kovilpatti makkal

kovilpatti makkal all about kovilpatti
waiting for kovilpatti district

05/07/2025
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்புவிழா  விமர்சையாக நடைபெற்றது விழாவிற்கு பாளையங்கோட்டை ம...
29/06/2025

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்புவிழா விமர்சையாக நடைபெற்றது விழாவிற்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை வைத்து ஆலய பிரதிஷ்டை செய்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினார் ..

TNPSC GR-I Mains Class + Test series @ Kovilpatti
19/06/2025

TNPSC GR-I Mains Class + Test series @ Kovilpatti

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் திரு. APK பழனி செல்வம் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அன்னார...
18/06/2025

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் திரு. APK பழனி செல்வம் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அன்னாரின் மறைவுக்கு எமது இதய பூர்வமான அஞ்சலி!

Kovilpatti - GR-II/IIA Test Series (June Batch)
18/06/2025

Kovilpatti - GR-II/IIA Test Series (June Batch)

*கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்.*மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற மேல...
16/06/2025

*கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்.*

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரானதை முன்னிட்டு வானரமுட்டி இந்து துவக்கப்பள்ளியில் மக்கள் நீதி மய்யம், புத்துயிர் இரத்ததானகழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கோவில்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் S.V. ராதாகிருஷ்ணன் முகாமிற்கு தலைமை வகித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் கோவில்பட்டி மேற்கு ஒன்றியச்செயலாளர் K.ராதாகிருஷ்ணன் முகாமினை துவக்கி வைத்தார்.கண்விழி பரிசோதகர்கள் கணேஷ்வரி, ஜோதி, ஆகியோர் 62 பேருக்கு கண்பரிசோதனை செய்தனர் 18 பேர் மேல்சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.முகாமில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், நிர்வாகி நல்லய்யா, காங்கிரஸ் கட்சி மாவட்டச்செயலாளர் துரைராஜ், திமுக ஒன்றிய செயலாளர் ராஜன் மாவட்ட கலைஇலக்கிய பேரவை துணைச் செயலாளர் தாமோதரக்கண்ணன், ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் ராஜு, கிளைச் செயலாளர் கிருஷ்ணசாமி, ஆவல்நத்தம் லட்சுமணன், AITUC உத்தண்டராமன், நடராஜபுரத்தெரு பொதுமக்கள் நலவாழ்வு இயக்க தலைவர் செண்பகம், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் முத்துமாலை, சத்யா அய்யனார், இசக்கிமுத்து, நாகராஜன், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

*கோவில்பட்டியில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்*தேசியமுற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்குமாவட்டம்  கோவில்பட்டியில் மாவ...
16/06/2025

*கோவில்பட்டியில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்*

தேசியமுற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்குமாவட்டம் கோவில்பட்டியில் மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் மாநில கேப்டன் மன்ற துணைசெயலாளர் மாவட்டதேர்தல் பொறுப்பாளர் வைரம் கோவில்பட்டி தொகுதி செயலாளர் காளிதாஸ் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பூத்கமிட்டி அமைத்து அமைத்த பூத்கமிட்டியை ஆய்வு செய்து தொகுதி செயல்வீரர் கூட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது கழக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கை காட்டும் வேட்பாளர் வெற்றிபெற செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது மேலும் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் இளைஞரணியை வலுப்படுத்த அலோசிக்கப்பட்டது இதில் செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன் மலைராஜ் கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன் கயத்தார் கிழக்கு ஒன்றியசெயலாளர் அருண் கயத்தார் பேரூர் செயலாளர் கண்ணண் கழுகுமலை பேரூர் செயலாளர் செல்லப்பாண்டி மாவட்ட கேப்பன்மன்ற செயலாளர் முத்துமாலை துணைசெயலாளர் குவாலிஷ்ராஜ் அந்தோனி மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுப்புராஜ் துணைசெயலாளர் முருகன் மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் லட்சுமனன் மாவட்ட பொறியாளர் அணி துணை செயலளர் கிரிதரன் மதிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்

*சான்றிதழ்களை தவறவிட்ட மாணவர் - கல்லூரி மாணவருக்கு உதவுங்கள்*கோவில்பட்டி மாதங்கோவில் சாலையில்  இன்று காலையில் கல்லூரி மு...
16/06/2025

*சான்றிதழ்களை தவறவிட்ட மாணவர் - கல்லூரி மாணவருக்கு உதவுங்கள்*

கோவில்பட்டி மாதங்கோவில் சாலையில் இன்று காலையில் கல்லூரி முதலாமாண்டு மாணவர் மாதவன் என்பவர் தான் கொண்டு சென்ற பேக் தவறுதலாக கீழே விழுந்துள்ளது. அதில் பள்ளி மாற்றுச் சான்றிதழ்... அரசு பொது தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை வைத்திருந்துள்ளார். யாராவது கீழே கிடப்பதை பார்த்தால்
9025823289 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

Address

Kovilpatti
628502

Website

Alerts

Be the first to know and let us send you an email when kovilpatti makkal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share