12/09/2025
கருங்கல் அருகே பிறந்து 42 நாட்கள் ஆன பெண் குழந்தை வாயில் 'டிஸ்யூ' பேப்பரை திணித்து சாகடித்த தாய் கைது
கருங்கல் பகுதியைச் சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21) இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். பெனிட்டாவுக்கு 43 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் குழந்தை இறந்தது.இது தொடர்பாக கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில், குழந்தையை வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பெனிட்டா ஜெய அன்னாள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். குளச்சல் ஏ.எஸ்.பி., ரேகா ஆர். நங்லெட் நேரில் விசாரணை நடத்தினர்
தன்னைவிட குழந்தையிடம் கணவர் அதிக பாசம் காட்டியதால் கொன்றதாக பெனிடடா ஜெயஅன்னாள் கூறிய நிலையில், கருங்கல் போலீசார் அவரை கைது செய்தனர்.