
05/08/2025
திரையரங்கம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு : -
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்தில், ஈழத்தமிழர்களை குற்றவாளிகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து, முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
முத்தமிழன் தி வேல்முருகன் அவர்களின் ஆணைக்கிணங்க.. கிருஷ்ணகிரி ராஜா தியேட்டரில் திரையிடப்படும் கிங்டம் திரைப்படத்தை திரையிடாமல் தடுத்து திரையரங்கத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை காலை 10 மணி அளவில் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது....
எனவே தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒருங்கிணைந்த மாநில,மாவட்ட, மாநகராட்சி,பேரூராட்சி ,நகராட்சி , ஒன்றியம் என அனைத்து பொறுப்பாளர்களும் அனைத்து தொண்டர்களும் அனைத்து அணி நிர்வாகிகளும், மகளிர் அணியினர்.. என அனைத்து விதமான பொறுப்பாளர்களும் தவறாமல் நாளை காலை 10 மணிக்குள் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் அனைவரும் வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது..
குறிப்பு : - இந்தத் திரையரங்கம் முற்றுகை போராட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்.. அதனால் தவறாமல் சரியான நேரத்திற்க்குள் வர வேணடும் என அறிவுறுத்தப்படுகிறது .....
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டம்
ADVERTISEMENT