17/03/2026
தேமுதிக vs கம்யூனிஸ்ட்: தேர்தல்
கணக்குகள் என்ன சொல்கின்றன?
****************************************
2006 சட்டமன்றத் தேர்தல்
கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளில் மொத்த வாக்கு சதவீதம் சிபிஐ- 40.35%, சிபிஎம்- 42.65%, அதேபோல் தேமுதிக பெற்ற வாக்கு சதவீதம் - 8.45% ஆகும். 232 தொகுதிகளில் போட்டியிட்டு 1 தொகுதியில் தேமுதிக வெற்றிபெற்றது. சுமார் 223 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே எந்த தொகுதியிலும் டெபாசிட் இழக்கவில்லை.
2011 சட்டமன்றத் தேர்தல்
2011 தேர்ததலில் அதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மதிமுக ஆகியவை இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளின் மொத்த வாக்கு சதவீதம் சிபிஐ- 48.95%, சிபிஎம்-50.46%, அதே போல் தேமுதிக நட்சத்திர முகமாக விஜயகாந்த் காட்டப்பட்டு தேமுதிக பெற்ற வாக்குசதவீதம் -44.95% அந்த தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதியில் தேமுதிக வெற்றிபெற்றது. சிபிஐ 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதியிலும், சிபிஎம் 12 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
2016 சட்டமன்றத் தேர்தல்
2016 தேர்ததலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுமென கட்சித் தலைவர் விஜயகாந்த் முன்பு அறிவித்தார். எனினும் தேமுதிக சிறிது நாட்களில் மக்கள் நலக் கூட்டணியின் சிறப்பம்சமான கொள்கைகளை ஏற்றுக் கொண்டு மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சேர்ந்து தேர்தல் உடன்படிக்கை கொண்டு அக்கூட்டணி கட்சி தலைவர்களின் ஏகோபித்த ஆதரவால் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக நின்றார். இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி பூஜ்ஜிய இடங்களை பெற்றது. தேமுதிக - 10,34,384 வாக்குகள் 2.41%(104 தொகுதிகள் போட்டியிட்டது), சிபிஐ-3,40,290 வாக்குகள் 0.79%(50 தொகுதிகள் போட்டியிட்டது), சிபிஎம்-3,07,303 வாக்குகள் 0.72%(50 தொகுதிகள் போட்டியிட்டது),
2021 சட்டமன்றத் தேர்தல்
2021 தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தது. அமமுக-161 இடங்களில் போட்டியிட, தேமுதிக-60 இடங்களில் போட்டியிட்டது. திமுக கூட்டணியில் சிபிஐ, சிபிஎம் தலா 6 இடங்களில் போட்டியிட்டது. இதில் அமமுக கூட்டணி பெற்ற வாக்குகள் -12,89,276 வாக்குகள்(2.79%), அதில் தேமுதிக-2,00,157 வாக்குகள்(0.48%) பெற்றது. திமுக கூட்டணியில் சிபிஐ-5,04,537 வாக்குகள்(1.09%) 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றிபெற்றது. சிபிஎம்-3,90,819 வாக்குகள்(0.85%) 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றிபெற்றது.