லால்பேட்டை மீடியா 24

லால்பேட்டை மீடியா 24 உண்மையை உடனுக்குடன்

லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி தாருல் தஃப்ஸீர் கலை க...
31/03/2024

லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி தாருல் தஃப்ஸீர் கலை கூடத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு உரையாற்றினார்.

லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஏ.எம்.எஃப்.முஹம்மது சாதிக் தொல்.திருமாவளன் MPக்கு சால்வை அணிவித்தார். செயலாளர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ் விசிக பொதுச் செயலாளர் திரு. சிந்தனை செல்வன் MLA அவர்களுக்கு சால்வை அணிவித்தார்.

ஜாமிஆவின் பொருளாளர் ஏ.எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர் எஸ்.ஏ.முஹம்மது ஹாரிஸ், துணைத் தலைவர் ஜெ.அன்வர் சதாத் மற்றும் ஜாமிஆவின் நிர்வாக சபை உறுப்பினர்கள், அனைத்து மஸ்ஜித் முத்தவல்லிகள் உள்ளிட்ட பலர் திரளாக பங்கேற்றனர்.

கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் ஏழாம்  ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது!தோஹா மார்ச் 29, 2024எல்லாம் வ...
30/03/2024

கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் ஏழாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது!

தோஹா மார்ச் 29, 2024

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் ஏழாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி 29-03-2024 வெள்ளிகிழமை மாலை 4 மணியளவில் தோஹா சல்வா ரோட்டில் உள்ள அல்-யமாமா காம்ப்ளக்ஸ் அரங்கில் கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் ஏழாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி சீரோடும், சிறப்போடும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் 300க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

விழா நடைபெற்ற அரங்கத்திற்கு மெளலானா மொளலவி ஷம்சுல் மில்லத் K.A முஹம்மது ஜக்கரிய்யா ஹள்ரத் அவர்களின் பெயரையும், விழா நடைபெற்ற அரங்க நுழைவாயிலுக்கு மெளலானா மொளலவி ஷேகுல் பிக்ஸ் S.A அப்துர் ரப் ஹள்ரத் அவர்களின் பெயரையும், இப்தார் நடைபெற்ற அரங்கிற்கு மெளலானா மொளலவி ஷேகுல் ஹதீஸ் A.E.M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் என மூன்று ஜாமிஆவின் பேராசிரியர்களின் பெயர்களையம் நினைவுகூறும் விதமாக சூட்டப்பட்டிருந்தது.

கத்தார் லால்பேட்டை ஜமாஅத் மூத்த உறுப்பினர்கள் முஹம்மது மஹ்ரூப், முஸ்தாக் முன்னிலை வகிக்க தலைவர் யக்கீன் அஹமது , செயலாளர் பக்கீர் முஹம்மது, பொருளாளர் நவ்பல் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியை முஹம்மது புஹாரி தொகுப்புரையாற்ற,
துவக்கமாக முன்னால் தலைவர் முஹம்மது உஸாமா அவர்களின் மகனார் முஹம்மது ஆதில் அழகு குரலில் இறைவசனம் ஓத,ஜமாஅத்தின் தலைவர் யக்கீன் அஹமது அனைவரையும் வரவேற்க,செயலாளர் முஹம்மது பக்கீர் முன்பொழிய , தொடர்ந்து ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பாளர் அஹமது ரிலா லால்பேட்டை ஊரைப்பற்றி மற்றும் ஜமாஅத்தின் செயல்பாடுகள் திட்ட பணிகள் குறித்தும் பேசினார், ஜமாஅத்தின் முன்னால் தலைவரும் மற்றும் லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின் செயலாளர் முஹம்மது உஸாமா Lalpet Health Care செய்லபாடுகள் பணிகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.

லால்பேட்டையிலிருந்து சிறப்பு விருந்தினராக மெளலானா, மெளலவி, காரி முஃப்தி ஷைகுல் ஜாமிஆ, நஜ்ருல்மில்லத், அல்ஹாஜ் A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் (முதல்வர், J.M.A. அரபிக்கல்லூரி, லால்பேட்டை, கடலூர் மாவட்டம் அரசு காஜி)அவர்கள் ரமலானை பற்றியும், ஸதகா, ஜகாத், பித்ரா பற்றி சிறப்பு பயான் நிகழ்த்தினார்கள், இதில் அரங்கம் நிறைந்து ஹஜ்ரத் அவர்களின் பயானை கேட்பதற்கு குழுமியிருந்தனர்.

துபாய் ஜமாஅத்தின் 36ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் துபாய் ஜமாஅத் இப்தாரில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரை ஹஜ்ரத் அவர்களின் கரங்களால் ஜமாஅத்தின் நிர்வாகிகளுக்கு மறு வெளியீடு கத்தாரில் வெளியிடப்பட்டது, இதற்கு அரங்கில் நிறைந்திருந்த அனைத்து மக்களின் சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் லால்பேட்டை மண்ணின் மைந்தர்கள்,பல்வேறு ஊர் ஜமாஅத் (ஆயங்குடி, பரங்கிப்பேட்டை, காயல்பட்டினம், கீழக்கரை, கடையநல்லூர், இராஜகிரி, வழுத்தூர், அய்யம்பேட்டை, அடியக்கா மங்களம், நாகப்பட்டினம்), மேலும் கத்தாரில் உள்ள சமுதாய அமைப்புகள் மற்றும் ஜமாஅத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக ஜமாஅத்தின் முன்னால் தலைவர் முஹம்மது தஸ்லீம் நன்றியுரையாற்ற, ஹஜ்ரத் அவர்களின் துஆவுடன் நிறைவுபெற்றது.

லால்பேட்டை மண்ணிற்கே உரித்தான விருந்தோம்பலுடன் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கத்தார் ஸ்கை தமிழ் நிறுவனம் மற்றும் Q Tamil Radio நிறுவனர்கள் கலந்துகொண்டு இணையதளம் மூலம் ஒளிப்பதிவு செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கத்தார் லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்ந்து இரண்டாம் அமர்வாக ஜமாஅத்தின் பொதுக்குழு கூட்டம் -புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இதில் 2024 -2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் - மசியுல்லாஹ்
செயலாளர் - புஹாரி
பொருளாளர் - நவ்பஃல்
துனை தலைவர் - முனாஜுத்தின்

IT - ஹாசிம்
துனை செயலாளர்கள்:-
1) புனியாமீன்
2) அஸார்
3) அன்வர்
4) ஷமீம்
5) ஷக்கின்
6) தல்ஹா
7) ரிஜ்வான்
8)நாசர்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு ஜமாஅத்தின் உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

லால்பேட்டை நகர ஜமாத்துல் உலமா சபை சார்பில் கடந்த 48 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் புனிதமிகு புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் நிறைவு ...
13/01/2024

லால்பேட்டை நகர ஜமாத்துல் உலமா சபை சார்பில் கடந்த 48 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் புனிதமிகு புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் நிறைவு விழா ஜாமிஆ மன்பவுல் அன்வார் தாருல் தப்ஸீர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஜாமிஆவின் முதல்வரும்,கடலூர் மாவட்ட அரசு காஜியமான மௌலானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் தலைமை வகித்தார்.

திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா ரூஹூல் ஹக் ஹஸ்ரத் சிறப்புரையாற்றினார்.

ஜாமிஆ பேராசிரியரும் நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மௌலானா சலாஹூதீன் வரவேற்று பேசினார் மௌலானா
காரி முஹம்மது அஹ்மது ஹஜ்ரத் துவக்க உரையாற்றினர்
ஜாமிஆ துணை முதல்வர் மௌலானா சைபுல்லா ஹஜ்ரத்,பேராசிரியர்கள்மௌலானா அப்துல் அலி ஹஜ்ரத், மௌலானா அப்துல் சமது ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்
ஜாமிஆ மன்பவுல் அன்வர் அரபுக் கல்லூரி தலைவர் M.F சாதிக், செயலாளர் K.A அமானுல்லா,பொருளாளர் மௌலானா A.S அப்துல் ரஹ்மான் ரப்பானி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள்,ஜமாஅத்தார்கள் சமுதாய பிரமுகர்கள் திரளாக பங்கேற்று துஆ மஜ்லிஸில் பங்கேற்று சிறப்பித்தனர்

19/12/2023

தாயின் தேடல்....
யாசர் அரபாத் ஹசனி லால்பேட்டை.

சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் பயணித்த சுருக்கம் விழுந்த முகம் நரை ஆக்கிரமித்த தாடியுடன் காணப்பட்ட நிஜாம். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கினார். சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துக் கொண்டார். லால்பேட்டை நிறுத்தத்தைக் கண்டவுடன் வெள்ளிக்கிழமை என்பதால் அடித்துப் பிடித்துப் பேருந்திலிருந்து வந்திறங்கினார். பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிவாசல் நோக்கி விரைந்தார்.
சிக்கனமான ஊரின் நுழைவாயிலில் இருபக்கமும் அமைந்துள்ள கடைகளில் ஜூம்ஆ தொழுகைக்காகக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில கடைகள் பகுதி அடைத்தும் பகுதி அடைக்காமல் இருந்தன. ஆட்டிறைச்சி கடைகள் சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.
ஆட்டோக்களும், பைக்குகளும் ஊரின் பிரதானச் சாலையில் பின்னிக்கொண்டு ஓடின. எந்தப் பக்கமும் தன் பார்வையைச் செலுத்தாமல் ஊரின் முகப்பிலிருந்து ஒரு மைல் கல் தூரம் தள்ளிருக்கும் ஜும்ஆ பள்ளியை அடைந்தார். ஒரு சில மிதிவண்டிகள், இரு சக்கர வாகனங்கள் வெயிலுக்குப் பயந்து பள்ளிக்கு முன் கீற்றி லான பந்தலில் நிறுத்தப்பட்டிருந்தன. தொழுகை முடியும் வரை சூரியன் பார்வைப் படாத இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தி பள்ளிக்குள் நுழைந்தார்.
அவர் வந்தடைந்த பள்ளிவாசலானது இருநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிவாசல். ஊரின் பழமையை நினைவுக் கூறிக் கொண்டே நிற்கிறது. அதன் உள்கூட்டில் நிற்கும் பத்திற்கும் மேற்பட்ட தூண்கள் லால்கானின் கட்டிடக்கலைகளைத் தாங்கி நிறுத்துகிறது.. இப்போது நினைத்தாலும் கூட அப்படி ஒரு தூணைச் செய்யமுடியாது என்பேன்.
இதற்கு ஜாமிஆ மஸ்ஜித் என்ற பெயர் இருந்தப் போதும் பெரியப்பள்ளி என்றே அழைக்கப்படுகிறது. அதனுள்ளே நுழையும்போதே உள்ளுக்குள் இறையச்சம் ஊற்றுப்போல் உருவெடுக்கும் அப்படியொரு அமைதி நிலவும்.
ஊரில் பல பள்ளிவாசல் இருக்கும் போது இதற்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என்பதுதானே? உங்கள் உள் மனதில் ஓடும் கேள்வி. ஊரில் பல பள்ளிவாசல்கள் இருந்தபோது இதுத்தான் தாய் பள்ளிவாசல். ஊர் மக்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகைக்கு ஒன்று கூடுவர். பலநூறு வெண்ணிற புறாக்கள் ஒன்றுச் சேர்ந்து பறப்பது போல் மக்கள் வெளியேறும் காட்சிக் கனவிலும் காணக் கிடைக்காதவை. பணிரெண்டரை மணிக்குத் தொடங்கும் பிரசங்கத்திற்கு முன்னதாகவே பலரும் பள்ளிவாசல் வந்து முன் வரிசையில் அமர்ந்து விடுவார்கள்‌ . அப்படி ஒருவர் தான் நிஜாம் .இறையச்சமுடைய இவர் தொடர்ந்து இங்குத் தொழுதுவந்தார். பெரிய‌ ஹஜ்ரத்தின் குரலால் ஈர்க்கப்பட்டவர். நிஜாமுக்கு ஜூம்ஆ தொழுகை என்றால் அது இங்குத்தான். மற்ற பள்ளியில் தொழுதால் அவருக்கு ஜூம்ஆ தொழுத மனநிறைவுக் கிடைக்காது . என்ன வேலையாக இருந்தாலும் இங்கு வந்திருவார்.
மக்கள் வருவதற்கு முன்பே இவர்‌ வந்துவிடுவதால் இவருக்கும், பள்ளிவாசலுக்கும் மல்லிச்செடிப் போன்ற நட்பு படரத் துவங்கியது. இவரைப் போன்றே பள்ளிவாசலுக்குப் பல நண்பர்கள் உண்டு என்பது வேறு விஷயம்.
அப்படித்தான் ஒரு நாள் ஜும்ஆவிற்கு வந்தவர் பள்ளிவாசலுக்கு முகமன் கூறி அமர்ந்தார். முகமனுக்குப் பதில் கூறி "போன வாரம் எங்கேப் போனே ஏன் தொழுக வரல?" பள்ளிவாசல் கேட்க " சாரி ,போன வாரம் வியாபார ரீதியா சேம்பரம் போய்ட்டேன்" இப்படியாக இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு ஜும்ஆ தினத்திலும் பள்ளிவாசலுக்கும் அதன் நண்பர்களுமிடைய சிறிய உரையாடல்கள் நடைபெறும் அது வேறுகதை.
பெரிய, பெரிய ஆலிம்கள் இமாமத் செய்த இடமது. தற்காலத்தில் கட்டப்பட்டப் பள்ளிவாசல்கள் புதுப்பிக்கப்பட்டு மறு திறப்பு விழா நடைத்தியாச்சு. ஆனால், இதன் பழமையை மாற்றாமல் அப்படியே விட்டிருப்பதால் முன்னால், இன்னாள் முத்தவல்லிகளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஊரின் துவக்கத்தை இதனை வைத்தே நாம்‌ அறியமுடியும்
இங்கு மோதினார் ஒருவர் பணி செய்துவந்தார். முஅத்தினைத்தான் மோதினார் என்று அழைப்பது வழக்கம். அவர் மறைவுக்குப் பின்னர் அவரைப் போன்ற மோதினாரை பள்ளிவாசல் பார்த்திருக்காது என்று எண்ணுகிறேன்.
வெள்ளிக்கிழமை காலையில் ஜும்ஆ விற்கான தயாரிப்பில் இறங்கிவிடுவார். அனைத்து பாய்களைச் சுருட்டி ஓரத்தில் நிற்கவைத்து சுத்தம் செய்வார். " என்ன மோதினாரே..! பாய்களைப் படுக்க வாட்டத்தில் போடுயா..! யாராவது மௌத்தாகிடப் போறாங்க" என்று போகிறபோக்கில் ஒருவர் கூற " பாய்களை நிற்க வைத்தால் மஹல்லாவில் ஒருவர் மரணமடைந்து விடுவார் என்ற மூட நம்பிக்கையில் கூறினாலும்,ஊர் வம்பு நமகெதுக்கென்று ...! படுக்க வாட்டில் வைத்துவிட்டு தூய்மை பணியைத் தொடங்குவார். மூடப்பட்டிருந்த மடக்கு கதவுகளை அதன் போக்கில் அழகாக மடித்து சுவற்றின் ஓரத்தில் வைத்துவிடுவார்.
காலை இட்லி, வீதியெங்கும் ஆட்டுக்கறி சமைக்கும் வாசம் , வெள்ளைச் சட்டை, வெள்ளை கைலி, மாமியார் வீட்டு விருந்து இப்படியாகத்தான் இங்கு வெள்ளிக்கிழமை பொழுது கழியும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் அது வெள்ளிக்கிழமையை முழுமைப்படுத்தாது என்பது பலரின் எண்ணம்.
இமாம் பிரசங்கம் தொடங்கும் முன்பே ஒரு சிலரும், பிரசங்கம் தொடங்கியதும் ஒரு சிலரும்,பிரசங்கத்திற்கு மத்தியில் ஒரு சிலரும், மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேனீக்கள் அதிகம் தேன் எடுப்பது போன்று வாரத்திற்கு ஒருநாள் மட்டும் தொழக்கூடியவர்களும் வெள்ளை சட்டை,வெள்ளை கைலியுடன் பள்ளிவாசலின் கீழ் தளத்திலும் மேல் தளத்திலும் நிரம்பியிருப்பார்கள். மடியில் அமர்ந்திருக்கும் குழந்தைகளைக் தாய் காண்பது போல் தன் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தைகளைத் கருணையுடன் காணும்.
தொழுகை முடிந்து வீடு திரும்பும் மக்கள் கூட்டத்தில் குண்டூசிக்குக் கூட, நுழைய இடம் கிடைக்காதயளவிற்கு குழு,குழு‌வாகச் செல்வார்கள். இந்தக் காட்சிகளைக் கம்பீரமாக நின்று ரசிக்கும் இரு மினாராக்கள்.
இப்படித்தான் ஒவ்வொரு ஜும்ஆ தொழுகை கழிந்தது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு இடத்தில் நடைபெற்ற ஜும்ஆ, மூன்றாக பிளவுபட்டுப் போனதில் அந்தத் தாய் பள்ளி மிகுந்த மனவேதனை அடைந்ததை நிஜாம் போன்ற நண்பர்களிடம் பகிர்ந்திருந்தது. பலருக்கும் அதன் வலி அறிய வாய்ப்பில்லை.
திடீரென கொரோனா உலகை தன் கையில் சுருட்டிக் கொண்டது. என்னடா? கொரோனா பற்றி பேசுரேன்னு நினைக்க வேண்டாம். உலகின்‌ சகஜ நிலைக்கு வேட்டு வைத்ததுப் போல இங்கும் மாற்றத்தை ஏற்படுத்தியது இந்த நோய். போக, போக உங்களுக்கே புரியும். நோயின் தீவிரம் காரணமாக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு மக்கள் கூடும் வழிப்பாட்டுத் தலங்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தனர்.
ஊரின் சூழல் மாறத் தொடங்கியது. மூன்று இடங்களில் நடைபெற்ற ஜும்ஆ, பள்ளிக்குப் பள்ளி நடைபெறத் தொடங்கியது. கொரோனாவின் கோரதாண்டவம் முடிவுக்கு வந்தும் இந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.
இப்போது தூரத்திலிருந்து வரும் நிஜாம் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை அவர் அருகிலிருக்கும் பள்ளியில் முடித்துக், கொள்கிறார். ஆனால், நிஜாம் போன்ற தன் நண்பர்களுக்காகவும் தூரத்தில் வாழும் தன் பிள்ளைகளுக்காகவும் வழி மீது வழிவைத்து ஏங்குகிறது தாய் பள்ளிவாசல் .
தொழுகையை நிறைவேற்றி வீதி முழுவதும் சென்ற மக்களுக்கிடையில் , தற்போது தொழுகைக்காகக் கூடி ,களையும் மக்கள் கூட்டத்தில் கவிஞர் பழநிபாரதி கவிதைப் போல், நனைந்த மலர்களில் தும்பிகள் அமரும் மெல்லிய அதிர்வுகளின் குலுங்கல் கூட பெரும் சத்தமாய் கேட்கிறது என்று பரிதவிக்கிறது தாய் பள்ளி.

யாசிர் ஹசனி, லால்பேட்டை
[email protected]

05/11/2023

அடிக்கல் நாட்டுவிழாவில் திருக்குறள் கூறி சமத்துவத்தை முன்னிலை படுத்திய லால்பேட்டை பேரூராட்சி

லால்பேட்டை பேரூராட்சி உட்பட்ட 1 வது வார்டில் புதிதாக நியாயவிலை கடை கட்டிடம் கட்ட அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்வில் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இந்து என அனைவரும் ஒற்றுமையாக வாழும் நிலையில் திருக்குறள் கூறி நிகழ்ச்சியை ஆரம்பித்தனர்

துன்மங்கள் ஏற்பட பேராசையே காரணம்.எழுத்தாளர் லால்பேட்டை ரஹமத்துல்லாஹ்எல்லாவற்றையும் மறந்து தொலைத்தோம் ஆனால் அந்த ஞாபகங்கள...
17/06/2023

துன்மங்கள் ஏற்பட பேராசையே காரணம்.

எழுத்தாளர் லால்பேட்டை ரஹமத்துல்லாஹ்

எல்லாவற்றையும் மறந்து தொலைத்தோம் ஆனால் அந்த ஞாபகங்கள் மட்டும் அப்படியே மறக்காமல் தான் இருக்கிறது...

இரண்டு மூன்று தினங்களாக ஊரில் உள்ள நண்பர்கள் மின்சாரத் தடைபடுவதைச் சிலர் சீரியசாகவும், ஒருசிலர் மீம்சாசகவும் பதிவிடுகிறார்கள் வருத்தமாகத்தான் இருக்கிறது. இப்போதெல்லாம் ஊரில் அந்த வெயிலையும், உஸ்னத்தையும் தாங்குவது என்பது பெரும்பாடாக இருக்கிறது. சமீபத்தில் அனுபவித்து வந்ததால் என்னால் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நம் வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவைன்ட் பண்ணிப் பார்த்தால் எங்கள் ஊரில் யாருவீட்டிலும் AC எல்லாம் கிடையாது. எல்லார் வீட்டிலும் திண்ணைகள் இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் திண்ணையில் நண்பர்களோடு பேசிக்கொண்டு அங்கேயே இரவில் உறங்கிய காலங்கள் உண்டு.

வீராணத்திலிருந்து வரும் தண்ணீர் வாய்க்கால் மூலம் மடை பிரிக்கப்பட்டு ஊரைச்சுற்றி உள்ள விவசாய நிலங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கும். அது போகும் வழியில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி வழியும், அவசியமில்லாமல் யாரும் எந்த மரங்களையும் வெட்டி நான் பார்த்ததில்லை.

பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்கள் தான் வாழ்ந்தார்கள். திருமணமாகி உடனே இரண்டு வருடத்தில் வீடு கட்டி விட வேண்டும் என்ற கனவெல்லாம் யாருக்கும் இருந்ததில்லை என்பதால் பெரும்பாலும் வயல்கள் வயல்களாகவே இருந்தது. அதில் நெல் உளுந்த பயறு என்று எப்போதும் விவசாயம் நடந்து கொண்டே இருந்தது. அக்னி வெயில் என்று சொல்லக்கூடிய அந்த நாட்களில் கூட லேசான காந்தல் இருக்கும் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் பணைமட்டை விசிரிகளால் விசிறிக் கொள்வார்கள்.

இங்கே எல்லா மாற்றத்திற்க்கும் நாம் தான் காரணம் ஆரம்பத்திலிருந்து அடுத்து வரும் தலைமுறைக்காக வீடு வாசல் சேர்த்தோம் ஆனால் இயற்க்கையை அழித்தோம்.
நீர் நிலைகளைச் சாக்கடைகள் சூழ்ந்து கொண்டது, நெர்பயிர் விவசாயிகளை ரியல் எஸ்டேட்டின் கம்பங்கள் மிரட்டியது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற புரிதலற்ற அரசியல் யார் யாரையோ தேர்ந்தெடுத்து நீர் நிலைகள் ஆக்ரமித்துத் திருமண மண்டபங்கள் ஆக்கி கொண்டவர்கள் கொடுக்கும் 500 ரூபாய் பணம் அவர்களுக்கு நல்ல பெயரை பெயரைச் சம்பாதித்துக் கொள்ளப் போதுமானதாக இருந்தது.

ஒரு இருபது வருடங்களுக்கு முன்பே நீர் மேலாண்மை குறித்தோ அல்லது இயற்கை குறித்தோ புரிந்த ஒருவரை நாம் தேர்ந்தெடுத்து இருந்தால் அவருக்கும் எதாவது புரிந்து இருக்கும். இந்த நீர் நிலைகளைக் காப்பாற்றி எப்படி அடுத்தத் தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று.

அரபு நாடுகள் பாலைவனத்தால் சூழ்ந்ததுதான் ஆனால் அவர்கள் பசுமையாக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு சோலார் பிளான்ட் உருவாக்கும் இடங்களைச் சுற்றி அடுத்தடுத்து சிறிய ஏரிகளையும், குளங்களையும் செயற்க்கையாக உருவாக்கி வைத்து இருக்கிறார்கள்.

மின்சாரமே இல்லை என்றாலும் நாம் உரங்கி எழுந்த காலங்கள் உண்டு. ஆனால் இன்று ஒரு மணி நேரம் கூட நம்மால் இருக்க முடியவில்லை அவ்வளவு வெப்பம், காரணம் நீர் நிலைகள் அழிந்து போனது வயல் வெளிகள் விவசாயம் இன்றி அழிந்து போனது இன்னும் கொஞ்சம் அறிவியல் பூர்வமான காரணங்களும் இயற்கை சேர்த்துக் கொண்டது.

ஒரு வேல நம்ம பசங்க எதுக்கு நம்ம ஊர்ல இந்தக் குளம் குட்டை வாய்க்கால் எல்லாம் இருந்துச்சின்னு கேட்டா நாம என்ன பதில் சொல்லாப்போறோம்னு நினைத்ததுன்டு.

நமக்கே தெறியல நீர் மேலாண்மைன்னா என்னான்னு
அவங்க குளம் குட்டை வயல் பயிர்னு எங்கேயும் போகாம வளர்த்துருக்கோம். இன்னும் கொஞ்சம் வருடங்கள் நாம எப்படியோ ஓட்டிடுவோம் ஆனால் "பாவம்ல நம்ம குழந்தைங்க"

ஒரு டீ கடைல வரும் முதல் நாள் வழியில் ஒரு கிராமத்தில் டீ குடிச்சிட்டு இருந்தேன். அவர் ஒரு விவசாயி கொஞ்சம் வயதானவர் அவரிடம் இப்படித்தான் இன்னொருவர் சொல்லிக்கொண்டிருந்தார்
"சொன்னதையே திரும்பச் சொல்லாதய்யா" குண்டி கழுவவே தண்ணி இல்லையாம் இவரு வெவசாயம் பண்ணப்போறாராம், நீ சொல்ற வெலயெல்லாம் அந்த வயல் போகாது ஏழுறுவாக்கு முடிச்சித்தறேன் ஒழுங்கா வித்துட்டு பையனுக்கு நம்மூர்லயே ஒரு பார்மசி தொறந்துக் கொடு.. டீ குடிச்ச கிளாசை வைத்து விட்டு கள்ளாப்பெட்டியின் மீது பார்த்தேன் அங்கே புத்தரின் படம்
"எல்லாத் துன்பங்களுக்கும் பேராசையே காரணம்" என்று இருந்தது..

11/06/2023

சேத்தியாதோப்பு அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதல்:
20 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்:
போக்குவரத்து பாதிப்பு:

லால்பேட்டை மீடியா 24 நியூஸ் 7 தமிழ் நேரலை 💥

Address

Kattumannarkoil

Telephone

+918667078903

Website

Alerts

Be the first to know and let us send you an email when லால்பேட்டை மீடியா 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category