் காந்த சக்தி உண்டாக ஆரம்பித்து புது தேஜஸ் உண்டாகிறது. அந்த கவர்ச்சி சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

இந்த பயிற்ச்சியின் வாயிலாக கவர்ச்சியற்றவன் கூட மிக கவர்ச்சியானவனாக மாறிவிடுகிறான்.

இது வரை பார்த்திராத மனிதர்கள் கூட உங்கள் மேல் ஈர்ப்பு கொள்கிறார்கள். எதிர்பாலினர் உங்கள் மேல் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறார்கள்.

இந்த சக்திமயமாான உடலில் ஒருவித அதிர்வலைகள் உண்டாக ஆரம்பிக்கின்றன.

இந்த சக்ஸ்ரார சக்தியின் மூலம் பலருக்குள் ஆன்மீக மாற்றத்தை உன்னால் உண்டாக்க முடியும்.

இந்த ஏழாவது சக்திமையமான சகஸ்ராரம் எனும் பிரம்ம சக்ராவிலிருந்து அடுத்து நீ இந்த பிரபஞ்சத்தோடு எளிதில் கரைந்துவிடலாம்.

OSHO
Ta**ra.

15/11/2022

ஓஷோ..........
உங்களுடைய முந்தைய பிறவிக்கும், இந்தப் பிறக்கும் உள்ள இடைவெளியைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

தன்னை முழுமையாக அறிந்து கொள்வதற்கு முன், எடுக்கும் பிறவிகள் அனைத்தும் அவர்களது விருப்பப்படி சுதந்திரமாக அமையாது.

அப்படிப்பட்டவர்கள் எடுக்கும் பிறவிகள் அவர்களது எண்ணப்படி ஒருக்காலும் இருக்காது.

முழுமையான பிரக்ஞையில் மற்றும் தன்னை முழுமையாக அறிந்து கொள்வது மூலமாகவே, நீங்கள் உங்கள் பிறவியை உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்க முடியும்.

இந்த உலகத்தில், காரணமின்றி எதுவும் நடப்பதில்லை. அடுத்த பிறவியை எடுப்பதற்கு இரண்டு காரணங்களில் ஒன்றுதான் இருக்க வேண்டும். அவைகளில் ஒன்று ஆசை, இரண்டாவது கருணை. இதைத் தவிர மூன்றாவது காரணம் என்று எதுவும் இல்லை.

என்னுடைய முற்பிறவி 700 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. மஹாவீரரின் முன் பிறவி அடுத்த பிறவிக்கு சுமார் 250 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டது. புத்தருடைய முன் பிறவி, புத்தாவாக அவதரிப்பதற்கு முன்பு சுமார் 78 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. புத்தாவைப் பொருத்த வரையில், அவருடைய முற்பிறவிக்கு சாட்சியாக, சில மக்கள் அப்பொழுது வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். ஏன், மஹாவீரரின் வாழ்வில் கூட, சில பேர்களால், அவருடைய முன்பிறவியில்; தாம் அவரைச் சந்தித்ததை நினைவு கூற முடிந்தது.

கிருஷ்ணாவின் முற்பிறவி, கிருஷ்ணாவாகப் பிறப்பதற்கு முன் சுமார் 2000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. ஆகவே, கிருஷ்ணா வெளியிட்ட பழைய ஞானம் பெற்ற ரிஷிகளின் பெயர்கள் மிகவும் தொன்மையானது. அவைகளைச் சரித்திரப் பூர்வமாகக்கூட ஞாபகப்படுத்திப் பார்க்க முடியாது.

என்னைப் பொருத்தவரையில், 700 வருடம் என்பது ஒரு நீண்ட இடைவெளிதான். ஆனால், ஒருவர் உடலால் கட்டுப்படுத்தப்படாது இருக்கும் பொழுது, ஒரு விநாடியும், 700 வருடமும் ஒன்றுதான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை.

உடல் இருந்தால் தான், கால அளவுக்கு மதிப்பு உண்டு. உடலுக்கு அப்பால், 700 வருடத்திற்கும் 7000 வருடத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. உடலை எடுத்த பிறகுதான், இந்த வித்தியாசங்கள் ஏற்படுன்றன.

முற்பிறவியில் நடந்த இறப்பிற்கும், இந்தப் பிறவியில் ஏற்பட்ட இறப்பிற்கும் இடையில் ஏற்பட்ட கால அளவைக் கணக்கிடும் முறை மிகவும் சுவாரசியமானது. என்னையே எடுத்துக்கொண்டால், நான் 700 வருடங்களாக இங்கு இல்லை என்பதை எப்படி நான் அறிந்துகொண்டேன்? இதை நேரடியாகக் கணக்கிடுவது என்பது மிகவும் சிரமமான காரியம். ஆனால், இந்த கால இடைவெளியில் எத்தனை மக்கள் மறுபிறவி எடுத்திருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு, என் பிறவியின் காலகட்டத்தைக் கணக்கிட முடியும்.

உதாரணமாக, எனக்கு ஒருவரை 700 வடருங்களுக்கு முன் தெரிந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த 700 வருட இடைவெளியில், அவர் 10 பிறவிகளை எடுத்திருக்கலாம். இருந்தும், அவரிடம் அந்த 10 பிறவிகளின் ஞாபகம் அவரது அடிமனத்தில் இருந்து கொண்டே இருக்கும். அந்த ஞாபகத்தை, நான் கண்டுபிடித்து, நான் எத்தனை வருடங்களுக்கு முன்பு, உடலில் இருந்தேன் என்பதைக் கணக்கிடமுடியும்.

வேறுவகையில், இதைக் கணக்கிடுவது மிகவும் கடினம். ஏனென்றால் உடலோடு இருக்கும் பொழுது கணக்கிடும் கால அளவுக்கும், உடல் இல்லாமல் இயங்கும் நிலையில் உள்ள கால அளவுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு.

இந்த 700 வருட இடைவெளி, எனக்குப் பலவித சங்கடங்களை ஏற்படுத்தி விட்டது. அவைகள் என்னவென்றால், முதலில் மறுபிறவி எடுப்பது என்பது போகப் போக மிகவும் கடினமாகி விட்டது. ஆன்மீகத்தில் ஒரு நிலையை அடைந்தவர்களுக்கு, மறுபிறவி எடுக்க சரியான தாய் தகப்பனார் கிடைப்பது கஷ்டம். ஆனால், புத்தர் மஹாவீரர் காலத்தில், அவ்வளவு கஷ்டம் இல்லை. தினமும், அப்படிப்பட்ட உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்களுக்கு, சரியான கர்ப்பப்பை கிடைப்பது சுலபம்தான்.

இந்த 700 வருட இடைவெளியைப் பொருத்த வரையில், இன்னும் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில், இதைப் பற்றிப் பேச்சு வரும் என்று நான் நினைக்கவே இல்லை. சில நாட்களுக்கு முன், பூனாவில் திடீரென்று, இந்த விஷயம் மேலே வந்தது. என்னுடைய தாயார் அங்கு வந்தார். ராம்லால் புங்காலியா என்பவர், என் தாயாரிடம், என்னுடைய இளமைக்காலத்தில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தி, சொல்ல முடியுமா என்று கேட்டிருக்கிறார்.

இதைப் போல ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நான் நினைக்கவே இல்லை, மேலும், அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. சமய பொது மேடையில், நான் பிறந்து மூன்று நாட்களுக்கு அழவே இல்லை. என்று என் தாயார் சொன்னதாக வெளியிட்டார். மேலும், அந்த மூன்று நாட்களுக்கு, நான் பால் கூட அருந்தவில்லையாம்! இது,என் தாயாருக்கு, என்னைப் பற்றி முதலில் எழுந்த ஞாபகம்.

ஆமாம். இது உண்மைதான். 700 வருடங்களுக்கு என்னுடைய முற்பிறவியில், அப்பொழுது 21 நாள் விஷேசமான. ஆன்மிகத் தியானத்தில் இருந்தேன். அது இறப்புக்கு முன் செயக் கூடியது. அதாவது 21 நாள் உபவாசம் மற்றும் ஆழந்த தியானம் இருந்து, நான் என் உடலை விட்டு நீங்க வேண்டும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், என்னால் 21 நாட்களை முடிக்க முடியவில்லை . அதற்கு பாக்கி இன்னும் 3 நாட்கள் இருந்தன. மூன்று நாட்கள் உபவாசத்தை இந்தப் பிறவியில் முடிக்க வேண்டியிருந்தது.

இந்த வாழ்க்கை, அதன் தொடர்ச்சிதான். இந்த 700 வருட இடைவெளிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. மூன்று நாட்கள் பாக்கி இருந்ததற்குக் காரணம், நான் அப்பொழுது கொல்லப்பட்டேன். அதாவது 21 நாட்கள் முடிவு பெறுவதற்கு, 3 நாட்களுக்கு முன்பே
கொல்லப்பட்டேன்.

அந்த மூன்று நாட்கள், இந்தப் பிறவியில் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. அப்படி அந்த 21 நாட்களை அந்தப் பிறவியிலே
பூர்த்தி செய்து இருந்தால், நாள் அடுத்த பிறவி எடுக்க வேண்டியிருந்திருக்காது.

இப்பொழுது, இதைப் பொருத்த வரையில்
நீங்கள் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த மெல்லிய திரைக்கு பின்னால் நின்று கொண்டு, அதைத் தாண்டுவது என்பது மிகவும் கஷ்டம், மேலும், அந்தத் திரை எப்பொழுது விலகும் என்னும் விழிப்போடு பார்த்துக் கொண்டு காத்திருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல, ஏன், அது முடியாத காரியம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய உபவாசத்தை 3 நாட்கள் கழித்து வெற்றிகரமாக முடிந்திருந்தால், அது நிகழ்ந்திருக்கும். ஆனால் அதற்குள் நான் கொல்லப்பட்டேன்.

ஜூடாஸுக்கு (JUDAS), ஜீசஸின் பகை இல்லாவிட்டாலும், அவன் எப்படி அவரை பலமுறை கொல்ல முயன்றானோ, அதைப்
போல என்னைக் கொன்ற ஆளுக்கும், எனக்கும் எந்த பகையும் கிடையாது. இருந்தாலும், அவன் தனக்குள் பகை உணர்வை வளர்த்து வந்திருக்கிறான். இதை என் பிரசங்கத்தில் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

ஆனால், அவன் என்னைக் கொன்றது, மிகவும் மதிப்பு வாய்ந்தது தான். நான் இறக்கும் போது, 3 நாள் உபவாசம் பாக்கி இருந்தது. நான் ஞானம் அடைவதற்கு, சென்ற பிறவியில் 21 வருடங்கள் கழித்து பயன் கொடுத்தது! அதை சென்ற பிறவியிலேயே பாக்கியுள்ள, 3 நாட்களில் அடைந்திருப்பேன்.

அந்த மூன்று நாட்களில் உள்ள ஒவ்வொரு நாளுக்கும் ஈடாக, இந்தப் பிறவியில் 7. வருடங்களை செலவழிக்க வேண்டியதாகி விட்டது! ஆகவே தான், நான் சென்ற பிறவியில் முழுமையாக ஞானம் அடைந்து, இந்தப் பிறவியை எடுத்தேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை.

ஆகவேதான், நான் 'கிட்டத்தட்ட'ஞானம் அடைந்த நிலையில், இந்தப் பிறவியை எடுத்தேன் என்று கூறுகிறேன். அந்தத்
திரையை அப்பொழுதே தூக்கியிருந்தால், என் விருப்பப்படி ஒரே ஒரு பிறவியை எடுத்திருக்கலாம். ஆனால், அந்த மூன்று நாள் உபவாசம் முடியாத வேளையில், நான் கட்டாயமாக மறுபிறவி எடுக்க நேர்ந்தது.

இப்பொழுது, என்னால் இன்னும் ஒரு பிறவி எடுக்க முடியும். அது உண்மையிலேயே உபயோகமாக இருந்தால், நான் அதைச்
செய்வேன். இந்தப் பிறவியின் முழுவாழ்க்கையில், அடுத்த ஒரு பிறவி
எடுப்பது உண்மையிலேயே உபயோகமாக இருக்கும் என்று துருவித் துருவி ஆராய்வேன். அப்படி அது உபயோக இருக்கும் என்று நான் கருதினால், நான் மீண்டும் மறுபிறவி எடுப்பேன். இது என் விருப்பத்தில் நடைபெறும். அப்படியில்லாவிட்டால், இந்த விஷயம் முடிவு பெற்றது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆகவே, நான் முற்பிறவியில் கொல்லப்பட்டது, ஒரு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக
அமைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.

#ஓஷோஓஷோ--
ஓஷோவின் புத்தகம் "அறிந்தவைகளுக்கு அப்பால்"

14/11/2022

மனிதனின் முடிவுகள்

நான் ஒரு சிறு கதை கூறுகிறேன். இது சீனாவில் லாவோட்சு வாழ்ந்த காலங்களில் நிகழ்ந்தது. இந்த கதையை லாவேட்சு மிகவும் விரும்பினார். லாவேட்சுவை பின்பற்றியவர்கள் பல தலைமுறையாக இந்த கதையை திரும்ப திரும்ப கூறி வந்தனர். இந்த கதையில் மேலும் மேலும் அதிக அர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். இந்த கதை தொடர்ந்து வந்தது. இது ஒரு வாழும் உண்மையென மாறி விட்டது.

கதை மிகவும் எளிமையானது. ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், “இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை.” என்று கூறி விட்டான். அவன் மிகவும் ஏழை, எல்லா வழியிலும் சபலம் வர வாய்ப்பிருந்தது. ஆனால் அவன் அந்த குதிரையை விற்கவில்லை.

ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, “நீ ஒரு முட்டாள் கிழவன். இப்படி நடக்குமென்று – என்றாவது ஒருநாள் யாராவது குதிரையை திருடி விடுவார்கள் என – எங்களுக்கு முன்பே தெரியும். நீயோ மிகவும் ஏழை – இப்படிப் பட்ட அரிதான ஒன்றை உன்னால் எப்படி பாதுகாக்க முடியும்? இதற்கு பதிலாக அதை நீ முன்பே விற்றிருக்கலாம். நீ என்ன விலை கேட்கிறாயோ அந்த விலைக்கு விற்றிருக்கலாம். நினைத்து பார்க்க முடியாத விலை கிடைத்திருக்கும். இப்போது குதிரை போய்விட்டது. உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்” என்றனர்.

அந்த கிழவன், “அதிகம் பேச வேண்டாம் – குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?” என்றான்.

மக்கள், “எங்களை முட்டாளாக்காதே. நாங்கள் சிறந்த தத்துவவாதிகளல்ல, ஆனால் இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை.” என்றனர்.

அந்த கிழவன், “லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது – அது கெட்டநேரமா நல்லநேரமா – ஏனெனில் இது நிகழ்வின் ஒரு பகுதியே. இதை தொடர்ந்து என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்?” என்றான்.

மக்கள் சிரித்தனர். கிழவனுக்கு புத்தி பிசகிவிட்டதென அவர்கள் நினைத்தனர். அவன் எப்போதும் கொஞ்சம் கிறுக்கனாகவே இருப்பான். அது எல்லோருக்கும் தெரியும். இல்லாவிடில் இந்த குதிரையை நல்ல விலைக்கு விற்று பணக்காரனாகி இருக்கலாம். ஆனால் அவன் விறகுவெட்டியாகவே வாழ்ந்துவந்தான். அவனுக்கும் மிக வயதாகிவிட்டது. இருப்பினும் காட்டுக்கு சென்று மரங்களை வெட்டி கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தான். அவன் சம்பாதிப்பது கைக்கும் வாய்க்குமே போதவில்லை. அவன் வறுமையிலும் வேதனையிலும் வாடிக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஒரு கிறுக்கன் என்பது மிகவும் ஊர்ஜிதமாகிவிட்டது.

பதினைந்து நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்த குதிரை திரும்பி வந்துவிட்டது. இது திருடப்பட வில்லை. அது காட்டுக்கு தப்பி ஓடிவிட்டது. இப்போது தான் மட்டுமின்றி அது தன்னுடன் கூட தன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளது. திரும்பவும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து,“அந்த கிழவனிடம், பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. நாங்கள் வலியுறுத்தி கூறியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்றனர்.

அந்த கிழவன், “மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது என்றும் அதனுடன் இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள்.- ஆனால் தீர்மானிக்காதீர்கள். இது ஆசீர்வாதமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. முழு கதையும் தெரியாமல் எப்படி உங்களால் முடிவு செய்ய முடிகிறது? ஒரே ஒரு பக்கத்தை படித்துவிட்டு முழு புத்தகத்தையும் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் ஒரே ஒரு வரியை படித்துவிட்டு எப்படி அந்த பக்கத்தை பற்றி பேச முடியும்? ஒரே ஒரு எழுத்தை மட்டும் பார்த்துவிட்டு எப்படி அந்த வரியை பற்றி கூற முடியும்? நமது கையில் அந்த எழுத்து அளவு கூட இல்லை, வாழ்வு மிகப் பெரியது – எழுத்தின் பகுதிதான் இருக்கிறது. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். இது ஒரு ஆசீர்வாதம் எனக் கூற வேண்டாம், யாருக்கும் தெரியாது. முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.” என்றார்.

இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். அதனால் அவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர், ஆனால் உள்ளே இவன் கூறுவது தவறு என நினைத்துக் கொண்டனர். பனிரெண்டு குதிரைகள் அந்த குதிரையுடன் வந்திருக்கின்றன. சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும் அவைகளை விற்று ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தனர்.

அந்த பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் இளஞன். இவன் அந்த குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்க்குள் ஒரு குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும் கூடி – மக்கள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான், உங்களைப் போலவே தான் – தீர்மானித்தனர். அவர்களின் முடிவு மிக எளிதாக வந்துவிடக் கூடியது. அவர்கள், “நீங்கள் கூறியது சரிதான். மறுபடியும் நீங்கள் சொல்வதுதான் சரி என நிருபணமாகியிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமல்ல, இது ஒரு கெட்டகாலம்தான். உனது ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். உன்னுடைய வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு. இப்போது நீ மிகவும் கஷ்டப் படப் போகிறாய்.” என்றனர்.

அந்த வயதானவன், “நீங்கள் முடிவெடுப்பதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளீர்கள். வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் தனது கால்களை ஒடித்துக் கொண்டான். என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்?– யாருக்கும் தெரியாது. மறுபடியும் இது நிகழ்வின் ஒரு பகுதியே, முழுமையாக கொடுக்கப்படவில்லை. வாழ்க்கை பகுதிகளாகத்தான் நிகழ்கிறது, முடிவு முழுமையை ஒட்டித்தான் எடுக்க முடியும்.” என்றான்.

இது நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின் இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிட சென்றது. நகரத்தின் அனைத்து வாலிபர்களும் படைக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெரியவரின் மகன் மட்டும் விட்டுவைக்கப் பட்டான். ஏனெனில் அவன் முடமானவன். மக்கள் எல்லோரும் அழுது அரற்றினர். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப் பட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்க்கான சாத்தியக் கூறே இல்லை, ஏனெனில் அவர்கள் சண்டையிடப் போகும் நாடு மிகப் பெரியது. இந்த சண்டை தோல்வியுறப் போகும் சண்டைதான். அவர்கள் திரும்பி வரப் போவது இல்லை. அந்த நகரம் முழுவதும் அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தது. அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து, “நீங்கள் சொன்னது சரியே பெரியவரே! கடவுளுக்குத்தான் தெரியும்! நீங்கள் கூறியது மிகவும் சரிதான் – இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் முடமாகி இருக்கலாம், ஆயினும் அவன் உன்னுடன் இருப்பான். எங்களது மகன்கள் ஒரேயடியாக போகப் போகிறார்கள். குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம், சிறிதளவு நொண்டி நடப்பானாக இருக்கலாம், ஆனாலும் அவன் சரியாகி விடுவான்.” என்றனர்.

அந்த வயதானவன், “உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். – முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். யாருக்கும் தெரியாது உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர்முனைக்கு இழுத்துச் செல்லப் படுகிறார்கள்., என்னுடைய மகன் இழுத்துச் செல்ல பட வில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. கடவுளே அறிவார்.” என்றார்.

நாம் கடவுளே அறிவார் எனக் கூறுவதன் அர்த்தம் முழுமைக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். முடிவெடுக்காதே, முடிவெடுத்தால், தீர்மானித்தால், ஒருபோதும் உன்னால் முழுமையுடன் ஒருங்கிணைய முடியாது. நிகழ்வின் பகுதிகளால் கவரப்பட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களின் மூலம் முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் ஆரம்பித்து விடுவீர்கள்.

ஓஷோ

SOURCE: UNTILL YOU DIE Che # 2

Address


Alerts

Be the first to know and let us send you an email when SpiritualSchooltv.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SpiritualSchooltv.Com:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share