27/05/2024
கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசிய 8 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கோ. லட்சுமிபதி இ.ஆ.ப அவர்கள் அதிரடி நடவடிக்கை.
கடந்த 23.04.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கிலும், மற்றொரு கொலை முயற்சி வழக்கிலும் ஈடுபட்ட கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த பால்பாண்டியன் மகன் 1) சண்முகராஜ் (எ) கட்டத்துரை (26), கயத்தாறு பிரியங்கா நகரை சேர்ந்த ஜோதிராஜா மகன் 2) ராஜா (எ) சண்முகராஜா (22), கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் 3) சுடலைமுத்து (எ) சண்டியர் சுடலை (23), கயத்தாறு மருத்துவமனைச் சாலை பகுதியைச் சேர்ந்த முத்துகுட்டி மகன்கள் 4) முத்துகிருஷ்ணன் (எ) சஞ்சய் (23), 5) நரசிம்மன் (21) கடம்பூர் ஓனமாக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் 6) கணேஷ்குமார் (22), கடம்பூர் குப்பண்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனபாண்டியன் மகன் 7) சண்முகபாண்டி (23), பழனிகுமார் மகன் 8) அருண்குமார் (எ) அப்பு (22) ஆகிய 8 பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட 8 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கோ. லட்சுமிபதி இ.ஆ.ப அவர்கள் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த பால்பாண்டியன் மகன் 1) சண்முகராஜ் (எ) கட்டத்துரை, கயத்தாறு பிரியங்கா நகரை சேர்ந்த ஜோதிராஜா மகன் 2) ராஜா (எ) சண்முகராஜா, கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் 3) சுடலைமுத்து (எ) சண்டியர் சுடலை, கயத்தாறு மருத்துவமனைச் சாலை பகுதியைச் சேர்ந்த முத்துகுட்டி மகன்கள் 4) முத்துகிருஷ்ணன் (எ) சஞ்சய், 5) நரசிம்மன், கடம்பூர் ஓனமாக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் 6) கணேஷ்குமார், கடம்பூர் குப்பண்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான அர்ஜுனபாண்டியன் மகன் 7) சண்முகபாண்டி, பழனிகுமார் மகன் 8) அருண்குமார் (எ) அப்பு ஆகிய 8 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மேற்படி 8 எதிரிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போச்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 பேர் உட்பட மொத்தம் 68 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்..