Tamil News TV

Tamil News TV Latest Tamil TV News

அப்பா..அம்மா ஊர்ல இருந்து வராங்க..இந்த மாசம் கொஞ்சம்பட்ஜெட் எல்லாம் சேர்த்துப்போட்டுகூட வாங்கிக்கணும்..வேணாம்..அவங்க வரட...
24/04/2025

அப்பா..அம்மா ஊர்ல இருந்து வராங்க..

இந்த மாசம் கொஞ்சம்

பட்ஜெட் எல்லாம் சேர்த்துப்போட்டு

கூட வாங்கிக்கணும்..

வேணாம்..அவங்க வரட்டும்..

அப்புறம் வாங்கிக்கலாம்..

வந்தார்கள்..

ஒரு ரெண்டு மாசம்போல இருந்துவிட்டுப்போனார்கள்..

இவர்கள் வழக்கம்போல மாச செலவு பட்ஜட் போட உட்கார்ந்தார்கள்..

வழக்கத்தை விடவும் எந்த செலவுமே கூடியிருக்கவில்லை..

EB..பில் குறைந்திருந்தது..

மளிகை..பால்..காய்கறி எல்லாமே இவர்கள் இருவருக்காவதைவிட

நால்வருக்கும் சேர்த்து குறைவாகவே ஆகியிருந்தது..

சாயங்காலம் வழக்கமாகப்போகும் ஓட்டலுக்குப் போனார்கள்..

வாங்க சார் எங்க ரெண்டுமாசமா ஆளையே காணல..

இருவருக்குமே பொட்டிலடித்தது..

உண்மைதான்..

அம்மா..அப்பா இருந்த ரெண்டுமாசமும் அம்மா பாத்துப்பாத்து எல்லாருக்கும் பிடிச்சமாதிரி..சமைத்துக்கொடுத்தாள்

எதையும் அளவோடு செய்ததால்

எல்லாம் சாப்பிட்டபிறகும் எதுவும் மீந்துபோய் தொட்டியில் கொட்டவில்லை..

அப்பா பார்த்துப்பார்த்து ஆளில்லாத இடத்தில் லைட்டையும் பேனையும் டிவியையும் அணைத்துக்கொண்டே இருந்தார்..

பழங்கதை எங்களோடு பேச

குழந்தை உடன் கொஞ்சி விளையாட

என்று அவர்கள் இருந்ததில்

பொழுதை கழிக்க

சினிமா பூங்கா மால் போன்ற விசயங்கள் தேவைப்படாமல்

போனதில் பெரிய தொகை சேமிப்பு ஆனது

தக்காளி 140ஐத்தொட்டபோது

எலுமிச்சை ரசம் சாப்பிட்டார்கள்..

காய்கறிகளை அளவோடு தேவைக்கு அப்பா வாங்கியதில் அழுகல் வேஸ்ட் தவிர்க்க பட்டது

குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர அலுவலகத்தில் இருந்து பைக்கில் வந்து போகும் வேலை இல்லாமல் பெட்ரோல்_நேரம் இரண்டும் மிச்சமானது

கூட்டிக்கழித்து பார்க்க கணக்கு சரியாக தான் வந்தது.....
படித்ததில் ரசித்தது

இதனை புரிந்தால் பல குடும்பம் சிறந்து விளங்கும்

வெயிலில் நின்றால் தான் நிழலின் அருமை தெரியுமா?புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் உணவுக்காக பணம் செலுத்தி விருந்தினர்களாக வந்து...
22/04/2025

வெயிலில் நின்றால் தான் நிழலின் அருமை தெரியுமா?

புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் உணவுக்காக பணம் செலுத்தி விருந்தினர்களாக வந்து தங்கி வசிக்கும் வீட்டை நிர்வகித்து வருகிறார். இந்த வீடு அவரது மூதாதையர் வீடாகும். இந்த வீட்டில் பன்னிரண்டு பெரிய அறைகள் உள்ளது.

ஒவ்வொரு அறையிலும் 3 படுக்கைகள் உள்ளது. அங்கு தங்கியிருக்கும் அனைவருக்கும் அவர்கள் விரும்பும் வகையில் சுவையான உணவு வழங்கப்படுகிறது. உழைக்கும் மக்கள் மற்றும் மாணவர்கள் என பலதரப்பட்ட வர்கள் இந்த வீட்டில் தங்கி வசித்து வரும் இவர்கள்

அனைவருக்கும் காலை உணவும், இரவு உணவும், தேவைப்படுபவர்களுக்கு முழு மதிய உணவு சாப்பாடும் கொடுக்கப்படுகிறது.

ஆனால் இந்த வீட்டை நிர்வகித்து வரும் அந்தப் பெண் ஒரு விசித்திரமான விதியை நடைமுறைப்படுத்தி அதனை செயல்படுத்தி வருகிறார். அதாவது ஒவ்வொரு மாதமும் 28 நாட்கள் மட்டுமே அங்கு உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படும். இதன் காரணமாக எஞ்சியுள்ள 2-3 நாட்களுக்கு அங்கு தங்கியிருக்கும் அனைவரும் வெளியே சென்று தான் சாப்பிட வேண்டும். இந்த மூன்று நாட்களில் சமையலறையில் சமைக்க அனுமதி இல்லை.

சமையலறையும் 28 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். மீதமுள்ள நாட்கள் விடுமுறை!

இதை அறிந்த அந்த வீட்டில் தங்கி இருக்கும் ஒருவர் இது என்ன ஒரு விசித்திரமான விதி! உங்கள் சமையலறை ஏன் 28 நாட்கள் மட்டுமே திறந்திருக்கிறது என வினவினார்.

அதற்கு நிர்வாகம் செய்யும் அந்த பெண்மணியும் நாங்கள் 28 நாட்களுக்குத்தான் உணவுக்கான தொகையை மட்டுமே வசூலிக்கிறோம் என்கிறார்.

மீண்டும் அதே நபர் நீங்கள் ஏன் இந்த விதியை மாற்றக்கூடாது என்று கூறுகிறார்.

அதற்கு அந்த பெண்ணும் அதெல்லாம் மாற்றம் செய்ய முடியாது. விதி என்றால் விதி தான்... அதில் மாற்றம் செய்வதற்கு எதுவும் இல்லை என்று உறுதி பட தெரிவிக்கிறார்.

இந்த நிலைமையை அறிந்து கொண்ட அந்த நபர் நடைமுறையில் இருக்கும் 28 நாட்களின் விதியை நினைத்து எரிச்சலடைகிறார்.

அப்பொழுது தான் அந்த பெண் ஏன் இந்த 28 நாட்கள் விதி அமுல்படுத்தப்பட்டது என்பதற்கான காரணத்தை கூறுகிறார்.

"உனக்கு தெரியாது தம்பி, ஆரம்பத்துல இது போன்ற எந்த ஒரு விதியும் இல்லை. இங்கே தங்கி இருப்பவர்களுக்கு அன்பாக சமைத்து உணவு கொடுத்து வந்தேன். ஆனால் அவர்கள் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை...ஒவ்வொன்றிலும் குறைபட்டுக் கொண்டார்கள். சில சமயம் இந்தக் குறைபாடு, சில சமயம் அந்தக் குறைபாடு என எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.அவர்கள் திருப்தி அடையவில்லை.

அதன் காரணமாக ஏற்பட்ட விரக்தியில் தான், 28 நாட்கள் என்ற இந்த விதியை உருவாக்கினேன். 28 நாட்கள் இங்கே சாப்பிட்டுவிட்டு, மீதி 2-3 நாட்கள் வெளியே சாப்பிடும்போது தான் இதன் அருமையை அவர்கள் உணர்வார்கள் என்று கருதினேன். தரமான உணவு எது என்ற வித்தியாசத்தையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும் இல்லையா.

அது மட்டுமல்ல...இந்த 3 நாட்களுக்கு அவர்கள் உணவுக்காக செலவழிக்கும் தொகையையும் கண்டறிய முடியும். எவ்வளவு தொகை கூடுதலாக செலவாகிறது என்பதையும் தெரிந்து

கொள்ள முடியும் என்று கூறி முடித்தார்.

விதி தொடர்கிறது...

ஒரு பெண் பிகாஸோவை அணுகி தன்னுடைய படத்தை வரைந்து கொடுக்கச் சொன்னாள். பிகாஸோவும் வரைந்து கொடுத்தார். அவளுக்கு மிகவும் திரு...
21/04/2025

ஒரு பெண் பிகாஸோவை அணுகி தன்னுடைய படத்தை வரைந்து கொடுக்கச் சொன்னாள். பிகாஸோவும் வரைந்து கொடுத்தார். அவளுக்கு மிகவும் திருப்தி. அவள் இது மிகவும் அழகாக இருக்கிறது, ஆனால் ஒரு விஷயம். நீங்கள் என் கழுத்தை சுற்றி டைமண்ட் நெக்லஸ், விரலில் மிகப்பெரிய வைர மோதிரம், கைகளில் டைமண்ட் பிரஸ்லெட் ஆகியவற்றை வரைய மறந்து விட்டீர்கள். என்றாள்.

பிகாஸோ, ஆனால் நீங்கள் போட்டிருக்கவில்லையே என்று கேட்டார்.

அவள், அது விஷயமல்ல, எனக்கு கேன்சர், இன்னும் ஆறு மாதத்தில் நான் இறந்து விடுவேன். நான் இறந்தவுடன் என் கணவர் மறுமணம் செய்து கொள்வார் என்று எனக்குத் தெரியும். அவர், நீ இல்லாமல் என்னால் ஒரு நொடிகூட வாழ முடியாது என்று கூறினாலும்கூட அவர் நான் இறப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். பெண் இல்லாமல் அவரால் ஒரு கணம்கூட வாழ முடியாது என்று எனக்குத் தெரியும், ஆகவே உடனடியாக அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என்றாள்.

பிகாஸோ, நீ இப்போது கூறியதற்க்கும் டைமண்ட் நகைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை என்றார்.

அவள், உங்களுக்கு பெண் மனது புரியாது. நான் இறந்தபின் எனது கணவர் மணம் செய்து கொள்ளப் போகும் பெண் என்னுடைய சித்திரத்தை பார்ப்பாள். பின் அவள் அவரை எங்கே அந்த வைரங்கள் என்று வதைப்பாள். நான் இறந்தபின்னும் கூட என்னால் அவரை விட்டு இருக்க முடியாது. அவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். என்றாள்.

செத்தாலும் விட மாட்டோம்ல ! 😂

கடுகு டப்பாவில் பணம்நான் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை""  எனக்கு பாக்கெட் மணியாக 25 பைசா மட்டும்தான்.. ஆறா...
20/04/2025

கடுகு டப்பாவில் பணம்

நான் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை"" எனக்கு பாக்கெட் மணியாக 25 பைசா மட்டும்தான்..
ஆறாம் வகுப்பு போன பிறகு பாக்கெட் மணியாக 50 பைசா..

இந்த 50 பைசாவுக்கு என்ன வாங்க முடியும் என்று கேட்டால்? ஒரே ஒரு வெள்ளரிக்காய் மட்டும்தான் அந்த வெள்ளரிக்கையில் உப்பு வைத்து மிளகாய் பொடி போட்டு தருவார்கள் அதை வாங்கி சாப்பிட்டு கொண்டு போவோம்...

ஒரு நாள் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு சீக்கிரமாக போய்விட்டார்கள் எனக்கு 50 பைசா கொடுக்கவில்லை.
அம்மா கடுகு டப்பாவில் ஒளித்து வைத்திருந்த ஐம்பது பைசாவை எடுத்துக் கொண்டு போனேன்...

ஆனால் இன்று ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் 50 ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கு பாக்கெட் மணியாக...

நமக்கு ஸ்கூல் பேக் எல்லாம் கிடையாது'' துணி கடையில் கொடுக்கும் மஞ்சள் பைய்தான் நமக்கு...

இப்ப என்னடான்னா பேக் லேசா கிழிஞ்சா போதும் உடனே எப்பா எனக்கு பேக் வேணும் அப்படின்னு கேட்கிறது குழந்தை..

நமக்கு மதிய உணவு பள்ளிக்கூடத்தில் தான்.. காலையில போகும்போது வீட்டில் இருந்து பிளேட் எடுத்துட்டு போயிடுவோம்... அதுவும் அந்த மஞ்சப்பை குள்ள வைத்துக் கொண்டு போவோம் .... இல்லையென்றால் முதுவுக்கு பின்னால் சட்டைக்குள் பிளேட்டை போட்டு போவோம்'' இப்ப உள்ள குழந்தைகளுக்கு லஞ்ச் பேக் லஞ்ச் பாக்ஸ் தனியா...

ஒரு நாளைக்கு வீட்டில் இருந்து பிளேட் எடுத்துப் போகவில்லை என்றால்
பள்ளிக்கூடத்தில் அண்டா மூடியில் வைத்து ஐந்து பேர் ஆறு பேர் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவோம்.. சாப்பிடும் போது அவ்வளவு ஒரு சந்தோஷமாக இருக்கும்....

படிப்பும் கம்மி தான் செலவும் கம்மி தான் ஆனால் அந்த வாழ்க்கையில சந்தோஷமாக இருந்தது...

20/04/2025
20/04/2025

ஒரு ஊடகவியலாளர் படம் எடுக்க சென்றுள்ளார், அவர் பசியுடன் இருப்பதாக நினைத்து, தன்னிடமுள்ள மிகச்சொற்ப உணவை, ஊடகவியலாளருக்கு...
20/04/2025

ஒரு ஊடகவியலாளர் படம் எடுக்க சென்றுள்ளார், அவர் பசியுடன் இருப்பதாக நினைத்து, தன்னிடமுள்ள மிகச்சொற்ப உணவை, ஊடகவியலாளருக்கு நீட்டுகிறது இந்தக் குழந்தை. மனிதநேயத்தின் பெறுமதியை விளக்கும் மிக அழகான புகைப்படம் இது.

20/04/2025

Address

Tallakulam
Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Tamil News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category