
02/03/2025
*CUET-UG 2025*
இந்தியா முழுவதற்குமான மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கியூட் தேர்வை (*CUET-UG*) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் (CUET-UG 2025) கான பொது நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2025 - 2026 ஆம் ஆண்டுக்கான க்யூட் (*CUET-UG 2025*) தேர்வு வருகின்ற *08 மே 2025 முதல் 01 ஜூன் 2025* வரை நடைபெறும் என தற்காலிகமாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
*தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை 01 மார்ச் முதல் 22 மார்ச் 2025 வரை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்*.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.
கணினி அடிப்படையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது.
*ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை விண்ணப்பிக்கலாம்.*
*3 பாடங்கள் வரை விண்ணப்பிக்க கட்டணம்*: பொது (General -UR)- ₹1000, ஓபிசி-என்சிஎல் (OBC-NCL)/இடபிள்யூஎஸ் (EWS) - ₹900, எஸ்சி (SC) /எஸ்டி (ST) / மூன்றாம் பாலினம் (Third gender) - ₹800
*3 பாடங்களுக்கு மேல் கூடுதலாக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பாடங்களுக்கும் கூடுதல் கட்டணம்* : பொது (General -UR)- ₹400, ஓபிசி-என்சிஎல் (OBC-NCL)/இடபிள்யூஎஸ் (EWS) - ₹375, எஸ்சி (SC) /எஸ்டி (ST) / மூன்றாம் பாலினம் (Third gender) - ₹350
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு செப்டம்பர் 2009 முதல் திருவாரூரில் இருந்து செயல்பட்டு வருகிறது.
*தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூரில், வழங்கப்படும் இளங்கலைப் பட்டப் படிப்புகளின் விவரங்கள்:*
1. இளங்கலை அறிவியல் – *வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல்,கணிதம், இயற்பியல்*, (B.Sc Honours / Research) (பி.எஸ். சி ஆனர்ஸ் / ஆய்வு) - (4 ஆண்டுகள்)
2. இளங்கலை *பொருளாதாரம்* (B.A Honours / Research) (பி .ஏ. ஆனர்ஸ் / ஆய்வு) - (4 ஆண்டுகள்)
3. இளங்கலை - *இசை* (B.P.A Honours / Research) (பி பி ஏ. ஆனர்ஸ் / ஆய்வு) - (4 ஆண்டுகள்)
4. இளங்கலை - *ஜவுளி (பி.எஸ்சி.,) ஜவுளி தொழில் நுட்பவியல் (பி.எஸ்சி.,), ஜவுளி வணிகப் பகுப்பாய்வு (பி பி ஏ.) - (மூன்று ஆண்டுகள்)* (கோயம்புத்தூரில் உள்ள SVPISTM நிறுவனத்தில் வழங்கப்படுகிறது)
இந்த ஆண்டு முதல் புதிய மாற்றங்களின் படி, மாணவர்கள் 12-ம் வகுப்பில் எந்த பாடத்திலும் படித்திருந்தாலும், விரும்பிய பாடத்திற்கு தேர்வு எழுதலாம்,
*புதிய மாற்றங்கள்படி, 12-ம் வகுப்பில் படிக்கும் பாடப்பிரிவைதான் உயர்கல்வியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடத்தை தேர்வு செய்துகொள்ளலாம் என நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.*
அந்த வகையில், க்யூட் தேர்வில் 12-ம் வகுப்பில் பாடப்பிரிவிற்கு ஏற்ற பாடங்கள் என்று இல்லாமல், மாணவர்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து அதற்கான தகுதியான பாடங்களுக்கான தேர்வை எழுதலாம்.
உதாரணத்துக்கு ஒரு மாணவர் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவை எடுத்து படித்திருந்தாலும், பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டங்களில் வரலாறு படிக்க வேண்டும் என்றால் க்யூட் தேர்வில் அதற்கான தகுதி பாடங்களை தேர்வு செய்து தேர்வு எழுதினால் அவர் வரலாறு படிக்கலாம். அதேபோன்று 12 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் எடுத்து படித்திருந்து இளங்கலை அளவில் இயற்பியல் அல்லது வேதியல் அல்லது ஏதோ ஒன்று அறிவியல் பாடம் பிரிவு படிக்க விருப்பப்பட்டால் அதற்கான தகுதி பாடங்களை எடுத்து தேர்வு எழுதி விரும்பக்கூடிய பாடங்களை இளங்கலை பிரிவில் படிக்கலாம்
மேலும் விவரங்களை. https://cuet.nta.nic.in/ என்கிற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
The Ministry of Education (MoE), Government of India (GOI) has established the National Testing Agency (NTA) as an independent, autonomous, and self-sustained premier testing organization under the Societies Registration Act (1860) for conducting efficient, transparent and international standards te...