27/10/2025
விஜய்யின் இமேஜை காப்பாற்றுவதில் பலருக்கும் அக்கறை இருக்கின்றது. அதில் முக்கியமான பங்கை வகிப்பது அதிமுகவாக இருக்கும். விஜய் எப்படி அதிமுக மீது ஒரு மென்போக்கை ஆரம்பத்தில் இருந்தே கொண்டிருந்தாரோ - அதைவிட மென்போக்கை அதிமுக இந்த கரூர் சம்பவத்திற்கு பின்னால் கொண்டிருக்கிறது. இது நேரடியாக நமக்கு தெரிந்த உண்மை.
மறைமுகமாக அதிமுக செய்த வேலை தான், கரூரில் இருக்கும் மனைவியை இழந்த அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவரின் கையெழுத்தை வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி அவர் பெயரில் அவருக்கே தெரியாமல் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரனை வேண்டி வழக்கு போட்டது.
இன்று விஜய் நடத்த இருக்கும் ஆறுதல் டிராமாவிற்கும் பின்னால் அதிமுகவே இருக்கும். மக்கள் மிரட்டப்பட்டும், ஏமாற்றப்பட்டும் வருகிறார்கள். பணமும் அதிகாரமும் எத்தனை நாள் காரியம் சாதிக்கும் என்பதை பார்ப்போம்!