Pixel Tamil

Pixel Tamil Pixeltamil.com சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! மக்களுக்காக மக்களுடன்...!

10/09/2026

TVK: “சிறை சென்ற தியாகி” பிம்பம் உடையும் பதற்றம் ஸ்டாலினை தொற்றிக்கொண்டதா? – தவெக அட்டாக்

TVK On MK Stalin: பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது. TVK On MK Stalin: மிசா கைது தொடர்பான ஸ்டாலினின் விளக்க வீடியோவை குறிப்பிட்டு, தவெக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. ”சிறை சென்ற தியாகி” - தவெக அட்டாக் மிசா கைது குறித்த முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு தவெக அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள கணக்கில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது....

திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்சபாநாயகர் ஜேசிடி பி...
09/09/2026

திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நடுநிலையாகத்தான் செயல்படுகிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது ஜேசிடி பிரபாகரின் செயல்பாடுகள் ஆகும். சபாநாயகரின் செயல்பாடு: முதன்முறை சபாநாயகராக பொறுப்பேற்ற ஜேசிடி பிரபாகர் இந்த அவையை எப்படி நடத்தப்போகிறார்? என்று பலரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அவரது செயல்பாட்டிற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்த நிலையில், நேற்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதிலுரை குறித்து திமுக-வினர் பேசுவதற்கு அனுமதி அளிக்காததற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். நடுநிலையான செயல்பாடு: இந்த சூழலில், திமுக கூட்டணி கட்சித் தலைவரும், விருத்தாச்சலம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ-வுமான பிரேமலதா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, என்னைப் பொறுத்தவரை பேரவைத் தலைவர் நடுநிலையாகத்தான் செயல்படுகிறார். நாம் அப்படி இல்லை என்று சொல்லிவிட முடியாது....

TVK vs DMK: “பதறல் நிதி.. கதறல் நிதி.. ஆபாசநிதி..” உதயநிதியை தாறுமாறாக விமர்சித்த தவெக!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை ஆ...
08/09/2026

TVK vs DMK: “பதறல் நிதி.. கதறல் நிதி.. ஆபாசநிதி..” உதயநிதியை தாறுமாறாக விமர்சித்த தவெக!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் நேற்று பதிலளித்தார். அப்போது, கடந்த கால திமுக அரசு மீதும், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது கடந்த காலங்களில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் சட்டசபையில் அவர் அடுக்கினார். பின்னர், தங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி திமுக வெளிநடப்பு செய்தது. இந்த சூழலில், தவெக ஐடி விங் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பதறல் நிதி: Rowdytime Runner! “மூன்று நாட்கள் நேரமிருக்கிறது… நன்றாகத் தயார் செய்து வாருங்கள்!” என்று வசனம் பேசிய பால்வாடி பாப்பாவே! முதலமைச்சர் பேச ஆரம்பித்ததும் மூன்று நொடிகள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் பதறிய பதறல்நிதியே! தாத்தா காலம் முதல் செய்த விஞ்ஞான ஊழல்களைப் பற்றி வெற்றித் தலைவர் விவரிக்கக் கேட்டதும், “வெளியே ஓடவும் முடியாமல்… உள்ளே ஒளியவும் முடியாமல்…” திரிசங்கு நிலையில் நின்று கதறிய கதறல்நிதியே!...

CM Vijay Speech: “ஃப்ராடு, கரூர் கேங், ABUSE” திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் – வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்CM Vijay...
07/09/2026

CM Vijay Speech: “ஃப்ராடு, கரூர் கேங், ABUSE” திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் – வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்

CM Vijay Speech: திமுகவை கரூர் கேங், ஃப்ராட், ஊழல்வாதிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகர்கள் என, அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடுமையாக சாடியுள்ளார். CM Vijay Speech: திமுக இருக்கும் இடத்தில் தான் தவறே நடக்கும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். திமுகவை கடுமையாக சாடிய முதலமைச்சர் விஜய்: காவல், தீயணைப்புஉள்ளிட்ட துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது திமுக ஆட்சியில் வழக்குகள் பதிவு செய்யாமல் தாமதப்படுத்தியதோடு, பல்வேறு துறைகளில் ஊழல் கரைபுரண்டு ஓடியதாகவும் குற்றம்சாட்டினார். அதுகுறித்து பேசுகையில், டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு பேசினார். அப்போது, “செய்யும் தவறையே, சட்டவிரோதமான செயல்களையே ஒழுங்காக, முறைப்படுத்தி திமுக செய்துள்ளது. விஞ்ஞான ஊழல் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?...

KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை – தீவிர சோதனைKN Nehru DVAC Rai...
05/09/2026

KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை – தீவிர சோதனை

KN Nehru DVAC Raid: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். KN Nehru DVAC Raid: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின், திருச்சி தில்லை நகர் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..! தமிழக முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் தில்லைநகர் 5வது குறுக்குத் தெருவில் இருக்கும் அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகத் துறையில் அவர் அமைச்சராக இருந்த பொழுது வேலை வாங்கி தருவதாக கூறி ஆயிரம் கோடி ரூபாய் பணம் பெற்றதாக கூறிய புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது....

Pixel Media® | KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை

05/09/2026

#வஉசிதம்பரம்பிள்ளை #வஉசி #சுதேசி #சுதேசிஇயக்கம் #இந்தியசுதந்திரபோராட்டம் #சுதந்திரபோராட்டவீரர் #தமிழர்வரலாறு #தமிழர்கள்வரலாறு #தமிழ்நாடுவரலாறு #தேசபக்தி #தமிழ்தேசியம் #சுதந்திரதினம்

04/09/2026

சட்டம் – ஒழுங்கு நிலவரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: பேரவையில் உதயநிதி – அமைச்சர்கள் காரசார விவாதம்சென்னை:...
04/09/2026

சட்டம் – ஒழுங்கு நிலவரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: பேரவையில் உதயநிதி – அமைச்சர்கள் காரசார விவாதம்

சென்னை: சட்​டம் - ஒழுங்​கு, தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு உள்​ளிட்ட விவ​காரங்​கள் தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி மற்​றும் அமைச்​சர்​கள் இடையே கார​சார விவாதம் நடை​பெற்​றது. சட்​டப்​பேர​வை​யில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்​தின்​போது எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசினார். அதன் பிறகு நடந்த விவாதம்: அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா: திமுக ஆட்​சி​யில் கொலைகள் எண்​ணிக்கை கொள்கை விளக்​கக் குறிப்​பில் குறைத்து பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. 2020-ல் 1,597 கொலைகள் நடந்த நிலை​யில், 2021, 2022-ம் ஆண்​டு​களில் 1,597 கொலைகள்​தான் பதி​வாகி​யுள்​ளன. திமுக கொறடா எ.வ.வேலு: தவெக ஆட்​சி​யில் 116 நாட்​களில் அதிக அளவில் குற்​றங்​கள் நடந்​துள்​ளதே என்​பது​தான் கேள்​வி. குற்​றங்​களை குறைக்க என்ன செய்​தீர்​கள் என்று கூறு​வதை விடுத்து 2021-ல் அப்​படி நடந்​தது என எதற்கு ஏலம் விடு​கிறீர்​கள்? ஆதவ் அர்​ஜு​னா:...

Toxic:பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் .. 8 நாட்கள் வசூல் விவரம்டாக்சிக் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்துள்ள ந...
03/09/2026

Toxic:பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் .. 8 நாட்கள் வசூல் விவரம்

டாக்சிக் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்துள்ள நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டாக்சிக் 2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பான்-இந்தியா திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் இப்படம் உருவானது. நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி என முன்னணி நடிகைகள் பலரும் நடித்துள்ளனர். பல சர்ச்சைகள் இப்படத்தை சுற்றி இருந்தாலும், படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது குறையவே இல்லை. அப்படி, எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு வந்த ரசிகர்களை டாக்சிக் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் கடந்த வாரம் வெளியான டாக்சிக் திரைப்படம் 8 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. முதல் நாளிலிருந்தே இப்படத்தின் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, யஷின் டாக்சிக் திரைப்படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 325 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகமிக குறைவான வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Address

Tamilnadu
Kumbakonam
612602

Alerts

Be the first to know and let us send you an email when Pixel Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pixel Tamil:

Shortcuts

Share