Krishnagiri Express News - கிருஷ்ணகிரி எக்ஸ்பிரஸ்

  • Home
  • India
  • Krishnagiri
  • Krishnagiri Express News - கிருஷ்ணகிரி எக்ஸ்பிரஸ்

Krishnagiri Express News - கிருஷ்ணகிரி எக்ஸ்பிரஸ் செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு 9489-21-2424

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக வந்துள்ளார். காலை 11 மணியளவில் கிருஷ...
14/09/2025

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக வந்துள்ளார். காலை 11 மணியளவில் கிருஷ்ணகிரிக்கு வந்த அவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து நடை பயணமாக தமிழ்நாடு பழைய வீட்டு வசதி பாடிய குடியிருப்பு வழியாக லண்டன் பேட்டை வரை சென்றார். பின்னர் வாகனத்தின் மூலம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் விழாவில் கலந்து கொண்டார்.

14/09/2025

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ரோட் ஷோ

14/09/2025

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் நடை பயணம்....

13/09/2025

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்வில் சீதாராம்யெச்சூரி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறும்படம் திரையிடப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி நினைவுரை ஆற்றினார். மனித சமுதாயத்திற்கு தங்கள் பங்களிப்பாக உடல் தானம் நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் தானம் செய்தனர் அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் 20 பேர் உடல் தானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் சி.சுரேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா மீதான அமெரிக்கா அரசின் அடாவடித்தனமான வரி விதிப்பை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஓசூரில...
05/09/2025

இந்தியா மீதான அமெரிக்கா அரசின் அடாவடித்தனமான வரி விதிப்பை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஓசூரில் CPIM மாவட்ட செயலாளர் தோழர் சி.சுரேஷ், CPI மாவட்ட செயலாளர் தோழர் டி.ராமச்சந்திரன், CPI(ML) விடுதலை மாவட்ட செயலாளர் தோழர் ஸ்டாலின் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. CPIM மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி, CPI மாநில நிர்வாக குழு உறுப்பினர் தோழர் இலகுமய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இடதுசாரி கட்சிகளின் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் உள்ள சந்தூரில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட டைல்ஸ் சங்கம் உதயமாக உள்ளது. 7/9/25 அன...
03/09/2025

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் உள்ள சந்தூரில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட டைல்ஸ் சங்கம் உதயமாக உள்ளது. 7/9/25 அன்று கூலி தொழிலாளர் தின விழாவை முன்னிட்டு சங்க துவக்க விழாவிற்கு அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பேரவை கூட்டம் ஓசூரில் உள்ள தின்னூரில் உள்ள ADS மஹாலில் நடைபெற்றது. மார...
31/08/2025

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பேரவை கூட்டம் ஓசூரில் உள்ள தின்னூரில் உள்ள ADS மஹாலில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் C.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில செயலாளர் பெ.சண்முகம் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் R.பத்ரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி துவங்க இருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது, மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உட்கட்சி தேர்தல் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் நெப்போலியன...
31/08/2025

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உட்கட்சி தேர்தல் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒன்றிய, நகர, தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர். இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் கரும்புலி செந்தில்முருகன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சபரிநாதன், மாவட்ட பொறுப்பாளர் சனாவுல்லா, நகர செயலாளர் ரவி மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் மூர்த்தி, வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்களின் கூட்டமைப்பு  பேரவை கூட்டம் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 24.8.2025...
25/08/2025

ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்களின் கூட்டமைப்பு பேரவை கூட்டம் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

24.8.2025 ஞாயிற்றுக்கிழமை ஒசூர் சுவாதி பள்ளியில் நடைபெற்ற குடியிருப்பு சங்க பேரவை கூட்டத்தில் கிழ்கண்ட HOFARWA புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள் கீழ்க்கண்ட நிர்வாக குழு ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்களின் கூட்டமைப்பு வழிநடத்தும் ஆர்.நீலகண்டன் தலைவர் J.ஜெயச்சந்திரன் பொதுச்செயலாளர், S.முருகன் பொருளாளர். துணைத் தலைவர்கள் G.பிராபகர், சி.பி.ஜெயராமன், அ.சூசை பிரகாஷ், சு.பன்னிர்செல்வம், E.பார்த்திபன், S.முகமது அன்வர், N.கமலநாதன், இரா.பாலகிருஷ்ணன், இணைச் செயலாளர்கள் ஆ.சிவக்குமார், அப்துல்ஹக்கிம், K.V.மகேஸ்வரன், S.R.குணசேகர், M.பிரகாஷ், S.M.சேகர் பாபு, P.பரணி, A.விசுவநாதன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளராக செந்தில்முருகன் நியமனம்தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில வ...
25/08/2025

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளராக செந்தில்முருகன் நியமனம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளராக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி செந்தில்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் நிறுவனர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் நியமன ஆணையை வழங்கி அறிவித்தார். விவசாயிகள் நலனுக்காக கட்சி தொடர்ந்து போராடி வருவதாகவும், புதிய பொறுப்பில் செந்தில்முருகன் ஆற்றலுடன் செயல்படுவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

#தமிழகவாழ்வுரிமைக்கட்சி

அறிவியல் மனப்பான்மைக்கான கூட்டு இயக்கங்கள் சார்பாக தேசிய அறிவியல் மனப்பான்மை தின விழிப்புணர்வு  தேசிய அறிவியல் மனப்பான்ம...
21/08/2025

அறிவியல் மனப்பான்மைக்கான கூட்டு இயக்கங்கள் சார்பாக தேசிய அறிவியல் மனப்பான்மை தின விழிப்புணர்வு

தேசிய அறிவியல் மனப்பான்மை தினத்தை முன்னிட்டும், மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி பேராசிரியர் நரேந்தர் தபோல்கர் நினைவு தினத்தை முன்னிட்டும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பின் 51 A ( h ) பிரிவு ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை , மனித நேயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டம் நடைபெற்றது. அறிவியல் மனப்பான்மை உறுதி ஏற்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்களின் கூட்டமைப்பு, பகுத்தறிவாளர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கல்வி இயக்கம், சமூக விஞ்ஞான ஆய்வரங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட குடியிருப்போர் நலச்சங்கம், இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம். CWFI உள்ளிட்ட அமைப்புகள் பங்கு பெற்றன. அறிவியலுக்கு புறம்பான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும், அறிவியல் ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும், தொலைக்காட்சிகளிலும், மூடநம்பிக்கை பரப்பும் விதமாக இயக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர் மேலும் பேராசிரியர் நரேந்தர் தபோல்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என 50 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

#

Address

Krishnagiri
635001

Telephone

+919489212424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishnagiri Express News - கிருஷ்ணகிரி எக்ஸ்பிரஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishnagiri Express News - கிருஷ்ணகிரி எக்ஸ்பிரஸ்:

Share