21/01/2024
மனைவிகளை தூக்கி கீழே போட்ட கணவர்கள் ..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் வித்தியாசமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இளவட்டக்கல் தூக்குதல், திராட்சையை வாயோடு வாய்வைத்து ஊட்டிவிடுதல், கோலப்போட்டி, போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் தங்களது மனைவிகளை கணவன்மார்கள் கையில் தூக்கிக்கொண்டு ஒரு முனையில் இருந்து மறு பக்கத்திற்கு தூக்கிடும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. இதில் மனைவிகளை தூக்கிக்கொண்டு ஓடியவர்கள் வரிசையாக பொத்தென்று கீழே விழுந்தனர். இது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதனை பார்த்த இணையவாசிகள் இதுதான் சரியான நேரம் என்று மனைவிகளை அவர்களது கணவன்கள் பழிவாங்கியுள்ளனர் என கூறி வருகின்றனர்.
Tiger Media Tiger Media