
25/07/2025
ஆளும் திமுக அரசுக்கு எதிராக, புதிய பாணியில் பிரசார திட்டங்களை அதிமுக கையிலெடுத்துள்ள நிலையில், புதுக்கோட்டையில் அதனை தொடங்கி வைத்தார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியன, பிரசாரங்களை முன்கூட்டியே தொடங்கி விட்டன. இந்நிலையில், தனது பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கிவிட்ட அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் புதிய பிரசார திட்டங்களை, புதுக்கோட்டையில் இன்று தொடங்கி வைத்தார். அந்த புதிய பிரசார திட்ட்ங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“ நேற்று முதல் புதுக்கோட்டையில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில், “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“ என்ற அதிமுகவின் புதிய பிரசார திட்டத்தை தொடங்கி வைத்தார்....
ஆளும் திமுக அரசுக்கு எத…