15/06/2025
பேச்சு மட்டுமல்ல.. செயலிலும் அண்ணன் சீமான் அசலான சூப்பர் ஸ்டார் தான். பனைமரம் ஏறி கள் இறக்குவேன் என்று கூட்டங்களில் பேசினார். ஏதோ கூட்டத்திற்காக பேசினார் என்று நினைத்துக் கொண்டிருந்தால்.. உண்மையிலேயே பனை மரம் ஏறி கள் இறக்கி விட்டார்.
அதற்கான உடல் வலு கடுமையான உடற்பயிற்சி மூலம் அவரே ஏற்படுத்திக் கொண்டது. ஒவ்வொரு நொடியும் தன்னை தயார் செய்து கொண்டே இருக்கின்ற அண்ணன் சீமான் உண்மையிலேயே ஒரு அதிசயம் தான். வாசிப்பிலும், பேச்சிலும், செயலிலும், போராட்டக் களங்களிலும் .. என ஈடுபடும் எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கின்ற அண்ணன் சீமான் கடுமையான பயிற்சி- எளிதான வெற்றி என்பதை தன் தன் வெற்றிக்கான மந்திரமாக சுமக்கிறார்.
நேற்று இரவு கூட அலைபேசியில் பேசும்போது "அண்ணா.. மரம் எல்லாம் ஏற வேண்டுமா...? எனத் தயக்கத்தோடு கேட்டதற்கு..
"அதில் மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கு தம்பி.." என்றார். "நான் உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்லும்போது முதலில் வீடியோ பதிவுகளை நான் அனுமதிப்பதில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளிவந்த போது.. தம்பிகள் பலரும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். இது இப்போது இளம் தலைமுறையினருக்கு ஒரு பண்பாடாகவே மாறி இருக்கிறது. அப்படித்தான் மரம் ஏறுதலும்.. ஏறக்குறைய இளம் தலைமுறையினரால் கைவிடப்பட்ட இந்த மரம் ஏறும் பழக்கம் கடுமையான உடல் வலு கோருவது. எல்லோராலும் ஏறிவிட முடியாது. கடுமையான உடல் வலிமை தேவைப்படுகிற அந்தப் பழக்கம் பரவ வேண்டும். தமிழர்களின் மரபுப் பழக்கம் அது. அது அழிந்து விடக்கூடாது. அதற்காகவாவது உடல் வலிமையை கூட்ட உடற்பயிற்சி செய்வார்கள். " என்றெல்லாம் பேசிக் கொண்டே போனார்.
கனவுகளை நினைவாக்க தெரிந்த அசலான புரட்சியாளன் அவர்.
தன்னம்பிக்கையும், கனவுகளும் கொண்ட அந்த மனிதன் உறுதியாக ஒரு நாள் வெல்வார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த 20 வருடங்களாக அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் தன்னை செதுக்கிக் கொண்டு முன்னேறிக்கொண்டே போகும் அவருக்கு பின்னடைவு என்ற ஒன்றே கிடையாது. அந்த வகையில் மனச்சோர்வு வரும்போதெல்லாம் அண்ணன் சீமானை நினைத்தால் போதும். மனச்சோர்வும் மண்டியிட்டு ஓடிவிடும்.
மீண்டும் மீண்டும் அவர் மரம் ஏறுகிற காட்சியை பார்த்து புன்னகையோடு கைதட்டிக் கொண்டே இருக்கிறேன். அதிலும் அந்தப் பனை ஏறுதல் என்பது ஒரு சாதிக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை குறியீடாக காட்டுகின்ற " சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாரதி வரிகள் கொண்ட டீசர்ட் . அபாரம்.
செஞ்சிட்டான்யா நம்ம அண்ணன்.
❤️
மணி செந்தில்.