11/05/2022
*இராஜ கம்பள - தொட்டிய நாயக்கர் சமூக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக போடப்பட்டிருக்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவிற்கான 144-ன் கீழ் தடை உத்தரவை தமிழக அரசு நீக்க வேண்டும் - விடுதலைக்களம் கட்சி நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் கோரிக்கை*
*_விடுதலைக்களம் கட்சி நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :_*
பாஞ்சாலங்குறிச்சியில் 13.05.2022 மற்றும் 14.05.2022 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா வினை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும் 12.05.2022 மாலை 6.00 மணி முதல் 15.05.2022 காலை 6.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவானது ஒட்டுமொத்த இராஜ கம்பள - தொட்டிய நாயக்கர் சமூக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான தமிழக அரசின் விரும்ப தகாத நடவடிக்கையாக அம்மக்களால் பார்க்கப்படுகிறது.
இந்திய விடுதலைப் போருக்கு முதல் முழக்கமிட்ட ஓர் சுதந்திர போராட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம், வெள்ளையர்களுக்கு எதிரான போரில் பல ஆயிரக் கணக்கான தமிழ் வீரக்குடி மக்களை பழிகொடுத்த பாஞ்சாலங்குறிச்சி வரலாற்று சிறப்பு மிக்க பூமியில், சுதந்திர வேட்கையில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தி கொண்ட இராஜ கம்பள - தொட்டிய நாயக்கர் சமூக மக்கள் வணங்கி கொண்டாடக்கூடிய வீரசக்கதேவி ஆலய திருவிழாவிற்கு, கடந்த கால ஆட்சியில் செய்த தடை உத்தரவு எனும் மாபெரும் தவறை,
புதிய கோட்டை எழுப்பு பாஞ்சை மண்ணிற்கு புதிய முகவரி தந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியிலும், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்கிற இந்த சம்பவம், இராஜ கம்பள - தொட்டிய நாயக்கர் சமூக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது.
அனைத்து சமூக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக்கூடிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான இந்த திராவிட மாடல் திமுக அரசானது, லட்ச கணக்கான இராஜ கம்பள - தொட்டிய நாயக்கர் சமூக மக்கள் வழிப்படக்கூடிய பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவிற்கு, 144 தடை உத்தரவு போட்டு அவர்களின் உணர்வுகளில் வேல் ஈட்டி கொண்டு பாய்ச்சிடும் வலிபோல் ஆன இத்தகைய ஏற்கமுடியாத தடைஉத்தரவை தமிழக அரசு நீக்கி, இராஜ கம்பள - தொட்டிய நாயக்கர் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள, ஓட்டுமொத்த இராஜ கம்பள - தொட்டிய நாயக்கர் சமூக மக்கள் சார்பாக விடுதலைக்களம் கட்சி தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறது.
இவன் :
*விடுதலைக்களம் கட்சி*
*தலைமையகம், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்*
11.05.2022