Tamilcheck

Tamilcheck daily new entertainment video

03/07/2025
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முதன்முதலாக பயன்படுத்திய மொபைல் கம்பெனி என்னது சொல்லிட்டு போங்க
01/07/2025

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முதன்முதலாக பயன்படுத்திய மொபைல் கம்பெனி என்னது சொல்லிட்டு போங்க

🎉 Facebook recognised me as a top rising creator this week!
23/06/2025

🎉 Facebook recognised me as a top rising creator this week!

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!
17/06/2025

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!

உங்கள் ஊரில் டீ என்ன விலை
16/06/2025

உங்கள் ஊரில் டீ என்ன விலை

ஒரு அருமையான சிந்திக்க வைக்கும் கதை…டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிர...
01/06/2025

ஒரு அருமையான சிந்திக்க வைக்கும் கதை…

டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்…

அந்த வட்டாரத்தில் இவர் கடை மிகவும் பிரபலம்...

ஒரு நாள் அந்தக் கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே

"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க

தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...

இதுவே என்னைப் போல பெரிய கம்பெனியில் வேலையில் இருந்திருந்தால் நீங்களும் என்னைப் போல பெரிய அளவு முன்னேறி இருக்கலாம் இல்ல" என்றார்....

அதைக் கேட்ட அந்த சமோசா கடைப் பெரியவர் புன்னகைத்து விட்டுச் சொன்னார்...

"இல்லை, நான் இப்போது உங்களை விட நன்றாகவே முன்னேறி இருக்கேன்"

"எப்படி?"

"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்தத் தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்றப் போது நீங்கள் இந்தக் கம்பெனியில் அப்போ தான் வேலைக்குச் சேர்ந்திருந்தீங்க...

அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபாய்...

அப்போது உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...

நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...

மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....

இப்போ எனக்கு சொந்தமாக இந்தக் கடை இருக்கு...

இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...

நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதை விட அதிகமாகவே சில சமயம் சம்பாதிக்கிறேன்....

நாளை என் வாரிசுகளுக்கு இந்தத் தொழிலை நான் தர முடியும்...

அவர்கள் என்னைப் போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...

நேரடியாக முதலாளியாக வந்துக் கடையை வளர்த்தால் போதும்...

ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...

உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...

உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்கு மட்டும் தான் போகும்....

உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து தான் துவங்க வேண்டும்...

நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்...

உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும் போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க...

ஒருவேளை உங்க மகன் என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்...

அதைக் கேட்டு திடுக்கிட்ட அந்த மேனேஜர் சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு ஓடியே விட்டார்...

கதையின் நீதி:-

சொந்தத் தொழிலும், விவசாயமும் கைக்கொடுப்பது போல வேறு எதுவுமே நிச்சயமாக கைக்கொடுக்காது…

அடுத்தவர்களுக்கு உழைத்து உழைத்து ஓடாய் போவதை விட நம்முடைய மூளையை நமக்கு ஏற்றத் தொழிலில் இறக்குவது மட்டும் தான் நமக்கு நல்லது .

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilcheck posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category