
02/06/2025
*கோவில்பட்டி அருகே ஓய்வு பெற்ற மில் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு*
கோவில்பட்டி அருகே புதுஅப்பனேரி சக்கரபாணி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் நல்லசிவன்(67). ஓய்வு பெற்ற மில் தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, இன்று இரவு ஊருக்குத் திரும்பி உள்ளார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நி்லையில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்ட அவர் உள்ளே சென்று பார்த்த போது, ஒரு பீரோ உடைக்கப்பட்ட நிலையிலும், ஒரு பீரோ திறந்த நிலையிலும் இருந்துள்ளது. மேலும் அதிலிருந்த சுமார் 20 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்கள், ரொக்கப்பணம் ரூ.60 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்பாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.