15/11/2022
ஓஷோ..........
உங்களுடைய முந்தைய பிறவிக்கும், இந்தப் பிறக்கும் உள்ள இடைவெளியைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?
தன்னை முழுமையாக அறிந்து கொள்வதற்கு முன், எடுக்கும் பிறவிகள் அனைத்தும் அவர்களது விருப்பப்படி சுதந்திரமாக அமையாது.
அப்படிப்பட்டவர்கள் எடுக்கும் பிறவிகள் அவர்களது எண்ணப்படி ஒருக்காலும் இருக்காது.
முழுமையான பிரக்ஞையில் மற்றும் தன்னை முழுமையாக அறிந்து கொள்வது மூலமாகவே, நீங்கள் உங்கள் பிறவியை உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்க முடியும்.
இந்த உலகத்தில், காரணமின்றி எதுவும் நடப்பதில்லை. அடுத்த பிறவியை எடுப்பதற்கு இரண்டு காரணங்களில் ஒன்றுதான் இருக்க வேண்டும். அவைகளில் ஒன்று ஆசை, இரண்டாவது கருணை. இதைத் தவிர மூன்றாவது காரணம் என்று எதுவும் இல்லை.
என்னுடைய முற்பிறவி 700 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. மஹாவீரரின் முன் பிறவி அடுத்த பிறவிக்கு சுமார் 250 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டது. புத்தருடைய முன் பிறவி, புத்தாவாக அவதரிப்பதற்கு முன்பு சுமார் 78 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. புத்தாவைப் பொருத்த வரையில், அவருடைய முற்பிறவிக்கு சாட்சியாக, சில மக்கள் அப்பொழுது வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். ஏன், மஹாவீரரின் வாழ்வில் கூட, சில பேர்களால், அவருடைய முன்பிறவியில்; தாம் அவரைச் சந்தித்ததை நினைவு கூற முடிந்தது.
கிருஷ்ணாவின் முற்பிறவி, கிருஷ்ணாவாகப் பிறப்பதற்கு முன் சுமார் 2000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. ஆகவே, கிருஷ்ணா வெளியிட்ட பழைய ஞானம் பெற்ற ரிஷிகளின் பெயர்கள் மிகவும் தொன்மையானது. அவைகளைச் சரித்திரப் பூர்வமாகக்கூட ஞாபகப்படுத்திப் பார்க்க முடியாது.
என்னைப் பொருத்தவரையில், 700 வருடம் என்பது ஒரு நீண்ட இடைவெளிதான். ஆனால், ஒருவர் உடலால் கட்டுப்படுத்தப்படாது இருக்கும் பொழுது, ஒரு விநாடியும், 700 வருடமும் ஒன்றுதான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை.
உடல் இருந்தால் தான், கால அளவுக்கு மதிப்பு உண்டு. உடலுக்கு அப்பால், 700 வருடத்திற்கும் 7000 வருடத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. உடலை எடுத்த பிறகுதான், இந்த வித்தியாசங்கள் ஏற்படுன்றன.
முற்பிறவியில் நடந்த இறப்பிற்கும், இந்தப் பிறவியில் ஏற்பட்ட இறப்பிற்கும் இடையில் ஏற்பட்ட கால அளவைக் கணக்கிடும் முறை மிகவும் சுவாரசியமானது. என்னையே எடுத்துக்கொண்டால், நான் 700 வருடங்களாக இங்கு இல்லை என்பதை எப்படி நான் அறிந்துகொண்டேன்? இதை நேரடியாகக் கணக்கிடுவது என்பது மிகவும் சிரமமான காரியம். ஆனால், இந்த கால இடைவெளியில் எத்தனை மக்கள் மறுபிறவி எடுத்திருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு, என் பிறவியின் காலகட்டத்தைக் கணக்கிட முடியும்.
உதாரணமாக, எனக்கு ஒருவரை 700 வடருங்களுக்கு முன் தெரிந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த 700 வருட இடைவெளியில், அவர் 10 பிறவிகளை எடுத்திருக்கலாம். இருந்தும், அவரிடம் அந்த 10 பிறவிகளின் ஞாபகம் அவரது அடிமனத்தில் இருந்து கொண்டே இருக்கும். அந்த ஞாபகத்தை, நான் கண்டுபிடித்து, நான் எத்தனை வருடங்களுக்கு முன்பு, உடலில் இருந்தேன் என்பதைக் கணக்கிடமுடியும்.
வேறுவகையில், இதைக் கணக்கிடுவது மிகவும் கடினம். ஏனென்றால் உடலோடு இருக்கும் பொழுது கணக்கிடும் கால அளவுக்கும், உடல் இல்லாமல் இயங்கும் நிலையில் உள்ள கால அளவுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு.
இந்த 700 வருட இடைவெளி, எனக்குப் பலவித சங்கடங்களை ஏற்படுத்தி விட்டது. அவைகள் என்னவென்றால், முதலில் மறுபிறவி எடுப்பது என்பது போகப் போக மிகவும் கடினமாகி விட்டது. ஆன்மீகத்தில் ஒரு நிலையை அடைந்தவர்களுக்கு, மறுபிறவி எடுக்க சரியான தாய் தகப்பனார் கிடைப்பது கஷ்டம். ஆனால், புத்தர் மஹாவீரர் காலத்தில், அவ்வளவு கஷ்டம் இல்லை. தினமும், அப்படிப்பட்ட உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்களுக்கு, சரியான கர்ப்பப்பை கிடைப்பது சுலபம்தான்.
இந்த 700 வருட இடைவெளியைப் பொருத்த வரையில், இன்னும் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில், இதைப் பற்றிப் பேச்சு வரும் என்று நான் நினைக்கவே இல்லை. சில நாட்களுக்கு முன், பூனாவில் திடீரென்று, இந்த விஷயம் மேலே வந்தது. என்னுடைய தாயார் அங்கு வந்தார். ராம்லால் புங்காலியா என்பவர், என் தாயாரிடம், என்னுடைய இளமைக்காலத்தில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தி, சொல்ல முடியுமா என்று கேட்டிருக்கிறார்.
இதைப் போல ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நான் நினைக்கவே இல்லை, மேலும், அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. சமய பொது மேடையில், நான் பிறந்து மூன்று நாட்களுக்கு அழவே இல்லை. என்று என் தாயார் சொன்னதாக வெளியிட்டார். மேலும், அந்த மூன்று நாட்களுக்கு, நான் பால் கூட அருந்தவில்லையாம்! இது,என் தாயாருக்கு, என்னைப் பற்றி முதலில் எழுந்த ஞாபகம்.
ஆமாம். இது உண்மைதான். 700 வருடங்களுக்கு என்னுடைய முற்பிறவியில், அப்பொழுது 21 நாள் விஷேசமான. ஆன்மிகத் தியானத்தில் இருந்தேன். அது இறப்புக்கு முன் செயக் கூடியது. அதாவது 21 நாள் உபவாசம் மற்றும் ஆழந்த தியானம் இருந்து, நான் என் உடலை விட்டு நீங்க வேண்டும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், என்னால் 21 நாட்களை முடிக்க முடியவில்லை . அதற்கு பாக்கி இன்னும் 3 நாட்கள் இருந்தன. மூன்று நாட்கள் உபவாசத்தை இந்தப் பிறவியில் முடிக்க வேண்டியிருந்தது.
இந்த வாழ்க்கை, அதன் தொடர்ச்சிதான். இந்த 700 வருட இடைவெளிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. மூன்று நாட்கள் பாக்கி இருந்ததற்குக் காரணம், நான் அப்பொழுது கொல்லப்பட்டேன். அதாவது 21 நாட்கள் முடிவு பெறுவதற்கு, 3 நாட்களுக்கு முன்பே
கொல்லப்பட்டேன்.
அந்த மூன்று நாட்கள், இந்தப் பிறவியில் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. அப்படி அந்த 21 நாட்களை அந்தப் பிறவியிலே
பூர்த்தி செய்து இருந்தால், நாள் அடுத்த பிறவி எடுக்க வேண்டியிருந்திருக்காது.
இப்பொழுது, இதைப் பொருத்த வரையில்
நீங்கள் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த மெல்லிய திரைக்கு பின்னால் நின்று கொண்டு, அதைத் தாண்டுவது என்பது மிகவும் கஷ்டம், மேலும், அந்தத் திரை எப்பொழுது விலகும் என்னும் விழிப்போடு பார்த்துக் கொண்டு காத்திருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல, ஏன், அது முடியாத காரியம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய உபவாசத்தை 3 நாட்கள் கழித்து வெற்றிகரமாக முடிந்திருந்தால், அது நிகழ்ந்திருக்கும். ஆனால் அதற்குள் நான் கொல்லப்பட்டேன்.
ஜூடாஸுக்கு (JUDAS), ஜீசஸின் பகை இல்லாவிட்டாலும், அவன் எப்படி அவரை பலமுறை கொல்ல முயன்றானோ, அதைப்
போல என்னைக் கொன்ற ஆளுக்கும், எனக்கும் எந்த பகையும் கிடையாது. இருந்தாலும், அவன் தனக்குள் பகை உணர்வை வளர்த்து வந்திருக்கிறான். இதை என் பிரசங்கத்தில் பலமுறை சொல்லியிருக்கிறேன்.
ஆனால், அவன் என்னைக் கொன்றது, மிகவும் மதிப்பு வாய்ந்தது தான். நான் இறக்கும் போது, 3 நாள் உபவாசம் பாக்கி இருந்தது. நான் ஞானம் அடைவதற்கு, சென்ற பிறவியில் 21 வருடங்கள் கழித்து பயன் கொடுத்தது! அதை சென்ற பிறவியிலேயே பாக்கியுள்ள, 3 நாட்களில் அடைந்திருப்பேன்.
அந்த மூன்று நாட்களில் உள்ள ஒவ்வொரு நாளுக்கும் ஈடாக, இந்தப் பிறவியில் 7. வருடங்களை செலவழிக்க வேண்டியதாகி விட்டது! ஆகவே தான், நான் சென்ற பிறவியில் முழுமையாக ஞானம் அடைந்து, இந்தப் பிறவியை எடுத்தேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை.
ஆகவேதான், நான் 'கிட்டத்தட்ட'ஞானம் அடைந்த நிலையில், இந்தப் பிறவியை எடுத்தேன் என்று கூறுகிறேன். அந்தத்
திரையை அப்பொழுதே தூக்கியிருந்தால், என் விருப்பப்படி ஒரே ஒரு பிறவியை எடுத்திருக்கலாம். ஆனால், அந்த மூன்று நாள் உபவாசம் முடியாத வேளையில், நான் கட்டாயமாக மறுபிறவி எடுக்க நேர்ந்தது.
இப்பொழுது, என்னால் இன்னும் ஒரு பிறவி எடுக்க முடியும். அது உண்மையிலேயே உபயோகமாக இருந்தால், நான் அதைச்
செய்வேன். இந்தப் பிறவியின் முழுவாழ்க்கையில், அடுத்த ஒரு பிறவி
எடுப்பது உண்மையிலேயே உபயோகமாக இருக்கும் என்று துருவித் துருவி ஆராய்வேன். அப்படி அது உபயோக இருக்கும் என்று நான் கருதினால், நான் மீண்டும் மறுபிறவி எடுப்பேன். இது என் விருப்பத்தில் நடைபெறும். அப்படியில்லாவிட்டால், இந்த விஷயம் முடிவு பெற்றது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆகவே, நான் முற்பிறவியில் கொல்லப்பட்டது, ஒரு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக
அமைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.
#ஓஷோஓஷோ--
ஓஷோவின் புத்தகம் "அறிந்தவைகளுக்கு அப்பால்"