KNR MJK MEDIA

KNR MJK MEDIA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KNR MJK MEDIA, Media/News Company, Koothanallur.

22/11/2018
 #பொதக்குடி_கொள்ளை_சம்பவம்! ொதுச்_செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_MA_MLA_ஐஜி_யிடம்_முறையீடு!!திருவாரூர்:அக் 27,திருவாரூர் மா...
27/10/2018

#பொதக்குடி_கொள்ளை_சம்பவம்!

ொதுச்_செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_MA_MLA_ஐஜி_யிடம்_முறையீடு!!

திருவாரூர்:அக் 27,
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில், நேற்று 26.10.18 அன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையான ஜும்மா நேரத்தில், மர்ம கும்பல் ஒன்று சினிமா பாணியில் தமீம் அன்சா ரி, என்பவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து, வீட்டில் தொழுகையில் இருந்த பெண்களை கத்தியை காட்டி மிரட்டி 100 பவுன் மதிப்புள்ள நகைகளையும், 1 லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்து சென்றது தமிழகம் எங்கும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இக்கொள்ளைச் சம்பவம் குறித்து உரிய , துரித நடவடிக்கையை எடுக்குமாறு , மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திருச்சியிலுள்ள மத்திய மண்டல காவல்துறை IG, திரு வரதராஜ், அவர்களை தொடர்பு கொண்டு வலியுறுத்தினார்.

இது குறித்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும் IG கூறினார்.

இனி இது போன்ற சம்பவங்களை தடுக்க, ஊரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது குறித்து ஜமாத் முடிவெடுக்க வேண்டும் என்றும், இது குறித்து வெளிநாடுகளில் இருந்து பேசிய பொதக்குடி மக்களுக்கு தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆலோசனை களையும் வழங்கினார்.

மேலும் இது குறித்த மேல் நடவடிக்கைக்காக, மாவட்ட காவல் துறையிடம் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

தகவல் :
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,

திருவாரூர் மாவட்டம்
27.10.18

https://m.facebook.com/story.php?story_fbid=1525879784178458&id=700424783390633

#பொதக்குடி_கொள்ளை_சம்பவம்!

ொதுச்_செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_MA_MLA_ஐஜி_யிடம்_முறையீடு!!

திருவாரூர்:அக் 27,
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில், நேற்று 26.10.18 அன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையான ஜும்மா நேரத்தில், மர்ம கும்பல் ஒன்று சினிமா பாணியில் தமீம் அன்சா ரி, என்பவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து, வீட்டில் தொழுகையில் இருந்த பெண்களை கத்தியை காட்டி மிரட்டி 100 பவுன் மதிப்புள்ள நகைகளையும், 1 லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்து சென்றது தமிழகம் எங்கும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இக்கொள்ளைச் சம்பவம் குறித்து உரிய , துரித நடவடிக்கையை எடுக்குமாறு , மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திருச்சியிலுள்ள மத்திய மண்டல காவல்துறை IG, திரு வரதராஜ், அவர்களை தொடர்பு கொண்டு வலியுறுத்தினார்.

இது குறித்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும் IG கூறினார்.

இனி இது போன்ற சம்பவங்களை தடுக்க, ஊரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது குறித்து ஜமாத் முடிவெடுக்க வேண்டும் என்றும், இது குறித்து வெளிநாடுகளில் இருந்து பேசிய பொதக்குடி மக்களுக்கு தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆலோசனை களையும் வழங்கினார்.

மேலும் இது குறித்த மேல் நடவடிக்கைக்காக, மாவட்ட காவல் துறையிடம் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

தகவல் :
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,

திருவாரூர் மாவட்டம்
27.10.18

05/10/2018

மஜக தலைமையக அவசர வேண்டுகோள்.

கடும் மழை குறித்து அரசும், வானிலை அறிக்கையும் முன் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்துள்ள நிலையில், உங்களது மாவட்டத்தில் உள்ள மஜக தொண்டர்களை மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

மேலும் இதுபற்றிய ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக கிளை நிர்வாகிகளுடன் நடத்தவும்.

நாச்சிகுளம் தாஜுதீன்
மாநில செயலாளர்
மஜக தலைமையகம்
05.10.18

01/10/2018
09/04/2018

ஐ. பி.எல்-க்கு எதிரான அறப்போராட்டம் ஏன்..

தமிமுன் அன்சாரி MLA விளக்கம்..

தமிழர்களே ஓன்று கூடுவோம் களத்தில்...

காணொளி அளவு : 2.40நி

 #அதிர்ந்தது_நாகூர்! #நிலக்கரி_இறக்குமதிக்கு_எதிராக_பல்லாயிரக்கணக்கானோர்_பங்கேற்பு..! #புதுவை மாநிலம்  #காரைக்கால் "மார்...
07/04/2018

#அதிர்ந்தது_நாகூர்!

#நிலக்கரி_இறக்குமதிக்கு_எதிராக_பல்லாயிரக்கணக்கானோர்_பங்கேற்பு..!

#புதுவை மாநிலம் #காரைக்கால் "மார்க்" தனியார் துறைமுகத்தில் #நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் நாகூர், பட்டினச்சேரி, பனங்குடி சுற்றுவட்டார மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் பல வகையிலும் போராட்டங்களை நடத்தின. #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் துறைமுக அதிகாரியிடம் பல முறை பேசினார். இதன் ஆபத்து குறித்து சட்டமன்றத்திலும் பேசியுள்ளார்.

நாகையில் கடந்த பிப்ரவரி 28 அன்று #மஜக-வின் 3 ஆம் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைத்து, கறுப்புக் கொடியேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அனைத்து நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு குழுக்களையும் ஒருங்கிணைத்து " #ஒருங்கிணைந்த_நிலக்கரி_இறக்குமதி_எதிர்ப்பு_குழு” வை அமைத்து ஏப்ரல் 6 அன்று நாகூரில் போராட்டம் நடைபெறும் என்றும், இதில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் பங்கேற்பார்கள் என அறிவித்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நாகூர், பனங்குடி, பட்டினச்சேரி பகுதிகளில் அனல் பறக்கும் பரப்புரைகள் நடைபெற்றது.

ஒவ்வொரு வீதி முனையிலும் வைக்கப்பட்ட போராட்ட விளம்பரங்கள் மக்களை உசுப்பின.

ஏப்ரல் 5 மதியம் முதல் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டது. வீதிகளில் கருப்பு கொடிகள் நடப்பட்டன. ஆட்டோக்களில் விளம்பரங்கள் மின்னியது.

#அப்துல்_கலாம் #மக்கள்_இயக்கம் சார்பில் பாரதி செந்தமிழன் #கலை_நிகழ்ச்சி-களை நடத்தி எழுச்சியை பெருக்கினார்.

#வணிக_அமைப்புகள் சார்பில் மதியம் 2 மணி முதல் 7 மணி வரை அரை நாள் கடையடைப்பு நடத்தி போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.

4 மணிக்கு மேடையில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின, சரியாக 4:30 மணிக்கு தமிமுன் அன்சாரி MLA மேடைக்கு வந்ததும், நிகழ்ச்சிகள் தொடங்கியது.

மஜக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஹமீது ஜெகபர் வரவேற்புரையாற்ற, #போராட்டக்குழு_உறுப்பினர் #சாகுல் அவர்கள் முழக்கங்களை எழுப்ப, மக்கள் ஆரவாரமாக முழங்கினர்.

https://m.facebook.com/story.php?story_fbid=992034557610816&id=526410640839879

5 மணி நெருங்கிய போது, புதிய பேருந்து நிலையம் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என எங்கும் எழுச்சியாய் இருந்தது.

A.S அலாவுதீன் பேசும்போது நாகூர் மக்கள் நிலக்கரியால் படும் அவஸ்தைகள் குறித்தும் தமிமுன் அன்சாரி MLA எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசினார்.

அடுத்து #சமூக_மக்கள்_கட்சி தலைவர் #அம்பி_வெங்கடேஷ் நிலக்கரி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக செயல்படுவோம் என்றார்.

அடுத்து பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ிஜாமுதீன் அவர்கள் பேசும்போது, நிலக்கரி இறக்குமதி தொடர்ந்தால், அடுத்து நாங்கள் வீரியமாக களமாடுவோம் என்றார்.

#இயக்குனர்_கெளதமன் அவர்கள், தமிழ் நிலத்தில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து பேசினார். இன்று நாகூருக்கு தான் வந்தபோது நிலக்கரியால் பாதித்த மக்களின் துயரங்களை கேட்டதாக கூறினார்.

அப்போது கூட்டம் கட்டுக் கடங்காமல் திரண்டதால், பத்திரிக்கையாளர்கள் பகுதி நெரிசலுக்கு உள்ளானது. அருகில் உள்ள கட்டிடங்களிலும் மக்கள் ஏறி நின்றனர்.

பெருத்த ஆரவாரங்களின் மத்தியில், #சீமான் பேசத் தொடங்கினார். மோடி அரசு, தமிழக மக்களுக்கு எதிராக செய்து வரும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். #மீத்தேன், #ஹைட்ரோ_கார்பன், என தமிழகத்தை சுரண்டும் திட்டங்களை கண்டித்ததோடு இனியும் "மார்க்" துறைமுகம் நிலக்கரி இறக்குமதியை தொடர்ந்தால் கடுமையான போராட்டம் வெடிக்கும் என எச்சரித்து, அனைவரையும் ஒருங்கிணைத்த தமிமுன் அன்சாரி MLA அவர்களையும் பாராட்டினார்.

பிறகு #மெரினா_போராட்டக்_குழு ஒருங்கிணைப்பாளர் #ஜல்லிக்கட்டு_ஜலீல் பேசினார்.

மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்ற ஒற்றை தீர்மானம் முதன்மை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும், நியுட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவேரி டெல்டா மாவட்டங்களை "பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க வேண்டும் என மொத்தம் 5 தீர்மானங்களை நாகூர் வணிகர் சங்க செயலாளர் பி.ஆர். ரவி வாசித்தார்.

நிறைவாக பேசிய தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தான் சட்டமன்ற தேர்தலின் போது கூறியபடி, இதற்கான போராட்டக்களத்தை கட்சி வேறுபாடு, சாதி மத வேறுபாடின்றி இணைத்து உருவாக்கி உள்ளதாகவும் இதில் ஒரு இடத்தில் கூட மஜக கொடியை காட்டவில்லை என்றும் இதற்காக யார் போராடினாலும் அதை ஆதரிப்பதாகவும் இந்த போராட்டக்களத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் MGK நிஜாமுதீன் அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் தாங்கள் அவர் பின்னால் அணி திரள்வதாகவும், நாங்களும் களத்தில் இறங்குவோம் என்று கூறினார்.

நிறைவாக, சாகுல் அவர்கள் நன்றி கூற 7 மணி அளவில் ஆர்பாட்டம் நிறைவுற்றது.
நாகூர் வரலாற்றில் இதுவரை இப்படிப்பட்ட மக்கள் திரளோடு, ஒரு உரிமைப் போராட்டம் இதுவரை நடந்ததில்லை எனவும், அனைத்து சாதி-மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக பங்கேற்ற முதல் போராட்டம் என்றும் பத்திரிக்கையாளர்கள் பாராட்டினர்.
ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்திய மனநிறைவோடு, நாகூர் மக்கள் நம்பிக்கையோடு புறப்பட்டனர்.

மலரட்டும் மலரட்டும் மனிதநேயம் மலரட்டும்வெல்லட்டும் வெல்லட்டும் சமூக நீதி வெல்லட்டும் மனிதநேய ஜனநாயக கட்சி சேவை அரசியலின்...
03/04/2018

மலரட்டும் மலரட்டும் மனிதநேயம் மலரட்டும்

வெல்லட்டும் வெல்லட்டும் சமூக நீதி வெல்லட்டும்

மனிதநேய ஜனநாயக கட்சி
சேவை அரசியலின் மனசாட்சி

அமைத்திடு அமைத்திடு
காவிரி நீரின் மேலாண்மை வாரியத்தை அமைத்திடு அமைத்திடு

போராட்டம் இது போராட்டம் காவிரிக்கான போராட்டம்

மத்திய அரசே மோடி அரசே
வஞ்சிக்காதே வஞ்சிக்காதே
தமிழகத்தை வஞ்சிக்காதே
தமிழர்களை வஞ்சிக்காதே

தடுக்காதே தடுக்காதே
காவிரி நீரை தடுக்காதே

மத்திய அரசே மோடி அரசே
கொல்லாதே கொல்லாதே
தமிழக விவசாயிகளை கொல்லாதே

வறண்டு போச்சி வறண்டு போச்சி தமிழகத்தின் வயல்வெளி எல்லாம் வறண்டு போச்சி

காவிரி ஓடிய நிலமெல்லாம்
காய்ந்து போச்சி காய்ந்து போச்சி

வாழவிடு வாழவிடு தமிழக மக்களை வாழவிடு

சம்பா போச்சி குறுவை போச்சி
தமிழகத்து விவாசாயமே அழிஞ்சி போச்சி அழிஞ்சி போச்சி

தமிழர்களே தமிழர்களே
வீதிக்கு வாருங்கள் தமிழர்களே

வாழ்வா சாவா போரட்டம்
இது உரிமை காக்கும் போராட்டம்

Address

Koothanallur

Telephone

8760812414

Website

Alerts

Be the first to know and let us send you an email when KNR MJK MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share