Kovilpatti ISAI FM

Kovilpatti ISAI FM Tamil Online Radio KOVILPATTI

02/07/2025

நெல் வயல் பூமி

02/07/2025
22/06/2025
13/06/2025

🔥 #மேஷ_ராசி & #உடல்நலம்: #மருத்துவ_ஜோதிடம், #பாதிப்புகள் மற்றும் #ஆயுர்வேத_தீர்வுகள்

செவ்வாயின் வீர சக்தியை நல்வழிக்கேற்ற முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

ஜாதகத்தில், ராசிகள் வெறும் குணாதிசயங்கள் மட்டும் அல்ல. அவை உடல்நலத்தையும், எந்த வகையான நோய்கள் நம்மை தாக்கும் என்பதையும் தீர்மானிக்கின்றன.
மேஷம் (Aries) என்பது ஜாதகச் சக்கரத்தின் முதலாவது ராசி. இதற்கு ஆட்சி செய்பவர் செவ்வாய் (மங்கலன்). ஆட்டம், ஆவேசம், செயல்திறன், வெற்றி விருப்பம் என அனைத்திலும் முன்னோடியாக இருப்பவர்கள். ஆனால் இந்த வீர சக்தி ஒருபோதும் சமநிலை இல்லாமல் இருந்தால் மூளை அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், காயங்கள், கோபச்சித்தம், செரிமானம் குறைபாடு ஆகிய பிரச்சனைகள் வரும்.

🔭 மேஷ ராசி – உடல் அமைப்பு சாஸ்திரம்

அடிப்படை தன்மை: அக்னி (நெருப்பு)

ஆட்சி கிரகம்: செவ்வாய்

உடல் பகுதிகள்: தலை, மூளை, கண்கள், முகம்

தோஷம்: பித்தம்

குணம்: ராஜஸிக் (செயற்பாட்டு மனநிலை)

🧠 மேஷ ராசிக்கான உடல் + மன அமைப்பு

மேஷ ராசிக்காரர்கள் மிகவேவே ஆர்வமுள்ளவர்கள், வேகமானவர்கள், ஆணைப்பூர்வமானவர்கள். ஆனால், இவர்களது உடல்நிலை பின்வரும் காரணங்களால் பாதிக்கப்படும்:

அதிக நரம்பு மண்டல ஆட்டம்

பித்தம் அதிகரிப்பு

கோபம், பீதிகள், ஆவேசம்

தூக்கமின்மை மற்றும் உள் அழுத்தம்

🩺 வழக்கமாக ஏற்படும் நோய்கள்

🔹 1. #தலைவலி, #கண்_அழுத்தம்

இந்த ராசி தலை பகுதியை கட்டுப்படுத்தும். அதனால்:

மைக்ரேன்

கண் சோர்வு

பக்கவாத நோய் வாய்ப்பு

மன அழுத்தம் வழி பித்தக் கோளாறுகள்

🔹 2. #உயர்_இரத்த_அழுத்தம்

செவ்வாயின் பாவம் காரணமாக:

உணர்ச்சி வேகம்

கோப வெடிப்புகள்

உடல் வெப்பம் அதிகரிப்பு
➡️ இது பிளட் பிரஷரை அதிகரிக்கச் செய்யும்.

🔹 3. #தோல்_பிரச்சனைகள்

பித்தம் அதிகரிக்கும் போது:

சீமாந்த விதிகள்

மோதிர வடிவ சங்கடம் (ringworm)

வெப்பக் குருவிகள்

மோட்டிவேஷன் குறைவால் ஏற்படும் தூய்மை குறைபாடு

🔹 4. #காயங்கள், #திடீர்_விபத்துகள்

வாகனம், பயிற்சி, விளையாட்டு என திடீர் காயங்களுக்கு அதிக வாய்ப்பு.
➡️ தலையில் அடிபட்டல், எலும்பு முறிவு, தீக்காயம் என்பவை உண்டாகலாம்.

🔹 5. #செரிமான_பிரச்சனைகள்

மேஷ ராசிக்கு ஜீரண அக்னி மிகவே தீவிரமாக இருக்கும். ஆனால்:

உணவுக்கு இடைவெளி

சூடான உணவுகள்

நேரம் கடந்து சாப்பிடுதல்
➡️ இது அசிடிட்டி, குதிகால் எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

📅 பாவங்கள், அந்தர தசைகள் மற்றும் பாதிப்புகள்

கிரக நிலை ஆரோக்கிய விளைவுகள்

செவ்வாய் மகாதசை உள் வெப்பம், ரத்த அழுத்தம், ஆவேசம்

சூரிய அந்தரதசை கண் பிரச்சனைகள், தாகம், துடிப்பு

ராகு அந்தரதசை திடீர் விபத்துகள், திகைப்பு, நரம்பு கோளாறு

சந்திர அந்தரதசை தூக்கமின்மை, மன ஒத்துழைப்பு குறைவு

🌿 ஆயுர்வேதம் & மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் பித்த + ராஜசிக அமைப்புடன் வாழ்பவர்கள்.

➡️ இவர்கள் "தீவிர அக்னி" கொண்டவர்கள். ஆனால் பித்தம் அதிகரிக்கும் போது:

உடலில் எரிச்சல்

வாய் புண்

தலை வெப்பம்

சீர்படுத்த வேண்டிய வழிகள்:

குளிர்பானங்கள்

காரமற்ற உணவுகள்

கசப்பும் இனிப்பும் சேர்ந்த பசுமை உணவுகள்

தினசரி தையிலைத் தேநீர்

🍽️ உணவுப்பட்டியல்

👍 பரிந்துரைக்கப்படும் உணவுகள்

வெள்ளரிக்காய், வாழைதண்டு, துளசி நீர்

நெல்லிக்காய், பழங்கள் (மாதுளை, திராட்சை)

பருப்பு சாதம், சாதம் + காய்கறி குழம்பு

மோர் (கம்கம்), ஏலக்காய், நெய்

❌ தவிர்க்க வேண்டியவை

காரம் மிகுந்த உணவுகள்

புளிக்காய்ச்சல், உப்புமோறு

பாட்டிலில் பானங்கள்

ஆல்கஹால், ரெட் மீட்

🧘‍♂️ யோகா + பிராணாயாமா

🧎‍♀️ முக்கிய யோகாசனங்கள்

சாஷாங்காசனம் (Child Pose) – மன அமைதி

ஹலாசனம் – முதுகு சுழற்சி நிவாரணம்

பவன்முக்தாசனம் – செரிமான ஆதரவு

பிரிட்ஜ் போஸ் – ரத்த ஓட்டம் சரியாக்கம்

🌬️ பிராணாயாமா

நாடி சோதனா – வலது/இடது மூச்சு சமநிலை

சீதலி, சீத்கரி – உடலை குளிர்விக்க

சந்திர பேதனா – கோபம் குறைக்க

🌿 மூலிகைகள் – மேஷராசிக்கு சிறந்தவை

மூலிகை பயன்கள்

நெல்லிக்காய் ரத்தத்தை குளிர்விக்கும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பிராமி மன அமைதி, தூக்க கட்டுப்பாடு

குடுச்சி உள் சூடுநிலையை சமநிலைப்படுத்தும்

அஸ்வகந்தா சக்தி, தைராய்டு கட்டுப்பாடு

சடாவரி ஹார்மோன் சமநிலை

சந்தனம் வெளி சூடு குறைக்கும், தோல் பிரச்சனைக்கு

🔴 செவ்வாய் தசை பரிகாரங்கள்

செவ்வாய்க்கிழமை உப்பின்றி கஞ்சி

ரத்தம் தெளிவதற்கான மூலிகை பானங்கள்

"ஓம் மங்களாய நம:" என்ற மந்திரம் 108 முறை

செவ்வாய் ஹோமம் அல்லது முருகன் வழிபாடு

🛕 திருத்தல வழிபாடுகள்

வைதீஸ்வரன் கோவில் – உடல்நலம் தேட

சுவாமி மலை முருகன் – செவ்வாய் கிரக நிவாரணம்

செவ்வாய்க்கிழமைகளில் சிவபெருமான் + முருகன் ஆராதனை

வெல்லம், சிவப்பு துணி, குங்குமம் நிவேதனம்

📅 மாத ரீதியான பராமரிப்பு

நாள்கள் பரிந்துரை செய்யப்படும் செயல்கள்

அமாவாசை எண்ணெய் தடவல், உப்பில்லாத உணவு

பவுர்ணமி சந்திர க்ரியா, சந்தன பரிகாரம்

சுக்ல பக்ஷம் உடல் சுத்திகரிப்பு, பரிசுத்தம்

கிருஷ்ண பக்ஷம் ஓய்வு, மன அமைதி தேடும் நாட்கள்

✅ மேஷ ராசிக்காரர்கள் இயற்கையாகவே வீரர் மாதிரியானவர்கள். ஆனால் அந்த வீரசக்தியை உள் அமைதி, உடல் கட்டுப்பாடு, உணர்ச்சி ஆழம் ஆகியவையாக மாற்ற முடியும்.
நல்ல உணவு, தினசரி யோகா, செவ்வாய் பரிகாரம் மற்றும் செரிமான கட்டுப்பாடுகள் மூலம், அவர்களின் தீவிர சக்தி ஒழுங்குபடுத்தப்படும்.

📿 " #தன்னை_வெல்லுபவன்_தான்__உண்மையான_வீரர்!"

#மேஷராசி #மருத்துவஜோதிடம் #ஆயுர்வேதம் #செவ்வாய்பரிகாரம் #தூக்கநிலை #வீரநிலையமைதி

12/06/2025

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்

தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது என்பதுதான் பல அம்மாக்களின் கவலை.

பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால் சமையலுக்காக மெனக்கெடுவதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாது. எல்லோருக்கும் செய்வதையே குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்புவார்கள். அது, இரண்டு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே காலியாகி, கனத்த பாக்ஸாகவே திரும்பும்போது, அம்மாக்களின் இதயமும் கனத்துப் போகும்.

இந்தப் பிரச்னைக்கு சுலபத் தீர்வு, கலந்த சாதங்கள்! ‘‘நீங்க சொல்றது சரிதான். ஆனா அதிலயும் ஒரு பிரச்னை இருக்கே.. நாலஞ்சு வகையையே திரும்பத் திரும்பச் செஞ்சு கொடுத்தா ‘போர்’னு பிள்ளைங்க முகத்தை சுளிக்க ஆரம்பிச்சுடறாங்களே..’’ என்கிறீர்களா? அந்தக் கவலை இனி வேண்டாம்.

முப்பது நாட்களுக்கும் நீங்கள் விதவிதமான கலந்த சாதங்களை செய்து அசத்த, இதோ முப்பதுவிதமான ரெசிபிகள்👇👇👇

திகட்டத் திகட்ட கல்கண்டு சாதம், சப்புக் கொட்ட நெல்லிக்காய் சாதம், உடலுக்கு வலு சேர்க்க உளுந்து பொடி சாதம், கலக்கல் காளான் சாதம்… என்று புதுமையான ரெசிபிக்கள் மட்டுமல்ல; நன்கு பரிச்சயமான தயிர், தக்காளி சாதங்களும்கூட ஸ்பெஷல் பக்குவத்தில் மாறுபட்ட சுவைகளோடு இங்கு வரிசை கட்டியிருக்கின்றன.

வெரைட்டிக்கு பஞ்சமில்லை. சுலபமாக சமைக்கலாம்.சத்தானதும்கூட. முக்கியமாக, பெரியவர்களும் ‘வேண்டாம்’ என்று சொல்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

படித்த சூட்டோடு சமைத்து பரிமாறுங்கள். ‘உங்க கை பக்குவத்துக்கு ஈடு இணையே இல்லை’ என்று வீடே கொண்டாடும்!

கோவைக்காய் சாதம்

தேவை:

உதிராக வடித்த சாதம் 2 கப், பெரிய வெங்காயம் 1, கோவைக் காய் 100 கிராம், தேங்காய்த் துருவல், மிளகாய்த் தூள் தலா 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை:

வெங்காயம், கோவைக்காயை மெல்லியதாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளித்து, வெங்காயம், தேங்காயை வதக்குங்கள். பச்சை வாடை போனதும், கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கி, கறிவேப்பிலை, எலுமிச்சம் சாறு சேர்த்து இறக்குங்கள்.

இந்தக் கலவையோடு சாதத்தைக் கலந்து பரிமாறுங்கள்.

கறிவேப்பிலை சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

பொடிக்க: மிளகு, கசகசா தலா 1 டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், முந்திரி 4, கறிவேப்பிலை 1 கப், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 6.

செய்முறை: கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள். பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.

எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில், பொடித்த பொடி, உப்பு, தாளிதக் கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்குங்கள்.

மும்பை சாதம்

தேவை: பச்சரிசி அரை கப், தோலுடன் உடைத்த பாசிப் பருப்பு 1 கப், மஞ்சள் தூள் 1 சிட்டிகை, பச்சை மிளகாய் 2, நெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

செய்முறை: குக்கரில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.

வாணலியில், மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.

இந்தக் கலவையை, சாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்.

கதம்ப சாதம்

தேவை: பச்சரிசி, துவரம் பருப்பு தலா 1 கப், காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட்…) 2 கப், சின்ன வெங்காயம் 10, தக்காளி 5, சாம்பார் தூள் 2 டேபிள் ஸ்பூன், புளி கரைசல் அரை கப், பெருங்காயம், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: காய்களை விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயம், தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். அரிசி, பருப்புடன் ஆறு கப் தண்ணீர், காய்கறிகள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

வாணலியில் எண்ணெய், நெய்யை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, சாம்பார்தூளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி, புளி கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பருப்பு சாதக் கலவையோடு சேர்த்துக் கலக்குங்கள்.

எள் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

பொடிக்க: எள் 2 டேபிள் ஸ்பூன், உளுந்து 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு.

செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் போட்டு, பொரியும்படி வறுத்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து பிறகு மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்தெடுங்கள். எள் உட்பட, வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடித்து வையுங்கள்.

நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளியுங்கள்.

சாதத்தில் எள் பொடி, உப்பு ஆகியவற்றைத் தூவி, கடுகு தாளிதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.

மாங்காய் இஞ்சி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், தோல் நீக்கி துருவிய மாங்காய் இஞ்சி துருவல் அரை கப், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் 4, எலுமிச்சை சாறு, எண்ணெய் தலா 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்,கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

பொடிக்க: உளுந்து 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு அரை டேபிள் ஸ்பூன், தனியா 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் 3, எண்ணெய் 3 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில், மாங்காய், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை வதக்கி, கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிவக்க வறுத்து பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளியுங்கள்.

சாதத்தில், அரைத்த விழுது, பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, தாளிதக் கலவை, எலுமிச்சம் சாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.

ஸ்பெஷல் எலுமிச்சம் சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், பால் 1 கப், எலுமிச்சம் பழச்சாறு 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 2 டீஸ்பூன், வேக வைத்த கொண்டைக் கடலை கால் கப், கடுகு 1 டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

செய்முறை: அரிசியுடன் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை ஒன்றிரண்டாக நசுக்குங்கள். எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுங்கள். பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, கொண்டைக் கடலை ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

இந்தக் கலவையோடு சாதத்தை சேர்த்துக் கிளறுங்கள்.

புதினா கத்தரிக்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், பச்சை கத்தரிக்காய் 8, பெரிய வெங்காயம் 1, தக்காளி 2, புளி கரைசல் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

அரைக்க: தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், புதினா, மல்லி தலா அரை கட்டு, பச்சை மிளகாய் 4, பூண்டு 6 பல்.

செய்முறை: அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரையுங்கள். வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் இவற்றை நீளவாக்கில், மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு, சீரகத்தை தாளித்து வெங்காயம், கத்தரிக்காயைச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் தூவி ஐந்து நிமிடம் வதக்குங்கள். பிறகு, அரைத்த விழுது, தக்காளி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி,புளி கரைசலைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்குங்கள்.

இந்தக் கலவையை சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.

தேங்காய்ப்பால் தக்காளி சாதம்

தேவை: பச்சை பட்டாணி அரை கப், பச்சரிசி 2 கப், தேங்காய்ப் பால் 2 கப், தக்காளி 6, பச்சை மிளகாய் 2, மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: அரிசியை சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.

சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.

புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

பிஸிபேளா பாத்

தேவை: அரிசி, துவரம் பருப்பு தலா 1 கப், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் 1 கப், தக்காளி 4, பச்சை பட்டாணி அரை கப், வேகவைத்து வழித்தெடுக்கப்பட்ட முருங்கைக்காய் விழுது அரை கப், புளி எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

அரைக்க: தனியா 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, கடலைப் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 1, கசகசா 2 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: அரிசி, பருப்புடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு மற்றும் ஆறு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்தை தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, பட்டாணி சேர்த்து வதக்குங்கள். பிறகு புளி கரைசலைச் சேர்த்து, பச்சை வாடை போகக் கொதித்ததும் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து முருங்கை விழுதை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

இதனை வெந்த அரிசி பருப்பு கலவையுடன் கலக்குங்கள்.

கல்கண்டு சாதம்

தேவை: பச்சரிசி 1 கப், பால் 1 லிட்டர், கல்கண்டு 1 கப், ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன், கிராம்பு 1, மில்க்மெய்ட் 3 டேபிள் ஸ்பூன், நெய் கால் கப், முந்திரி 10, பாதாம் 8, வெள்ளரி விதை 1 டேபிள் ஸ்பூன், சார பருப்பு அரை டேபிள் ஸ்பூன், கிராம்பு 1, ஜாதிபத்ரி சிறிதளவு.

செய்முறை: அரிசியை ஒரு கப் தண்ணீர், ஒரு லிட்டர் பால் சேர்த்து மிதமான தீயில் வேக வையுங்கள். அடிப் பிடிக்காமல் இருக்க, அவ்வப்போது கிளறிவிடுங்கள். அரிசி வெந்து குழைந்ததும் அதில் கல்கண்டை பொடித்துச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கிளறுங்கள்.

பாதாமை மெல்லிதாக சீவுங்கள். ஏலம், கிராம்பு, ஜாதிபத்ரி ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடித்து வையுங்கள். நெய்யைக் காயவைத்து முந்திரியை வறுத்து, வெள்ளரி விதை, சார பருப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

கல்கண்டு சாதத்தில் பாதாம், ஏலம், கிராம்பு, ஜாதிபத்ரி பொடி, முந்திரி, வெள்ளரிவிதை கலவையைச் சேர்த்துக் கிளறுங்கள்.

சீரக சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப் (பாசுமதி அரிசியாக இருந்தால் கூடுதல் சுவை தரும்), முந்திரி 10, சீரகம் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: நெய்யை சூடாக்கி சீரகத்தைத் தாளியுங்கள். பிறகு முந்திரியைச் சேர்த்து இளம் சிவப்பாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து இறக்குங்கள்.

சாதத்தில், சீரகக் கலவை, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கினால் சீரக சாதம் ரெடி.

ஆந்திரா புளியோதரை

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளி சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு, வெல்லத் துருவல் 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு ஒன்றரை டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 4, பெருங்காயம் அரை டீஸ்பூன்.

செய்முறை: சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற்போல வைத்து நடுவில் குழிவாக்குங்கள். அதில் பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறி), கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள். பிறகு வெல்லம் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.

மீதமுள்ள கடுகை அரைத்து வையுங்கள்.

சாதத்தில் புளி கலவை, அரைத்து வைத்துள்ள கடுகு விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

மாங்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளிப்பான மாங்காய் துருவல் 1 கப், பச்சை மிளகாய் 6, பெருங்காயம் 1 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, தலா அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் மாங்காய்த் துருவல் மற்றும் மிளகாயை வதக்கி எடுத்து கரகரப்பாக அரையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில், கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்து, மஞ்சள் தூள் சேர்த்து இறக்குங்கள். இதனை மாங்காய் கலவையோடு சேர்த்து மேலும் ஒரு சுற்று அரைத்தெடுங்கள்.

சாதத்தில், அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்துக் கலக்குங்கள்.

தோசைக்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், தோசைக் காய் 1, பச்சை மிளகாய் 6, புளி சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: தோசைக்காயின் தோல், விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் தோசைக் காயை வதக்குங்கள். பிறகு பச்சை மிளகாய், புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.

சாதத்தில், அரைத்த விழுது, உப்பு, கடுகு தாளிதக் கலவை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.

பூண்டு சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், சின்ன வெங்காயம் அரை கப், பூண்டு 1 கப், இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு, வறுத்துப் பொடித்த மிளகுத் தூள் 2 டீஸ்பூன், சீரகத் தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 4, உப்பு தேவைக்கு.

செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி இவற்றின் தோலை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்குங்கள். நெய்யில் கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

இந்த பூண்டுக் கலவையில் சாதத்தைச் சேர்த்து, தேவையான உப்பு தூவிக் கிளறுங்கள்.

மாங்காய் மசாலா சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளிப்பான மாங்காய் 1, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், கடுகுத் தூள் 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: மாங்காயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயுடன் மாங்காய், பொடி வகைகள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.

நெய்யில் கடு-கை பொரித்தெடுங்கள்.

சூடான சாதத்தில் தாளிதக் கலவை மற்றும் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.

சோயா சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், சோயா உருண்டைகள் அரை கப், பெரிய வெங்காயம் 2, இஞ்சி,பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 4 டீஸ்பூன், தயிர் அரை கப், கரம் மசாலாத் தூள் 1 டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில், சன்னமாக நறுக்குங்கள்.

குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகத்தை தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். பிறகு அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வையுங்கள்.

ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

அரை நெல்லிக்காய் சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், அரை நெல்லிக்காய் அரை கப், பச்சை மிளகாய் 10, தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன், பெருங்காயம் 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, மஞ்சள்தூள் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள். 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு, நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி நைஸாக அரைத்தெடுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.

சாதத்தில், நெல்லிக்காய் விழுது, கடுகு தாளிதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

கொண்டைக்கடலை சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், சிறிய கருப்பு கொண்டைக் கடலை அரை கப், தேங்காய்ப் பால் 2 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள், கரம் மசாலா தலா 1 டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 1 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை 2, உப்பு தேவைக்கு.

செய்முறை: கடலையை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் வேகவைத்து எடுத்து வையுங்கள்.

வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்குங்கள்.

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளியுங்கள். பிறகு வெங்காயம், தக்காளியை வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு தேங்காய்ப் பால், இரண்டு கப் தண்ணீர், தேவையான உப்பு, வேக வைத்த கடலை, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, மேலும் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து இறக்குங்கள்.

ஸ்பெஷல் தக்காளி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 6, பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, மல்லித்தழை தலா சிறிதளவு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

பொடிக்க (முதல் வகை): பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, கசகசா 2 டீஸ்பூன், முந்திரி 6, எண்ணெய் 1 டீஸ்பூன்.

மற்றொரு வகை பொடிக்கு: தனியா, துவரம் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 4, கொப்பரை தேங்காய்த் துருவல் 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.

செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை (இரண்டு வகையையும் தனித்தனியாக) வறுத்து பொடித்து வையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.

வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்தை தாளியுங்கள். பிறகு வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி இறக்குங்கள். சாதத்தில், பொடி வகையை தூவி, தக்காளி கலவை மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துக் கிளறுங்கள்.

காய்கறி சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், காய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) 1 கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, பெரிய வெங்காயம் 3, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், தயிர் அரை கப், புதினா, மல்லி தலா அரை கட்டு, பச்சை மிளகாய் 3, மிளகாய் தூள் 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: குக்கரில் எண்ணெய், நெய்யைச் சூடாக்கி பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள். பின்னர் காய்களைச் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி ஆறு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அரிசியைச் சேர்த்து கிளறி மூடி வையுங்கள்.

ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

உளுந்து பொடி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

பொடிக்க: முழு உளுந்து 4 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கொப்பரைத் தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன்.

செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை, மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்துப் பொடியோடு சேர்த்துக் கலக்குங்கள்.

சாதத்தில், பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறுங்கள்.

வெந்தயக்கீரை சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், வெந்தயக்கீரை 2 கட்டு, தக்காளி 3, வெங்காயம் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 10 பல், பச்சை மிளகாய் 4, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா தலா 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் ஒரு கப், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: கீரையைச் சுத்தம் செய்யுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை நசுக்குங்கள். எண்ணெயில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு வெங்காயம், கீரை, தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மீதமுள்ள மசாலாத்தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும், இந்தக் கலவையோடு தேங்காய்ப் பால், நான்கு கப் தண்ணீர், தேவையான உப்பு, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள்.

ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

ஸ்பெஷல் தயிர் சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், பால் அரை கப், புளிக்காத புதிய தயிர் இரண்டரை கப், இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது 2 டீஸ்பூன், வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித் தழை சிறிது, கடுகு 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பொடியாக நறுக்கிய முந்திரி 2 டேபிள் ஸ்பூன், திராட்சை 15, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: சாதத்தை குழைவாக வேக வையுங்கள். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.

எண்ணெயில் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை தாளியுங்கள்.

சாதத்தில் தாளிதக் கலவை, தயிரைக் கலக்குங்கள்.

கத்தரி மொச்சை சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கத்தரிக்காய் 6, காய்ந்த மொச்சை கால் கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, பிரிஞ்சி இலை 2, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: தேங்காய் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், தனியாத் தூள் அரை டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 3 பல், சோம்பு அரை டீஸ்பூன்.

செய்முறை: மொச்சைக் கொட்டையை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வையுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை மெல்லியதாக நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.

எண்ணெயில், பிரிஞ்சி இலையைத் தாளித்து வெங்காயம், கத்தரிக்காயை மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள். காய் முக்கால் பதம் வெந்ததும், தக்காளி, அரைத்த விழுது, மொச்சைக் கொட்டை, தேவையான உப்பு சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.

சாதத்துடன் இந்த விழுதைச் சேர்த்துக் கலக்குங்கள்.

கொத்துமல்லி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

அரைக்க: மல்லித் தழை 2 கட்டு, மிளகாய் வற்றல் 10, உளுந்து 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு, புளி சிறு எலுமிச்சை அளவு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: மல்லித் தழையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயில் பெருங்காயம், மிளகாய் வற்றலை வறுத்தெடுங்கள். பிறகு உளுந்தை வறுத்து எடுத்து தனியே வையுங்கள். பிறகு மல்லித் தழையை வதக்குங்கள்.

இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் உப்பு, புளி சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.

நெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளியுங்கள்.

சாதத்தில், அரைத்த விழுது, தாளிதக் கலவை, உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கிளறுங்கள்.

காய்கறி எலுமிச்சம் சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், எலுமிச்சம் பழம் 2, கேரட் 1, பீன்ஸ் 10, காலிஃப்ளவர் 1 துண்டு, பட்டாணி அரை கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், முந்திரி 10, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள். காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.

எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்து காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.

இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.

கூட்டாஞ்சோறு

தேவை: புழுங்கல் அரிசி 2 கப், துவரம் பருப்பு அரை கப், கேரட், கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவை தலா 1, வாழைக்காய் பாதியளவு, முருங்கைகீரை, அரைக் கீரை, முளைக் கீரை தலா 2 கைப்பிடி, சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் தலா 8, பூண்டு 6 பல், கடுகு, உளுந்து, சீரகம் தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு, தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், புளி சிறிய எலுமிச்சை அளவு, வடகம் 3 துண்டு, உப்பு தேவைக்கு.

செய்முறை: காய்களை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், பூண்டு, தேங்காய்த் துருவல், மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். புளியை சிறிதளவு நீரில் கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.

அரிசி, பருப்புடன் காய்கள், கீரை வகைகள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது, புளி கரைசல், நான்கு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் போட்டு மூடி வையுங்கள். 1 விசில் வந்ததும், மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

எண்ணெயில் கடுகு, உளுந்தை தாளித்து, வடகத்தைப் பொரித்தெடுங்கள்.

இந்த வடகக் கலவையைச் சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்....

Manila kalaivannam
11/06/2025

Manila kalaivannam

10/06/2025

ரசம் புரட்சி – புளி & மிளகு நம் இரத்த சர்க்கரையை எவ்வாறு சமநிலைப்படுத்துகின்றன? தமிழ் சமையலின் மருத்துவப் பரிணாமம்!

"இரவு சாப்பாட்டுக்கு ஒரு கப் ரசம் இருந்தா போதும்" என்பதெல்லாம் இனி களவான சொல் அல்ல. உண்மை!

தமிழ் சமையலின் மூல அடையாளமாக விளங்கும் "ரசம்" என்பது வெறும் கசக்கட்ட சாறு அல்ல. இது ஒரு மருந்துப் பானம்.
ஏனெனில் அதில் உள்ள இரண்டு முக்கியமான மூலிகைகள் – புளி மற்றும் மிளகு – உணவின் சுவையை மட்டுமல்ல, உடலின் சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

🍋 புளி – குடல் சக்கரையை தடுக்கும் கேடயம்

புளியில் உள்ள சத்துக்கள்:

பாலிபீனால்கள் மற்றும் ஃபிளேவனாய்ட்கள் ➜ நச்சுச்சத்தை அகற்றும்

டார்டெரிக் அமிலம் ➜ கல்லீரல் சுத்தம் செய்கிறது

நார்ச்சத்து ➜ ஜீரண வேகத்தை குறைத்து சக்கரை உறிஞ்சும் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது

🔬 ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டது:

Journal of Natural Remedies ஆய்விதழ், 2022:

புளி சாறு 4 வாரங்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்ட நீரிழிவு நோயாளிகளில்,

Post-meal sugar (PPBS) 22% குறைந்தது

இன்சுலின் உணர்வு மேம்பட்டது

🧘🏽‍♂️ ஆயுர்வேத பார்வையில்:

அம்லம் (sour)

வாத – கப சமம்

தீபனம், பாசனம் ➜ அக்னியை தூண்டும், ஆமாவை அகற்றும்

🌶️ மிளகு – ஜீரண மெட்டபாலிசம் தூண்டும் சக்தி

மிளகின் நன்மைகள்:

பைபரின் (Piperine) – ஒரு முக்கிய மருந்து உறிஞ்சி சக்தி கொண்ட இயற்கை சேர்க்கை

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை தசைகளில் செல்ல உதவுகிறது

ஜீரணத்தை மேம்படுத்துகிறது

உடல் வெப்பத்தை, மெட்டபாலிசத்தை தூண்டும்

ஆயுர்வேத குணங்கள்:

கடு ரசம் (pungent taste)

அமா (toxins) அகற்றும்

அக்னி தூண்டும்

ஸ்ரோதஸ்கள் (நாளங்கள்) சுத்தமாக்கும்

🥣 நீரிழிவுக்காக ரசம் ஏன் சிறந்தது?

லேசானது, வெப்பம் தரும், எளிதில் ஜீரணமாகும்

குடல் சுகத்திற்கு சிறந்த மூலிகைகள் – சீரகம், பூண்டு, மிளகு, கருவேப்பிலை, கொத்தமல்லி

Bile secretion தூண்டி கல்லீரல் சுத்தம் செய்கிறது

இன்சுலின் எதிர்ப்பை குறைக்கும்

🩺 வெல்நெஸ் குருஜி டாக்டர் கௌதமனின் பரிந்துரை:

ரசம் என்பது உணவு அல்ல – அது மருந்து.
நீரிழிவை மாற்ற விரும்பும் ஒருவர் தினமும் சாப்பாட்டுக்கு ரசம் சாப்பிட வேண்டும்.

SHREEVARMA ஆயுர்வேத மருத்துவமனையில், Diabetes reversal programs-இல், ரசம் உணவாக மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

முன் உணவு (starter) ஆக வேகப்படுத்தும்

சக்கரை உயரும் வேகத்தைக் கட்டுப்படுத்தும்

குடல் சீராக்கும் பானமாக பரிந்துரைக்கப்படுகிறது

🧑🏽‍🍳 ரசம் எப்படி தயாரிக்க வேண்டும்?

✅ ரசம் பொடி தவிர்க்கவும் – எப்போதும் பச்சை மூலிகைகளால் தயார் செய்யவும்
✅ புளி குழம்பு – சுத்தமான புளி சாறு பயன்படுத்தவும்
✅ மிளகு-ஜீரகம்-பூண்டு-கருவேப்பிலை சேர்க்கவும்
✅ கொதிக்க விடாதீர்கள் – மெதுவாக கொதிக்க வைக்கவும்

🍽️ ஒரு நாள் உணவு மாதிரி:

காலை: தினை உப்புமா + இஞ்சி தேநீர்

மதியம்: சாமை சாதம் + கீரை + புளி-மிளகு ரசம்

இரவு: கம்பு கஞ்சி + வெந்தய பொடி + கொத்தமல்லி ரசம்

மருந்தாக ரசம், மகிமையாக புளி, மாற்றமாக மிளகு.
சக்கரை உயர்ந்தால் மாத்திரையை நினைக்காமல், மெதுவாக கொதிக்கும் ரசத்தை நினையுங்கள்.

9500946638 / www.shreevarma.online

#நீரிழிவு_மாற்றம்
#வெல்ல்நெஸ்_குருஜி_பேச்சு


#ரசம்_மருந்து
#புளி_மிளகு_மருந்து
#தமிழ்_சமையல்_சக்கரை_தீர்வு
#உணவே_மருந்து
#ஆயுர்வேத_உணவியல்
#சக்கரை_நோய்க்கு_சமையல்

Address

629/KGanesh Nagar
Kovilpatti
628501

Alerts

Be the first to know and let us send you an email when Kovilpatti ISAI FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kovilpatti ISAI FM:

Share