KLM - Kulasekharam

KLM - Kulasekharam குலசேகரம் செய்திகள்
இது குலசேகரம் ஊ?

கல்லுப்பாலம் பகுதியில் விபத்து
05/08/2020

கல்லுப்பாலம் பகுதியில் விபத்து

Share ...
27/03/2020

Share ...

23/03/2020

Corona Vaccine Medicine given by
SARADHA KRISHNA HOMEOPATHIC MEDICAL COLLEGE
KULASEKHARAM , KANNIYAKUMARI District-629161

09/02/2020

புதுக்கடை அருகேயுள்ள செந்தறை பகுதியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டபெண் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

புதுக்கடை செந்தறை பகுதியைச் சோந்தவா் வேல்குமாா் மனைவி நிவேதிதா (33). இவரது, கணவா் வேல்குமாா் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறாா். தம்பதிக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இதனிடையே, கா்ப்பமடைந்த நிவேதிதா,பிரசவத்திற்காக வெள்ளிக்கிழமை மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. எனினும், நிவேதிதாவின் உடல்நிலை மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரை தீவிரசிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு சிகிச்சை பலனின்றிஅவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நிவேதிதாவின் தந்தை செல்லசுவாமி (71) மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புதுக்கடைபோலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேசிய நெடுஞ்சாலை 47 பொதுவாக என்எச் 47 என குறிப்பிடப்படுகிறது. தென்னிந்தியாவில் கன்னியாகுமரியையும், சேலத்தையும் இணைக்கும்...
09/02/2020

தேசிய நெடுஞ்சாலை 47 பொதுவாக என்எச் 47 என குறிப்பிடப்படுகிறது. தென்னிந்தியாவில் கன்னியாகுமரியையும், சேலத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக இது உள்ளது. இதன் நீளம் 650 கிமீ(400 மைல்). இந்நெடுஞ்சாலை கேரளம் மற்றும் தமிழகம் வழியாக செல்கிறது.மேலும், சேலம், பெருந்துறை, கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், கொச்சி, ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் போன்ற பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கிறது.குமரி மாவட்டத்தில் என்எச் 47 மிக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக விளங்குகிறது. ஆனால் சமீபகாலமாக இந்த சாலை பல இடங்களில் பழுதடைந்து குண்டும், குழியுமாக விளங்கி வருகிறது.

இதனால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுவதோடு, பொதுமக்கள் பல்வேறு அவதிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

சாலையை செப்பனிட கேட்டும், பல போராட்டங்கள் நடத்தியும் சம்பந்தப்பட்டவர்கள் 'செவிடன் காதில் ஊதிய சங்காக' கண்மூடி மவுனம் சாதித்து வருகின்றனர். இதனால் பல உயிரிழப்புகள் உட்பட பல இழப்புகளை சந்திக்கும் நிலை தொடர்கிறது. இந்த நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்த இடங்களில் ஆங்காங்கே ஒட்டு போடப்பட்டுள்ளது.

இந்த பகுதி சாலையை விட சற்று மேடாக இருப்பதால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் உள்ளது. வேகமாக செல்ல முடியவில்லை. இதுபோல மேடுபள்ளங்களில் ஏறி இறங்கும்போது ஏற்படும் அதிர்வால் வாகனங்களில் இருப்பவர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அரசு பஸ்களில் செல்லும் முதியவர்கள், நோயாளிகள், பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். டப்பா அரசு பஸ்களில் சாதாரண சாலைகளில் செல்வதே சவாலாக உள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற மேடுபள்ளங்களில் பஸ்கள் செல்லும்போது அதில் பயணம் செய்யும் அவஸ்தை குறித்து சொல்வதற்கில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி தேசிய நெடுஞ்சாலை என்எச்47ஐ முறையாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

130 நாடுகள், 20 நாடுகளில் நம்பர் ஒன் பிராண்ட், குறைந்தபட்சம் 40 கோடி பேர் பயன்படுத்துராங்க.. ஆனாலும், அஜினமோட்டோன்னு சொன...
08/02/2020

130 நாடுகள், 20 நாடுகளில் நம்பர் ஒன் பிராண்ட், குறைந்தபட்சம் 40 கோடி பேர் பயன்படுத்துராங்க.. ஆனாலும், அஜினமோட்டோன்னு சொன்னவிடனேயே, சர்ச்சைதான் முதலில் கண்முன்வருது.

இந்த சர்ச்சைகள் குறித்த பார்ப்பதற்கு முன்னால், முதலில், அஜினமோட்டோ என்பது ஒரு நிறுவனத்தோட பெயர்.. அதன் தயாரிப்பான இயற்கையியல் உப்பான MSG. எனும் மோனோ சோடியம் குளுட்டோமேட் என்பதுதான் சர்ச்சையான பொருள்னனு தெரிஞ்சுக்கனும்.

ஏன்னா, நம்மில் பல பேர் எம்.எஸ். ஜி உப்பு பெயரே, அஜினமோட்டோன்னு நினைச்சிட்டு இருக்கோம்.. அஜினமோட்டோ மாதிரி பல நிறுவனங்கள் இந்த எம்.எஸ்.ஜி உப்ப தயாரிக்கிறாங்க. இந்த எம்.எஸ். ஜி என்பது, உணவுக்கு ஒரு சுவைக்கூட்டான் போல் செயல்படுகிறது.

சுவைக்கூட்டான் என கூறப்படும் இந்த எம்.எஸ்.ஜி-யால் அலர்ஜி எனும் ஒவ்வாமை முதல் புற்றுநோய் வரை வருவதாக பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

உணவு தரத்தை நிர்ணயிக்கும் பல்வேறு நிறுவனங்கள் அஜினமோட்டாவின் எம்.எஸ்.ஜி-யால் பிரச்சனை இல்லைன்னு சொல்ரதா, அந்நிறுவனம் சொன்னாலும், மேகி நூடுல்ஸ் பிரச்சினை வந்ததில் இருந்தே, அஜினமோட்டோன்னாலே, ஒருவித சர்ச்சை தொடர்ந்து இருக்கு.

தற்போது கூட, தாய்லாந்தில் உள்ள சர்வதேச தரத்துடன் கூடிய அஜினிமோட்டா நிறுவனத்தில் இருந்துதான், எம்.எஸ். ஜி தயாரிப்புகள், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறதாம்.

தற்போது, இந்தியாவில் எம்.எஸ்.ஜி எனும் சுவை கூட்டான் விற்பனை, ஆண்டுக்கு10 ஆயிரம் டன்களாக இருக்கிறது. இதில், அஜினமோட்டாவின் பங்கு, வெறும் 10 சதவீதம் என்றும், கலப்படங்களின் ஆதிக்கத்தால், நல்ல நிறுவனங்களுக்கு கெட்டப் பெயர் எனக் கூறுகிறது அஜினமோட்டோ நிறுவனம்.

உணவு தர நிறுவனங்கள் என்னதான் சான்றிதழ்கள் தந்தாலும், வாடிக்கையாளர் மனதில் அஜினமோட்டோ எம்.எஸ்.ஜி சுவைக்கூட்டான் என்றாலே ஒருவித அச்சம் இருக்கிறது என்பதுதான் யதார்த்த கள நிலவரம்.

இந்தியாவின் உணவு தர கட்டுப்பாடு அமைப்புகூட, எம்எஸ்ஜி சேர்க்கப்பட்டிருக்கிறது என்ற முத்திரையுடன்தான் குறிப்பிட்ட பொருட்களை விற்க வேண்டும் எனக் கூறியிருப்பதையும் நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

என்னதான் விற்பனைக்கு பல திட்டங்கள் வைத்தாலும், இந்திய வாடிக்கையாளர் மனதில் நம்பிக்கையான இடத்தை அஜினமோட்டோ பிடிப்பது என்பது மிகப்பெரிய சவால்தான்.

போஸ்னியா நாட்டில் ஒரு உயிரினம் 7ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் முழுமையாக ஓய்வெடுப்பது கண்டறியப்பட்டுள்ளது.போஸ்னியா நா...
08/02/2020

போஸ்னியா நாட்டில் ஒரு உயிரினம் 7ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் முழுமையாக ஓய்வெடுப்பது கண்டறியப்பட்டுள்ளது.

போஸ்னியா நாட்டில் உள்ள குகை ஒன்றில் வசிக்கும் சாலமண்டர் என்ற உயிரினம் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் முழுமையாக ஓய்வெடுப்பது கண்டறியப்பட்டுள்ளது. பல்லி போன்ற உருவம் கொண்ட இந்த உயிரினம் கடந்த 2,569 நாட்களுக்கும் மேலாக இருந்த இடத்தை விட்டு கொஞ்சம்கூட நகராமல் அப்படியே ஓய்வெடுத்து வருகிறது. இந்த தகவலை பிரபல நியூயார்க் டைம்ஸ் போஸ்ட் வெளியிட்டுள்ளது. ஒரு அடி நீளம் கொண்ட சாலமண்டர் உயிரினம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழக் கூடியது என்று கூறப்படுகிறது.

மேலும் பல நாட்கள் உணவு இல்லாமலே சாலமண்டர்கள் உயிர் வாழக் கூடிய திறனை பெற்றுள்ளன. பொதுவாக இந்த உயிரினம் ஓராண்டு வரை மட்டுமே ஒரே இடத்தில ஓய்வு எடுக்கும். ஆனால், ஆச்சர்யத்தக்க வகையில் போஸ்னியாவில் இந்த உயிரினம் 7 ஆண்டுகளாக தன்னுடைய மூன்று விரல்களில் ஒன்றைக் கூட அசைக்காமல் பிசின் போல குகைக்குள் ஓட்டிக் கொண்டுள்ளது. எப்போது தனக்கேற்ற துணை தேவைப்படுகிறதோ அப்போதுதான் இந்த உயிரினம் நகர ஆரம்பிக்கும். அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த உயிரினத்தில் வாழ்நாளில் இது நிகழும் என்று கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களால் தவறவிடப்பட்ட 13 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது....
08/02/2020

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களால் தவறவிடப்பட்ட 13 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மொபைல்களைக் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் உரியவர்களுக்கு வழங்கினார். உரிமையாளர்களால் தவறவிடப்பட்ட மொபைல் போன்களை சிலர் எடுத்து பயன்படுத்தியுள்ளனர். அதை மொபைல் லோக்கேஷன் மூலம் கண்டுபிடித்து மீட்கப்பட்டதாக எஸ்.பி ஸ்ரீநாத் தெரிவித்தார்.

வீட்டுத் தண்ணீர் குழாயில் தண்ணீர் வந்தால் அதில் வியப்படையத் தேவையில்லை. ஆனால், குழாயில் மதுபானம் வந்தால் எப்படி இருக்கும...
07/02/2020

வீட்டுத் தண்ணீர் குழாயில் தண்ணீர் வந்தால் அதில் வியப்படையத் தேவையில்லை. ஆனால், குழாயில் மதுபானம் வந்தால் எப்படி இருக்கும்? கேரளாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம், சாலக்குடியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சாலக்குடி நகரில் உள்ள நியூ சாலமன் குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு 18க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் குடியிருப்பு மக்களுக்கு மட்டும் தண்ணீர் வழங்குவதற்காக ஒரு கிணறு இருக்கிறது. இந்தக் கிணற்றில் இருந்து குடியிருப்புவாசிகளின் பயன்பாட்டுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் வழக்கம் போல் குடியிருப்புவாசிகள் வீட்டுத் தண்ணீர் குழாயைத் திறந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

குழாயிலிருந்து வந்த தண்ணீர் அனைத்தும் மதுவின் வாசனையோடு இருந்தது. அதைக் குடித்தாலும், மதுவைக் குடித்ததுபோன்று இருந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் காரணம் புரியாமல் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில் கிணற்றுக்கு அருகே இருக்கும் பெரிய பள்ளத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்துள்ளன. அந்த மதுவகைகள் கிணற்று நீரில் கலந்து மதுவாக மாறியுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சாலக்குடி பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக இயங்கிய மதுபாரில் இருந்து 450 பெட்டிகள் கொண்ட மதுவகைகளைப் ரஞ்சாலக்குடா கலால் வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அந்த மது வகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில் 2500 லிட்டர் மது வகைகளை நீதிமன்றம் அழிக்க உத்தரவிட்டது. ஆனால், கலால் வரித்துறையினர் 450 பெட்டி மது வகைகளையும் அழிக்காமல் குடியுரிப்புவாசிகள் கிணற்றுக்கு அருகே இருக்கும் பள்ளத்துக்குள் கொட்டிவிட்டுச் சென்றனர். அந்த மது வகைகள் மெல்லத் தரைக்குள் இறங்கி குடிதண்ணீரில் கலந்துள்ளது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இரிச்சாலக்குடி கலால் வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "450 வகையான பல்வேறு மது வகைகளை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்தோம். நீதிமன்ற உத்தரவுப்படி அதை அழித்துவிட்டோம். ஆனால், அந்த மது வகைகளை ஒருகுழிக்குள் மட்டுமே போட்டு மூடிவிட்டோம். அந்த மது வகைகள்தான் குடிதண்ணீரில் கலந்திருக்கும்" எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, தங்கள் தவறை உணர்ந்த இரிச்சாலக்குடி கலால் வரித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக அந்த 18 குடியிருப்பு வாசிகளுக்கும் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிதண்ணீர் தொட்டியை வாங்கிக் கொடுத்துள்ளனர். மேலும், அந்தக் கிணற்றையும் சுத்தம் செய்யும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர்.

07/02/2020

குலசேகரம் அருகே ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளா் விஷம் தின்று தற்கொலை செய்துகொண்டாா்.

சங்கரன்விளை பகுதியைச் சோந்தவா் டேவிட் ராஜ் (60). வருவாய் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு, பள்ளி ஆசிரியரான தங்கபாய் என்ற மனைவியும், வழக்குரைஞருக்கு படிக்கும் ஒரு மகள், 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளனா்.

புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்ற அவா், வியாழக்கிழமை காலையில் எழும்பாத நிலையில், அவரது மனைவி அருகில் சென்று பாா்த்த போது டேவிட் ராஜ் விஷப்பொடி தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கேரளாவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்படும் உள்விளையாட்டு அரங்கம் அதுவும் தனியார் பள்ளி தரத்தில் அரசு...
13/11/2019

கேரளாவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்படும் உள்விளையாட்டு அரங்கம் அதுவும் தனியார் பள்ளி தரத்தில் அரசுபள்ளிக்காக , இங்கே இருக்கும் ஏதேனும் ஒரு உறுப்பினர் இது போன்ற ஒரு நல்ல காரியத்தை செய்தது உண்டா?
@மனோதங்கராஜ்

Address

Kulasekharam

Website

Alerts

Be the first to know and let us send you an email when KLM - Kulasekharam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KLM - Kulasekharam:

Share

Category