Sun digital studios, kattumannarkoil.

  • Home
  • Sun digital studios, kattumannarkoil.

Sun digital studios, kattumannarkoil. self photo shopping video editor video grapher grapics desinger

23/07/2025

தோற்று போகலாம்.

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்த போது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பி விடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும் போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒரு முறை மணிஆர்டர் வந்த போது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன்
(my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின்
( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலை பேசியில்
பேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டு
கொண்டேன்.

அப்படியே போனை வைத்து விட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறு நாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக் கொண்டு வந்த அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என் போன்றோர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

தாயிடம் நிரூபியுங்கள். கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

தந்தையிடம் நிரூபியுங்கள். கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

மனைவியிடம் நிரூபியுங்கள்.கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

சகோதரனிடம் நிரூபியுங்கள்.கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

சகோதரியிடம் நிரூபியுங்கள்.கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

மகனிடம் நிரூபியுங்கள். கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

மகளிடம் நிரூபியுங்கள். கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் .
அது கடலில் கொட்டிய பெருங்காயமே.

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?

அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..
அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..

துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..
பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..

சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..
நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..

ஆகவே தோற்று போ,
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

அன்புடன் வாழுங்கள்!

எழுத்தாளர் சுஜாதா...

படித்ததில் பிடித்தது ...

23/07/2025

திருவண்ணாமலை,
தீபம் ஏற்றப்படும் உச்சி பாறை.

05/07/2025

ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான்.

அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்துக் கொண்டான்.

காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன், சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான். அங்கு வயதான பெண்மணி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே இருந்தார்.

நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான் சிறுவன்.

அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள். ஒருவேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்று நினைத்து தண்ணீர் பாட்டிலை நீட்டினான். பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.

அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை பார்த்ததில்லை, அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான் கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.

அந்த பாட்டியும் மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள். இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனால் அடிக்கடி ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர்.

நேரம் ஆக ஆக அம்மா ஞாபகம் வந்தது சிறுவனுக்கு, அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை கட்டி அணைத்தான்.

பாட்டி அவன் செயலைப்பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்....

சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள்.

’நான் மதியம் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றான்.

கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றான்.....

அதே நேரம் அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவள் மகன் கேட்டான்.

"இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றாள், அது மட்டும் இல்லை நான் நினைத்ததை விட கடவுள் மிக சிறிய வயது கொண்டவராக இருந்தார் என்றாள்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை,
ஆறுதலான வார்த்தை,
சின்ன உதவி,
செய்து பாருங்கள் நீங்களும் கடவுள்தான். கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்.

26/06/2025
31/05/2025

*பூனைகள் பற்றி அறியாத செய்திகள்.*

உலகில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் ஒன்று பூனை.

சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன.

பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும்.

பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.

அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.

பூனைகளால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது.

பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை.மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.

பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது.

பெண் பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைக்கபடும்.

பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டவை.

பாலூட்டிகள் மற்றும் பறவைகளைச் சேர்ந்த 33 இனம் பூனைகளால் அழிந்துள்ளது.
மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று.

மனிதனுக்கும் பூனைக்கும் இடையிலான பந்தம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.

ஒரு நாளைக்கு இயல்பாக 13 முதல் 14 மணி நேரம் வரை தூங்கித் தன் ஆற்றலைச் சேமிக்கக்கூடியது பூனை.

பூனைகளின் உடல் நெகிழ்வானது. எலிகள் போன்ற சிறு உயிர்களைச் சாப்பிடுவதற்கு ஏற்ற கூர்மையான பற்களைக் கொண்டவை.

வீட்டுப் பூனைகள் சராசரியாக 4 கிலோ முதல் 5 கிலோ வரை எடை இருக்கும்.

பூனைகள் அமைதியாக அடி எடுத்து வைத்து வேட்டையாடும் திறன் கொண்டவை. முன் கால்களை வைத்த அதே இடத்தில்தான் பின்னங்கால்களையும் வைக்கும். இதனால் சத்தமே இன்றி அவற்றால் வேட்டையாட முடியும்.

பூனைகளுக்குத் துல்லியமான பார்வைத் திறன் உண்டு. குறிப்பாக இரவு நேரத்தில் மனிதன் ஒரு பொருளைப் பார்ப்பதற்குத் தேவைப்படும் ஒளியைவிட, ஆறு மடங்கு குறைவான ஒளியிலும் பூனைகளுக்குப் பொருட்கள் தெரியும்.

பூனைகளுக்குச் கேட்கும் திறனும், மோப்பத் திறனும் அதிகம்.

பெரிய பூனைகள் சில சமயங்களில் மிகவும் கோபமாகக் குட்டிகளிடம் நடந்துகொள்ளும்.

வீட்டுப் பூனைகளிடம் விளையாட்டுக் குணம் உண்டு. அதுவும் குட்டிப் பூனைகளிடம் பொம்மை, பந்துகளைக் கொடுத்தால் ரசித்து விளையாடும்.

குட்டிப் பூனைகளுக்கு இடையில் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள் மூலம் வேட்டையாடவும் சண்டைத் திறனையும் அவை கற்றுக்கொள்கின்றன.

ஒரு பூனையின் சராசரி ஆயுள் 12 முதல் 15 ஆண்டுகள்.

பூனை சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும்பகுதியை உடலின் மேற்பகுதியை நக்கிச் சுத்தம் செய்வதில் செலவிடும்...

31/05/2025

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்...

பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத்தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய்திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்
பேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்

குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி செய்யுங்கள்.

வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.
ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுப்பாள்.

குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் என வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்!

26/05/2025

#ஆன்மீகம்

வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான்.

அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான்.

இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த
சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான் .

ஒருநாள் திடீரெனப் பெய்த
மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது.

சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது மனைவியிடம் ”நான் இந்த தீயில் விழுகிறேன்.

என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்” என்று கூறினான்.

ஆனால் மனைவியோ ”நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும், நானே தீயில் குதிக்கின்றேன்” என்று கூறிக்கொண்டே தீயில் வீழ்ந்தாள்.

இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன் பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை உயிர்ப்பித்து இருவரையும் முக்தியடைய வைத்தார்.

இதைக் கேட்ட அரசனும் தங்கத்தால் ஆன சிவலிங்கத்திற்குப் பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும்
வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த எனக்கு காட்சிதராத இறைவன், சுடுகாட்டுச் சாம்பலையும், பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு
மோட்சம் அளித்துள்ளாரே என்று வருந்தினாலும்

பக்தி என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்.

26/05/2025
25/03/2025

இந்திய கரன்சி நோட்டுகளில் உள்ள சாய்வான கோடுகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?...

இந்தக் கோடுகள் வெவ்வேறு நோட்டுகளில் அதன் மதிப்புக்கு ஏற்ப அவற்றின் எண்ணிக்கை மாறுபடும்.
அதனை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தக் கோடுகள் ரூபாய் நோட்டுகளில் எதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?...

இந்த கோடுகள் நோட்டுகள் பற்றிய மிக முக்கியமான தகவல்களை நமக்குத் தருகிறது. 100 ரூபாய், 200 ரூபாய், 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த கோடுகளின் அர்த்தம் என்ன என்பதை இப்போது காண்போம்.

நோட்டுகளில் வந்த இந்த கோடுகள் 'பிளீட் மார்க்ஸ்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோடுகள் பார்வையற்றோருக்கான பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டில் உள்ள வரிகளை தொட்டுப் பார்த்தால் அது எவ்வளவு ரூபாய் நோட்டு என்பதை சொல்லிவிடலாம்.

அதனால்தான் 100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் வெவ்வேறு எண்ணிக்கையிலான கோடுகள் இருக்கிறது. 100 ரூபாய் நோட்டில் இருபுறமும் நான்கு கோடுகள் இருக்கும். அதைத் தொட்டால் அது 100 ரூபாய் நோட்டு என்பது பார்க்காமலேயே நமக்குப் புரியும். அதே நேரத்தில், 200 ரூபாய் நோட்டின் இருபுறமும் நான்கு முகடுகள் இருக்கும். அதோடு மேற்பரப்பில் இரண்டு பூஜ்ஜியங்களும் இடம்பெற்றிருக்கும்.

500 ரூபாய் நோட்டுகளில் 5 கோடுகளும், 2000 ரூபாய் நோட்டுகளில் இருபுறமும் 7-7 கோடுகளும் இருக்கும். இந்த கோடுகளின் உதவியுடன், பார்வையற்றவர்கள் இந்த நோட்டையும் அதன் மதிப்பையும் எளிதாக அடையாளம் காண முடிகிறது.

25/03/2025

கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் பிரிக்கப்பட்டபோது, இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் (பெர்லின் சுவர்) எழுப்பப்பட்டது.

ஒருநாள் கிழக்கு பெர்லினில் இருந்தவர்கள் நிறைய குப்பைகளை கொண்டுவந்து மேற்கு ஜெர்மனி எல்லைக்குள் கொட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

ஆனால் மேற்கு ஜெர்மனிகாரர்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள் தெரியுமா?

ஒரு லாரி நிறைய ரொட்டிகள் பழங்கள், மளிகை பொருட்களை எடுத்து வந்து அழகாக எல்லையில் அடுக்கி வைத்துவிட்டு சென்றனர்.

அதன் மேல், "தன்னிடம் உள்ளதையே ஒருவன் கொடுப்பான்" என்ற வாசகம் அடங்கிய அட்டையை வைத்துவிட்டும் சென்றுவிட்டனர்...

உண்மைதானே!

உங்களிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவீர்கள்...

20/03/2025

Address


Telephone

+919894193384

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sun digital studios, kattumannarkoil. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sun digital studios, kattumannarkoil.:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share