28/11/2025
கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு *செயற்குழு கூட்டம்*
இன்று 26.11.2025, புதன்கிழமை இரவு 8.00 மணி அளவில், கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம், கூட்டமைப்பு அலுவகத்தில், கூட்டமைப்பின் தலைவர் பஷீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில், வரும் டிசம்பர் 2ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி அளவில், கீழக்கரை நகராட்சி ஆணையாளர் அவர்களை சந்தித்து, கீழ்க்கண்ட பணிகளை உடனடியாக சரி செய்து தருமாறு கேட்டு, கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1. வள்ளல் சீதக்காதி சாலை, VAO அலுவலகம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை புதிய சாலை அமைத்து தருவது.
2. புதிய பேருந்து நிலையம் அருகில், அண்ணா நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் கால்வாய்களில் மூடிகள் அமைத்து தருவது.
3. வள்ளல் சீதக்காதி சாலை, பீசா பேக்கரி முதல் ராவியத் கடை வரை கழிவுநீர் குழாய்கள் புதிதாக அமைத்து தருவது.
4. பட்டாணியப்பா ரோடு, முஹம்மது காசியப்பா ரோடு, பெத்திலி தெரு, 21குச்சி, கிழக்கு தெரு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் பிரச்சினைகளை சரி செய்து தருவது.
5. தெற்கு தெரு கட்டாலிம்ஷா பங்களா அருகில், சாலைகளை சீரமைப்பு செய்து, தேங்கிய நிலையில் உள்ள குப்பைகளை அகற்றுவது. பொதுமக்கள் சுகாதார நலன் சார்ந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.