02/07/2025
(இந்த பெண்ணின் இறப்பிற்கு யார் காரணம்..??) இத்தன அழகான ஒரு பொண்ண பெத்து, வளத்து, படிக்கவும் வச்சி ஐநூறு பவுன பேசி முன்னூறு பவுன போட்டு இதுலயே காரு, பணம்னு கேட்டாலே தலை சுத்துது.... இங்க ஒரு இருவதாயிரம் வேலைக்கு அஞ்சி லட்சம் கட்ட சொன்னாலே அந்த காசிருந்தா வட்டிக்கு விட்டு பொழைச்சுப்பேன்னு சொன்ன பொண்ணுங்கள பாத்துருக்கேன்....
கல்யாணம் பண்ணி கொடுத்து புருசன் சரியில்லன்னா போடான்னுட்டு புள்ளையோட தனியா வளக்குற நிறைய பேர பாத்துருக்கேன்... எல்லாருமே சாதாரண நடுத்தர அதுக்கும் கீழ உள்ளவங்கதான் மேலும் படிப்பறிவே இல்லாதவங்க...
இங்க இத்தன வசதியான குடும்பத்துலேர்ந்து போயி, படிச்சிருந்தும் இந்த பொண்ணு இந்த முடிவ எடுத்திருக்காங்கன்னா அதுக்கு முழுக்க முழுக்க அந்த பொண்ணோட பெத்தவங்கதான் காரணம்
அந்த பொண்ணு பேசிருக்கறதுல அவங்க சொல்லுறதே என்னால உங்களுக்கு கஷ்டம் வேணாம், என்ன இப்படி நீங்க பாக்க வேணாம், எனக்காக நீங்க கஷ்டப்பட்டீங்க, நான் பொய்யெல்லாம் சொல்லலன்னுதான்....
அப்போ அந்த பொண்ணு சொன்னத இவங்க நம்பாம இருந்திருக்காங்க... நீதான் பொறுத்து போகனுன்னு சொல்லிருக்காங்க... மனசளவுல பாதிக்கப்பட்டு நிர்க்கதி ஆனதாலதான் அந்த பொண்ணு இப்படி ஒரு முடிவ எடுத்திருக்கனும்....
முழுக்க முழுக்க இந்த சொசைட்டிக்காக எடுக்கப்பட்ட முடிவு அது.... சாதாரண குடும்பத்து பொண்ணா இருந்தா கூட போடான்னுட்டு வந்திருக்கும் போல.... அந்த குரல கேக்க கேக்க ஆத்திரம் அடைக்குது...
~ச்சைக் போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்....
Article from Facebook feed - Priyanga Siddharthan
(Shared in public Interests)