நம்ம ஊரு கும்பகோணம் / Our Kumbakonam

நம்ம ஊரு கும்பகோணம் / Our Kumbakonam காவேரி, அரசலாறு என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள அழகிய ஊர் எங்கள் குடந்தை மாநகர்.
(2)

குடந்தை, குடமூக்கு, திருக்குடந்தை, பாஸ்கரக்ஷேத்திரம் என்று பல்வேறு பெயர்களைக் கொண்ட ஆன்மீகத் தலம் இந்த கும்பகோணம். கோயில்களையும், குளங்களையும் அதிகம் கொண்ட ஊர் கும்பகோணம். காவேரி, அரசலாறு என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள அழகிய ஊர் கும்பகோணம். கும்பகோணத்தை சுற்றியும், ஊருக்குள்ளேயும் சுமார் 180 கோயில்களுக்கு மேல் உள்ளதாகச் சொல்கிறார்கள். கும்பகோணம் வெற்றிலை உலகமெங்கும் பிரசித்தி பெற்றது. கும

்பகோணத்திற்கு பக்கத்தில் உள்ள திருபுவனம் பட்டிற்கு பெயர் பெற்ற ஊராகத் திகழ்கிறது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள நாச்சியார்கோயில், தென்னிந்தியாவிலேயே பித்தளை குத்துவிளக்குகள், பூஜை சாமான்கள், தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. நவக்ரஹ ஸ்தலங்கள், பாடல் பெற்ற ஸ்தலங்கள், திவ்யதேசங்கள், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை என பல்வேறு முக்கியமான ஆன்மீகத் தலங்கள் கும்பகோணத்தை சுற்றியே அமைந்துள்ளன. இங்குள்ள அரசு கல்லூரி தென்னிந்தியாவின் காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் சிறப்புடையது. கணித மேதை ராமானுஜம் இந்தக் கல்லூரியில் பயின்றவர்தான்.

கும்பகோணம் என்றால் காட்டாயம் நம் நினைவில் வந்து நிற்பது மகாமகம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம், அந்த மகாமகக் குளத்தில் நீராடுவது, கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, மகாநதி, நர்மதா, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடிய புண்ணியம் கிட்டும். இந்த கும்பகோணம் நகரம் புராண காலத்தில் இருந்து, பல்வேறு காவியங்களில் இடம்பெற்றுள்ளது. இது போன்றதொரு அமைதியும், அதே நேரத்தில் சகல வசதிகளும், அதிக செலவும் இல்லாத, இயற்கை எழில் கொஞ்சும் கும்பகோணத்தில் வாழ்க்கையின் நிறைவுப் பகுதியையாவது வாழ மனம் ஏங்குகிறது.

If Kumbakonam has snow fall!
08/09/2025

If Kumbakonam has snow fall!

கும்பகோணத்தில் மழை!
07/09/2025

கும்பகோணத்தில் மழை!

கும்பகோணத்தில் பனி பொழிவு இருந்தால் இப்படி தான் இருக்கும்!
07/09/2025

கும்பகோணத்தில் பனி பொழிவு இருந்தால் இப்படி தான் இருக்கும்!

If it snows in Swamimalai!
07/09/2025

If it snows in Swamimalai!

இந்தப் பேருந்து நிலையத்தை புறநகருக்கு மாற்றாத வரையில் கும்பகோணத்தில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு இல்லை!
06/09/2025

இந்தப் பேருந்து நிலையத்தை புறநகருக்கு மாற்றாத வரையில் கும்பகோணத்தில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு இல்லை!

ஆலங்குடி குரு கோவில்!
06/09/2025

ஆலங்குடி குரு கோவில்!

கும்பகோணத்தின் எந்த பகுதியில் இருந்தும் 2 கிமீ தூரத்தில் காவிரி மற்றும் அரசலாறு, ஒவ்வொரு 200 மீட்டருக்குள் ஒரு குளம், ஒவ...
06/09/2025

கும்பகோணத்தின் எந்த பகுதியில் இருந்தும் 2 கிமீ தூரத்தில் காவிரி மற்றும் அரசலாறு, ஒவ்வொரு 200 மீட்டருக்குள் ஒரு குளம், ஒவ்வொரு 100 மீட்டருக்குள் ஒரு பாசன வாய்க்கால்!

இவ்வளவு சிறந்த சோழர் கால நீர் மேலாண்மை இருந்தும், வெறும் அரை மணி நேர மழைக்கே எப்படி மழைநீர் தேங்குகிறது?

05/09/2025

சென்னைக்கு எப்படி வேளச்சேரியோ, நம்ம கும்பகோணத்துக்கு இந்த மடத்து தெரு!

மாமழை போற்றுதும்!
05/09/2025

மாமழை போற்றுதும்!

Address

Kumbakonam

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஊரு கும்பகோணம் / Our Kumbakonam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நம்ம ஊரு கும்பகோணம் / Our Kumbakonam:

Share