01/02/2025
நமது பாரதப்பிரதமர் திரு. அவர்களின் வழிகாட்டுதலின்படி, மத்திய நிதியமைச்சர் திருமதி. அவர்கள் இன்று தாக்கல் செய்த மக்களின் கனவு பட்ஜெட் 2025-இன் சில சிறப்பம்சங்கள் !
💵ஆண்டுக்கு ரூ.12 லட்சம் அதாவது மாதந்தோறும் ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு
💊36 உயிர்காக்கும் மருந்துப் பொருட்களுக்கு வரிவிலக்கு
🩺ஒரு ஆண்டில் 10,000 கூடுதல் மருத்துவ இடங்கள்
🩻3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்
💳விவசாயிகளுக்கு கிஷான் கிரடிட் கார்டுகள் மூலம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை கடன் உயர்வு
👨🏻🌾100 மாநிலங்களில் 1.7 கோடி விவசாயிகளுக்கு உதவும் தனம், தானிய கிரிஷி யோஜனா
🌾துவரை, உளுந்து, மைசூர் பருப்புகளின் உற்பத்திகளை அதிகரிக்கும் 6 ஆண்டுகால திட்டம்
🧑🏻🏫அரசுப் பள்ளிகளிலும் 5 ஆண்டுகளில் 50,000 ஆய்வகங்கள்(ATL), பிராட்பேண்ட் இணைய வசதி, டிஜிட்டல் வடிவிலான இந்திய மொழிப் புத்தகங்கள் வழங்குதல்
🥗கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்துகளை உறுதிசெய்யும் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0
🏫நாடு முழுவதும் சுமார் 6500 மாணவர்கள் பயன்பெறும் 23 IIT நிறுவனங்கள் விரிவாக்கம்
👭5 லட்சம் பழங்குடியின பெண்களுக்கு 2 கோடி ரூபாய் கடனுதவி
📈சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்வு
💰மாநிலங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1.50 லட்சம் கோடி வட்டியில்லா கடன்
🔮3 AI தொழில்நுட்ப ஆய்வு மையங்கள் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு
என நமது நாட்டை தன்னிறைவு அடையச் செய்து நமது நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கிலும், ஏழை, எளிய மக்களின் சேமிப்புகளை அதிகரித்து அவர்களது கனவுகளை நனவாக்கும் வகையிலும் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை வடிவமைத்த நமது பாரதப் பிரதமருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் !