08/08/2026
சாலையில் ஒரு படுக்கை
விளம்பரத்தில் புதுமையை புகுத்திய DOMI BED நிறுவனம், நகரின் பரபரப்பான சாலைகளையே தனது மெத்தை சோதனைக்கான இடமாக மாற்றியுள்ளது. தொடர்ந்து பயணிக்கும் வேனுக்குள் படுக்கை அமைக்கப்பட்டு, அதில் ஒருவர் தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்காக லட்சக்கணக்கான சம்பளத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். வாகனத்தின் அசைவு, சாலையில் நிலவும் சத்தம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றுக்கு நடுவிலும் தூக்கம் பாதிக்கப்படாமல் இருப்பதை காட்டுவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். மெத்தையின் உண்மையான வசதியை அனுபவத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சி, இணையத்தில் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது.