24/11/2024
காயல் ஐக்கிய பேரவையின் நட்சத்திர கவுன்சிலர் அஜ்வாத் சஸ்பெண்ட்:-
இது பற்றி கவுன்சிலர் அஜ்வாத் வெளியிட்டுள்ள அறிக்கை :
*சட்டவிரோத அநீதிக்கு துணைப் போகாதீர்கள்!*
*அல்லாஹ்விற்கே அஞ்சி நடங்கள்!!*
▶️ காயல்பட்டினம் நகராட்சி கூட்டத் தொடர்களில் எனது வார்டுக்கும், ஊருக்கும், தேவையான நியாயமான எனது கோரிக்கைகளை தொடர்ந்து புறந்தள்ளிக் கொண்டு இருந்தது நகராட்சி நிர்வாகம்.
▶️ கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரை காயல்பட்டினம் பேரூந்து நிலையத்திற்கு சூட்ட தீர்மானம் நிறைவேற்ற நான் கோரியபோது, நகராட்சியின் தலைவர் முத்து முஹம்மது, 10வது வார்டு உறுப்பினர் ரங்கநாதன் (எ) சுகு ஆகியோர் என் மீதுள்ள தனிப்பட்ட விரோதத்தால் நகர்மன்றத்திலேயே என்னை தாக்குவதற்கு முற்பட்டனர்.
▶️ இப்போது என்மீது உண்மைக்குப் புறம்பான பல பழிகளை சுமத்தி, அடுத்த 2 நகராட்சி கூட்டத் தொடர்களில் பங்கெடுக்கச் செய்ய முடியாமல் என்னை தற்காலிக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளார்கள்.
▶️ இதற்கு உறுதுணையாகவும், அறியாமலும் சில உறுப்பினர்கள் கையெழுத்துப் போட்டுள்ளார்கள். என் பக்கம் நீதி உள்ளதை நேரடி சாட்சியாகக் கண்ட கவுன்சிலர்கள், மேலிட அழுத்தத்திற்கு(!) ஆட்பட்டு எனக்கு எதிராக கையெழுத்து போட்டிருந்தால், அவர்கள் படைத்த இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்.
▶️ பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சார்ந்த எனக்கே, தளபதியாரின் திராவிட மாடல் அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இன்று எனக்கு ஏற்பட்ட இதே நிலை நாளை உங்களுக்கும் வரலாம் எச்சரிக்கை!!
▶️ எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஏதாவது ஒரு குறை இருந்தாலே ஐக்கியப் பேரவையை கேட்கலாம் என்று சொன்ன ஐக்கியப் பேரவை நிர்வாகமே! இன்று உங்களின் நட்சத்திர வேட்பாளர் & கவுன்சிலரான எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதை தமிழக அரசிடமும், நீதிமன்ற பரிகாரமும் அல்லாது நான் யாரிடம் போய் முறையிடுவது?
▶️ ஐக்கியப் பேரவை நிர்வாகமே! எனக்குத் துணைத் தலைவர் பதவி தருவதாக நீங்கள்தானே வாக்குறுதி கொடுத்தீர்கள்! அதை நீங்களே மீறி விட்டீர்களே! இன்று காயல்பட்டினம் நகராட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நகராட்சி உறுப்பினராகிய என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இதற்கும் ஐக்கிய பேரவைதான் பின்னின்று தூண்டுகிறதா? அதனால்தான் எனக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறதா? இது நியாயம்தானா?
------
மக்களால் நான்!
மக்களுக்காகவே நான்!!
என்றும் மக்களின் தொண்டனாய்...
A.A.அபூபக்கர் அஜ்வாத்.
6 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்,
காயல்பட்டினம் நகராட்சி.
23/11/2024