FlashNews madurai

FlashNews madurai மதுரையின் முகவரி
FlashNews at Madurai"©2020
First news port in madurai from 2015

22/10/2025

எங்க எல்லாம் மழை
சொல்லுங்க நண்பர்களே

22/10/2025

தீபாவளி பண்டிகையையொட்டி 111 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த 20 நாட்களில் இயக்கப்பட்ட ரயில் மூலம் 9 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை - மதுரை - திருநெல்வேலி - கன்னியாகுமரி, சென்னை - கோட்டயம், சென்னை - மங்களூர், சென்னை - ராமநாதபுரம், கொச்சுவேலி - பெங்களூரு, கொச்சுவேலி - மும்பை, கொச்சுவேலி - டெல்லி, விசாகப்பட்டினம் (ஆந்திரா), சான்ட்ராகாச்சி, ஷாலிமார் (மேற்கு வங்கம்), அம்பாலா கண்ட் (ஹரியானா), பரோணி, தண்பாத் (பீகார்) உள்ளிட்ட 20 முக்கிய வழித்தடங்கள் வழியாக 111 தீபாவளி சிறப்பு ரயில்கள் மூலம் 435 சுற்றுகள் இயக்கப்பட்டது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 85 ரயில்கள் 275 சுற்றுகளும், மற்ற மண்டல ரயில்வே சார்பில் 26 ரயில்கள் மூலம் 160 சுற்றுகள் இயக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் 9 கோடி பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து சென்னை கோட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கோட்டத்தில் மட்டும் 176 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இதில் 300க்கும் மேம்பாட்ட ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட்டனர். முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லா பயணிகளுக்கு தங்குமிடம், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டன. பயணிகளின் சந்தேகங்களை போக்கு வகையில் உதவி மையங்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4, எழும்பூர் ரயில் நிலையத்தில் 2, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4, பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஒன்று என 11 சிறப்பு டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. பணிகள் எடுத்து வரும் பொருட்களை எடுத்து செல்வதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். முக்கிய ரயில் நிலையங்களில் அவசரம் உதவிக்கு முதலுதவி மற்றும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பயணிகள் வசதிக்காக இன்று தாம்பரம் - காட்டாங்குளத்தூர் இடையே 6 புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

21/10/2025

🔴மதுரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. குறிப்பாக உசிலம்பட்டி, வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பல மணி நேரம் கனமழை பெய்தது. மதுரை மாநகரிலும் அவ்வப்போது பலத்த மழையும், பெரும்பாலான நேரங்களில் மிதமான மழையும் பதிவாகியது.

மழையால் கர்டர் பாலம், வைகை தரைப்பாலம், ரயில் நிலைய சாலை, தயிர் சந்தை, வெங்காயச் சந்தை, பெரியார் பேருந்து நிலையம், தல்லாகுளம், கோ.புதூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், கள்ளிக்குடி உள்ளிட்ட இரண்டு இடங்களில் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக, இவ்விபத்துகளில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பேரையூர் பகுதியில் சாலைகள் சேதமடைந்தன. கச்சைக்கட்டி பகுதியில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது; சில நிமிடங்களிலேயே மரம் அகற்றப்பட்டது.

மாநகரின் பல பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி மோட்டார் இயந்திரங்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கள்ளந்திரியில் 70 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான மழையின் காரணமாக, மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

21/10/2025

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரமாக பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வாடிப்பட்டியில் அதிகபட்சமாக 35 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிற பகுதிகளில் மழையளவு (மி.மீ.): ஆண்டிபட்டி – 31.2, சோழவந்தான் – 20, சிட்டம்பட்டி – 10.8, பேரையூர் – 9.8, சாத்தையார் அணை – 7, மேட்டுப்பட்டி – 3.2, மதுரை விமான நிலையம், மேலூர் – 2.4, மதுரை வடக்கு – 2.2, தல்லாகுளம் – 1.6, தனியாமங்கலம் – 1.5, இடையப்பட்டி – 1.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
“தெற்கு அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் அரபிக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழகம் அருகே நிலை கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும்,” என கூறியுள்ளது.

21/10/2025

🛑 பருவமழை காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்

வீட்டின் உள்புறச் சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது

நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான ஃபேன், லைட் போன்றவற்றை மின்சாரம் வந்தவுடன் இயக்கக் கூடாது

மின்கம்பங்கள், மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக் கிடக்கும் நீரில் செல்வதை தவிர்க்க வேண்டும்

மின் கம்பிகளில் கால்நடைகளை கட்டுவதோ துணிகளை உலர்த்துவதோ கூடாது

மின்தடை சம்பந்தமான புகார்களை 24 மணி நேரமும் செயல்படும் 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்

- மின் பகிர்மானக் கழகம்

21/10/2025

பண்டிகையையொட்டி சிவகாசியில் ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை: கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.1,000 கோடி அதிகம்

0பண்டிகையையொட்டி இந்தாண்டு சிவகாசியில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையானது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.1000 கோடி விற்பனை அதிகமாகும். இதனால், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம்க் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாடு முழுவதும் ஒன்றரை கோடி பேர் பட்டாசு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில், 95 சதவீதம் பட்டாசுகள் சிவகாசியில் உள்ள ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடக்கிறது. நடப்பாண்டை பொறுத்தவரை பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடைசி நேரத்தில் தொடர் மழை, சீதோஷ்ன நிலை, பட்டாசு ஆலை விபத்துகளால் உயிரிழப்பு, தொழிற்சாலைகளில் தொடர் ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் பட்டாசு உற்பத்தியில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது.

இருப்பினும் பட்டாசு விற்பனை அமோகமாக இருந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை சூடுபிடித்தது. நேற்று நாடு முழுவதும் பட்டாசு வெடித்து தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சிவகாசியில் இருந்து நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட பட்டாசுகளில் 95 சதவீதம் விற்பனையானதாகவும், நடப்பாண்டு டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியதால் உற்பத்தி, விற்பனை அதிகரித்து 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு வணிகம் நடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

21/10/2025

*வெள்ளி விலை ரூ.6 குறைந்து ஒரு கிராம் ரூ.182க்கு விற்பனை*

21/10/2025

ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை

சென்னை மண்டலத்தில் ரூ.158.25 கோடி, திருச்சி மண்டலம் ரூ.157.31 கோடி, சேலம் மண்டலம் ரூ.153.34 கோடி, மதுரை மண்டலம் ரூ.170.64 கோடி, கோவையில் ரூ.150.31 கோடிக்கு மது விற்பனை

21/10/2025

| "தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்!" - தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா பேட்டி

21/10/2025

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி அக். 18,19,20 ஆகிய 3 நாட்களில் ரூ.789 கோடிக்கு விற்பனை மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடியே 64 லட்சத்திற்கும் விற்பனை

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் அது ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடியாக அதிகரிக்கிறது. பண்டிகை காலங்களில் மது விற்பனை மேலும் 15 சதவீதம் உயருகிறது. கடந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை ரூ.438 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இலக்கையும் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதாவது, கடந்த 18-ந் தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்திற்கும், 19-ந் தேதி ரூ.293 கோடியே 73 லட்சத்திற்கும், நேற்று (தீபாவளி) ரூ.266 கோடியே 6 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது. மண்டலம் வாரியாக பார்க்கும்போது,

மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடியே 64 லட்சத்திற்கும் விற்பனை ஆகி யுள்ளது

21/10/2025

மதுவிற்பனையில் மதுரை 170.64 கோடி ரூபாய்

21/10/2025

🔴தீபாவளி பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை

நாடு முழுவதும் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு பட்டாசு விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது; 2026ல் பட்டாசு உற்பத்தி
அதிகரிக்கும் என்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை; டெல்லியில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த
நிலையில் ரூ.400 கோடிக்கு பட்டாசுகள் அனுப்பப்பட்டன.

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when FlashNews madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FlashNews madurai:

Share

FlashnEwsமதுரை

online news 24 *7

அனைத்து செய்திகளும் தகவலும் ஒரே இடத்தில்....இணையத்தின் மூலம் இணைந்திருங்கள்