Cine Maanga

Cine Maanga Tamil Cinema...

Periods ( மாதவிடாய் ) அப்ப கூட என்ன விடல எனக்கு பேண்டஸியா பண்ணனும்னு சொல்லி என்னை வற்புறுத்தினார்  என் வீட்டின் முன்னே வ...
09/10/2026

Periods ( மாதவிடாய் ) அப்ப கூட என்ன விடல எனக்கு பேண்டஸியா பண்ணனும்னு சொல்லி என்னை வற்புறுத்தினார்

என் வீட்டின் முன்னே வந்து ஒரு நாள் நின்று என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நானும் அவர் வீட்டில் கேம் விளையாடிவிட்டு சென்று விட்டேன் அப்பொழுது எனக்கு தோன்றியது இவர் பாதுகாப்பானவர் என்று.

ஆனால் அடுத்த முறை வீட்டுக்கு செல்லும் பொழுது அந்த மாதிரி என்று எனக்கு பீரியட்ஸ் என சொல்லியும் அவர் என்னை கட்டாயப்படுத்தினார் நான் அப்பொழுதே யோசித்துப் பார்த்திருக்க வேண்டும் ஆனால் தவறு செய்து விட்டேன்

---- Wahidha ( பாதிக்கப்பட்ட பெண்)

கோவை சரளா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை தெரியுமா...?58 வயதாகியும் நடிகை கோவை சரளா ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில...
08/10/2026

கோவை சரளா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை தெரியுமா...?

58 வயதாகியும் நடிகை கோவை சரளா ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்ற கேள்வி பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதற்கான காரணத்தை அவரைப் பற்றிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

கோவை சரளாதான் அவரது குடும்பத்தில் மூத்த மகள். அவருக்கு கீழ் நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். சிறு வயது முதலே குடும்பத்தின் மீது அதிக பொறுப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது.

தன்னைவிட இளைய சகோதரர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து, அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொடுத்ததும் கோவை சரளாதான் என கூறப்படுகிறது. குடும்பத்தில் அவருடைய பங்கு ஒரு மூத்த சகோதரியைத் தாண்டி இருந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், சகோதரர்களின் குழந்தைகளின் படிப்பு முதல் அவர்களின் தேவைகள் வரை தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்ததாகவும், அந்தக் குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளைப் போலவே பாசத்துடன் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தனது குடும்பத்தினருக்கு உதவுவதோடு நிற்காமல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் உதவி தேவைப்படும் மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறருக்கு உதவுவதையே தனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற வருத்தம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று ஒரு பேட்டியில் கோவை சரளா கூறியதாக சொல்லப்படுகிறது.

தன் உடன்பிறந்தவர்களின் எதிர்காலத்தை உருவாக்கி, அவர்களது குழந்தைகளையும் தன் குழந்தைகளைப் போல வளர்த்து வரும் கோவை சரளாவை, ரசிகர்கள் அவரது நடிப்பைத் தாண்டி ஒரு நல்ல மனிதராகவும் கொண்டாடி வருகின்றனர்.

3 பெண்கள்... ஒரே ஆணை திருமணம்! ‘திருமணத்துக்குப் பிறகும் நாங்கள் பிரியக்கூடாது’ என எடுத்த அதிரடி முடிவு!3 பெண்கள்... ஒரே...
16/09/2026

3 பெண்கள்... ஒரே ஆணை திருமணம்!

‘திருமணத்துக்குப் பிறகும் நாங்கள் பிரியக்கூடாது’ என எடுத்த அதிரடி முடிவு!

3 பெண்கள்... ஒரே ஆணை திருமணம்!
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் 3 பெண்கள் ஒரே ஆணை திருமணம் செய்ததாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பெண்கள் மூவரும் ஒன்றாக வளர்ந்ததாகவும், திருமணத்துக்குப் பிறகு மூவரும் தனித்தனியாக பிரிந்து செல்ல விரும்பவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினர் மூவருக்கும் தனித்தனியாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்தபோது, அதை விரும்பாத அவர்கள், தொடர்ந்து ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளனர்.

சமூக வலைதளங்களுக்காக விகாஸ் ஏற்கனவே அவர்களுடன் வீடியோக்களில் கணவர் கதாபாத்திரத்தில் நடித்ததாகவும், பின்னர் இந்த திருமணம் உண்மையானது என அவர்கள் தெரிவித்ததாகவும் செய்தி கூறுகிறது.

இந்த வீடியோ வைரலான பிறகு, திருமணத்தின் சட்டபூர்வ தன்மை மற்றும் கோயிலில் நடைபெற்றதாக கூறப்படும் சடங்குகள் குறித்து விவாதம் எழுந்துள்ளது. கோயில் நிர்வாகமும் தங்களுக்கு இந்த திருமணம் குறித்து தெரியாது என தெரிவித்துள்ளது.

“Instagram மூலம் ஏற்பட்ட பதிய காதலுக்காக 8 வருட திருமண வாழ்க்கையை விட்ட மனைவி!”கணவரே மனைவிக்கு அவரது காதலனுடன் 2வது திரு...
16/09/2026

“Instagram மூலம் ஏற்பட்ட பதிய காதலுக்காக 8 வருட திருமண வாழ்க்கையை விட்ட மனைவி!”

கணவரே மனைவிக்கு அவரது காதலனுடன் 2வது திருமணம் செய்து வைத்த சம்பவம்!
ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் பகுதியில், சுமார் 8 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த பெண், Instagram மூலம் வேறொருவருடன் காதலில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த உறவு வெளிச்சத்துக்கு வந்த பிறகு, கணவரே தனது மனைவியை அவரது காதலனுடன் திருமணம் செய்து வைத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

8 வருட திருமணம்... Instagram காதலுக்காக முடிவுக்கு வந்தது!
மனைவியின் காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவர்!

72 வயதில் இளம்பெண்ணுடன் திருமணம்..!முன்னாள் கால்பந்தாட்ட வீரரின் திருமணம் இணையத்தில் வைரல்..!மலேசியாவின் முன்னாள் தேசிய ...
13/09/2026

72 வயதில் இளம்பெண்ணுடன் திருமணம்..!
முன்னாள் கால்பந்தாட்ட வீரரின் திருமணம் இணையத்தில் வைரல்..!

மலேசியாவின் முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரரான 72 வயது டத்தோக் அப்தா அலிப்,
தனது திருமணத்தால் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளார்.

1970 மற்றும் 1980-களில் மலேசிய கால்பந்தாட்ட உலகில் முன்னணி வீரராகத் திகழ்ந்த இவர்,
தேசிய அணிக்காகவும் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

72 வயதான நிலையில், 20 வயதுடைய இளம்பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திருமணம் இருவரின் குடும்பத்தினர் மற்றும் பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இந்த ஜோடியைப் பற்றி இணையத்தில் பலரும் விவாதித்து வருகின்றனர்.

கால்பந்தாட்ட மைதானத்தில் நட்சத்திரமாக ஜொலித்த டத்தோக் அப்தா அலிப்,
72 வயதில் தனது வாழ்க்கையின் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்!

நண்பரின் கல்யாணத்துக்கு வந்தவர்... திடீரென மாப்பிள்ளையானார்!மணமகன் ஓடியதால் அதிர்ச்சி..!திருமணத்திற்கு வந்த விருந்தினரைய...
13/09/2026

நண்பரின் கல்யாணத்துக்கு வந்தவர்... திடீரென மாப்பிள்ளையானார்!

மணமகன் ஓடியதால் அதிர்ச்சி..!
திருமணத்திற்கு வந்த விருந்தினரையே திருமணம் செய்த பெண்..!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில், ஒரே திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்று வந்தன.

திருமணத்திற்கு முந்தைய நாள் வரை அனைத்து சடங்குகளிலும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்த மணமகன், திருமண நாளில் திடீரென காணாமல் போனார்!

மணமகன் வராமல் போனதால்,
மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்ந்தனர்.

அப்போது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த சந்திரப்பா என்ற விருந்தினரைப் பற்றி
மணமகளின் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர்.

இரு குடும்பத்தினரும் பேசி சம்மதித்த பிறகு, எதிர்பாராத விதமாக அந்த விருந்தினர் மணமகளை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்!

திருமணத்தை பார்க்க வந்த விருந்தினர், அதே திருமண மண்டபத்தில் மாப்பிள்ளையாக மாறினார்!

“கல்யாணத்துக்கு வந்தவர்... திடீரென மாப்பிள்ளையானார்!” 😍

3 மணி நேர Taxi பயணம்... காதலாக மாறிய உண்மை கதை!வெளிநாட்டைச் சேர்ந்த லோரேனா ஸ்டெபானி என்ற பெண்,சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு...
12/09/2026

3 மணி நேர Taxi பயணம்... காதலாக மாறிய உண்மை கதை!

வெளிநாட்டைச் சேர்ந்த லோரேனா ஸ்டெபானி என்ற பெண்,
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க
மதுரைக்கு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார்.

மதுரைக்கு வந்த அவர் ஒரு இடத்திற்கு செல்ல Taxi எடுத்துள்ளார்.
அந்த Taxi-யை ரபீக் என்ற இளைஞர் ஓட்டியுள்ளார்.
சுமார் 3 மணி நேர பயணத்தில் இருவரும் பேசத் தொடங்கியுள்ளனர்.

முதலில் சாதாரண பயணியாகவும் டிரைவராகவும்
தொடங்கிய இவர்களின் அறிமுகம்,
பயணத்தின் போது நடந்த நீண்ட உரையாடலால் நெருக்கமாக மாறியுள்ளது.

பயணம் முடிந்த பிறகும் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர்.
வெவ்வேறு நாடுகள், மொழி மற்றும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்,
இருவருக்கும் இடையேயான நட்பு மெதுவாக காதலாக மாறியுள்ளது.

தூரமும் பல சவால்களும் இருந்தபோதிலும்,
தங்களது காதலை கைவிடாத இருவரும்
இறுதியில் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

ஒரு சுற்றுலாப் பயணியாக மதுரைக்கு வந்த பெண், ஒரு Taxi பயணத்தில் தனது வாழ்க்கைத் துணையை சந்தித்துள்ளார்!
இன்று திருமணமாகி குழந்தையுடன் குடும்பமாக வாழும் இவர்களின் கதை
“3 மணி நேர பயணம்... வாழ்நாள் காதல்!” என வைரலாகியுள்ளது.

🔥 ‘வாடகைக்கு கணவன்’ சேவை... இது வேற லெவல் பிசினஸ்!வீட்டில் குழாய் உடைந்துவிட்டதா?டிவியை சுவரில் மாட்ட வேண்டுமா?அல்லது தச...
11/09/2026

🔥 ‘வாடகைக்கு கணவன்’ சேவை... இது வேற லெவல் பிசினஸ்!

வீட்டில் குழாய் உடைந்துவிட்டதா?
டிவியை சுவரில் மாட்ட வேண்டுமா?
அல்லது தச்சு வேலை, பெயிண்டிங் செய்ய வேண்டுமா?

இப்படிப்பட்ட வீட்டுப் பராமரிப்பு வேலைகளுக்காக
லாத்வியா நாட்டில் பிரபலமாகி வருகிறது
‘Rent-a-Husband’ என்ற வித்தியாசமான சேவை!

பெயரைக் கேட்டவுடன் காதல் அல்லது திருமணம் தொடர்பான சேவை என்று நினைத்துவிடாதீர்கள்!
இது முற்றிலும் ஒரு Professional Handyman Service ஆகும்.

பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலை, தச்சு வேலை,
பெயிண்டிங், வீட்டுப் பொருட்களை சரிசெய்தல் போன்ற பல வேலைகளுக்கு திறமையான நபர்களை மணிநேர அடிப்படையில் அமர்த்தலாம்.

குறிப்பாக தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு, சிறிய வீட்டுப் பழுதுகளை சரிசெய்ய இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது.

லாத்வியாவில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில்,
ஒரு வித்தியாசமான பெயருடன் தொடங்கப்பட்ட இந்த சேவை தற்போது கவனம் பெற்று வருகிறது.

“கணவனை வாடகைக்கு எடுக்கலாம்... ஆனால் வீட்டுப் பழுது பார்க்க மட்டுமே!”

பட்டிமன்ற மேடையை ஆட்சி செய்த கம்பீர குரல் மௌனமானது...தமிழ் உலகம் இழந்த சாலமன் பாப்பையா!” 🕊️மதுரை மண்ணில் பிறந்து, தனது எ...
11/09/2026

பட்டிமன்ற மேடையை ஆட்சி செய்த கம்பீர குரல் மௌனமானது...

தமிழ் உலகம் இழந்த சாலமன் பாப்பையா!” 🕊️

மதுரை மண்ணில் பிறந்து, தனது எளிய பேச்சாலும் ஆழமான தமிழ் அறிவாலும் உலகத் தமிழர்களின் மனதில் இடம்பிடித்தவர் சாலமன் பாப்பையா.

தமிழ்ப் பேராசிரியராக தனது பயணத்தை தொடங்கிய அவர்,
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றி,
பல தலைமுறை மாணவர்களுக்கு தமிழ் அறிவை வழங்கினார்.

பட்டிமன்றம் என்ற கலையை
பாமர மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து,
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பெரும் ஆளுமை அவர்.

அவரது கம்பீரமான குரல், நகைச்சுவை உணர்வு மற்றும் இறுதியில் வழங்கும் நயமான தீர்ப்புகள்,
பட்டிமன்றங்களுக்கு தனி அடையாளமாக மாறின.

தமிழுக்காக அவர் ஆற்றிய சேவையை பாராட்டி,
தமிழக அரசு கலைமாமணி விருதையும்,
இந்திய அரசு 2021-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்தது.

90 வயதில் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்தாலும், அவரது பட்டிமன்ற பேச்சும், தமிழ் மீதான காதலும், கோடிக்கணக்கான தமிழர்களின் மனதில் என்றும் வாழும்! 🕊️

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cine Maanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share